Daily Archive: January 21, 2017

மதுரை நிகழ்ச்சி ரத்து
மதுரையில் 23 அன்று நான் பேசுவதாக இருந்த நிகழ்ச்சி ஜல்லிக்கட்டு போராட்டம், ரயில்கள் நிறுத்தப்பட்டமை காரணமாக ரத்துசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருவதாகச் சொன்ன நண்பர்கள் தவிர்த்துவிடலாம். நன்றி
Permanent link to this article: https://www.jeyamohan.in/94782

அரவிந்தன் பதில்
  இல்லாத கறையான்களும் இலக்கிய நச்சுப் பொய்கையும் அன்புள்ள ஜெயமோகன் வணக்கம். தி இந்து தமிழ் நாளிதழின் இலக்கியப் பக்கங்கள் பற்றிச் சில விமர்சனங்களை (?) முன்வைத்திருக்கிறீகள். உள்நோக்கம் கொண்ட கருத்துக்கள், அவதூறுகள், வெறுப்பைத் தாங்கிய சொற்கள் ஆகியவற்றுக்குப் பதில் சொல்வதில் எனக்கு நம்பிக்கையோ விருப்பமோ இல்லை. என்னுடைய செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனித்துவருபவர்களுக்கு என்னைப் பற்றிய உங்கள் கருத்துக்களின் பெறுமானம் என்ன என்பது நன்கு தெரியும். எனவே உங்கள் கருத்துக்கள் அனைத்திற்கும் நான் பதில் சொல்ல வேண்டியதில்லை. …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/94776

ஒரு மலைக்கிராமம்
டிசம்பர்  [2008] ஐந்தாம் தேதி காலை ஈரோட்டிலிருந்து கிளம்பி ராசிபுரம் நோக்கி பயணம். ஒரு மாருதிவேனில் நான் விஜயராகவன், கிருஷ்ணன், சிவா, தங்கமணி, பிரபு ஆகியோர் நண்பர் அசோக்குடன் அவரது சித்தப்பா வாழ்ந்த கிராமத்துக்குக் கிளம்பினோம். ராசிபுரத்திலேயே லட்சுமி கபேயில் சாப்பிட்டுவிட்டு ராசிபுரத்தை தாண்டி பட்டணம் என்ற ஊருக்கு வந்து அங்கிருந்தும் சென்று மதியம்தாண்டி அந்தக்கிராமத்துக்குச் சென்றோம். போதமலை என்று கிராமத்துக்குப் பெயர். போதமலை கிராமத்தை ஒட்டி செங்குத்தாக உயர்ந்து நிற்கும் மலை. மலையின் உடலெங்கும் பச்சை …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/923

ஜல்லிக்கட்டு தடை -எதிர்வினைகள்
  நண்பர்களே ,    2 ஆண்டுகளுக்கு முன் வந்த தீர்ப்பு மற்றும் அதையொட்டிய பதிவு .   தற்போது தமிழகத்தில் நிகழ்வது ஒரு பேரெழுச்சி, இந்த அளவில் முன்னெப்போதும் இருத்திராதது. இது ஒரு குறிப்பிட்ட அமைப்பினாலோ தலைமையாலோ ஒருங்கிணைக்கப் படுவதில்லை, வழிநடத்தவும் படுவதில்லை. அதேபோல ஒரு பயன்பாட்டு நோக்கை முன்னிறுத்தியதும் அல்ல, ஒரு கலாச்சார அடையாளத்தை முன்னிறுத்தி ஒரு ஒருங்கிணைவு. இந்த வகையில் இது இந்தியாவுக்கே முன் மாதிரி. இறுதியில் தான் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை இத்துடன் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/94739

குறளுரை கடிதங்கள் 3
  ஆசிரியருக்கு, அருமையான உரை. குறளின் வரலாற்று பார்வை அறிமுகம், குறள் தமிழில் பொருந்துமிடம், இந்திய தத்துவ புலத்தில் பொருந்திய இடம், சமணர்களின் பங்கு பற்றியெல்லாம் தெரிந்து கொண்டேன். அரசு, குடும்பம் பற்றியெல்லாம் மிக நன்றாக இருந்தது. மணிமேகலை முன் எழுந்த தெய்வம் மணிமேகலை, கல்வி பற்றி பேசியதெல்லாம் சிறப்பாக இருந்தன. மிக்க நன்றி. அன்புடன் நிர்மல் *** அன்புள்ள ஜெ குறள் உரை மிக நீளமானது கிட்டத்தட்ட ஐந்தரை மணிநேரம். ஆகவே தொகுத்துக்கொள்வது மிகக் கடினமானது. …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/94697

மோட்டார் சைக்கிள் பயணம்
  அன்பின் ஜெ   எனக்கு வாசிப்பு அனுபவம் என்பது பெரிய அளவில் இல்லை என்றபோதும் ஒருசில சமயங்களில் இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமெனில் நேரம் போகாது இருக்கும் சமயங்களில் உங்களது வலைதளத்திற்கு வந்து நீங்கள் எழுதியிருக்கும் பத்தியோ அலது சிறுகதைகளையோ படிப்பேன். எனக்கு பயணிப்பது என்பது மிகவும் விருப்பமானது. எந்தளவிற்கு என்றால் என்னை ஒரு ஆண் என்றோ இன்ன ஜாதி அலது இன்ன மதத்தைச் சேர்ந்தவன் என்றோ என்னை அறிமுகப்படுத்திக் கொள்வதை விடவும் என்னை ஒரு travellorராக …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/94644