Daily Archive: January 17, 2017

வானதி- அஞ்சலிகள்

அன்புடன் ஆசிரியருக்கு மீண்டும் வெய்யோன் படித்துக் கொண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட வெய்யோன் நிறைவுற்ற போது தான் வானவன் மாதவி இயலிசை வல்லபி ஆகியோரைப் பற்றி தளத்தில் ஒரு பதிவினைப் பார்த்தேன். அமைதியின்மையையும் உத்வேகத்தையும் அளிப்பதாக இருந்தது அவர்களின் பணி. சில நாட்களுக்கு முன் வெய்யோன் குறித்து பிரபுவிடம் உரையாடிய போது பேச்சு இயல்பாகவே அந்த சகோதரிகளை நோக்கிச் சென்றது. நேற்று முன்தினம் மூத்த சகோதரியின் இறப்பு குறித்த செய்தி மிக மிகத் தனிமையான ஒரு துயரை அளித்தது. பகிர்ந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/94538

மேடையில் நான்

  ஒருவழியாக திருக்குறள் உரைத்தொடர் முடிந்தது. கடைசிவரியைச் சொல்லிவிட்டு மேடைவிட்டு இறங்கியதும் எழுந்தது மிகப்பெரிய ஆறுதல், விடுதலை உணர்ச்சி. எனக்கு எப்போதுமே மேடைக்கலைஞர்கள் மேல் பெரிய வியப்பும் கொஞ்சம் பொறாமையும் உண்டு. மேடைமேல் எழுந்து நின்று அங்கேயே தன்னை மறந்து வெளிப்படுவதென்பது ஓர் அருள். எழுதும்போது மட்டுமே நான் அதை உணர்கிறேன். நல்ல மேடைப்பேச்சாளர்கள், நடிகர்கள், பாடகர்கள் மேடையாலேயே தூண்டப்படுகிறார்கள். மேடையிலேயே ஆளுமை முழுமை கொள்கிறார்கள் என் மூன்று உரைகளையுமே அற்புதமானவை, ஆழமானவை, செறிவானவை, கவித்துவமனாவை என …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/94527

மிருகவதை என்னும் போலித்தனம்

  அன்பு ஜெ, கொஞ்சம் ஜல்லிகட்டை ஒரு புறம் ஒதுக்கி விட்டு சிறிது நேரம் மிருகவதை என்பது தற்காலத்தில் உலகம் முழுதும் எவ்வாறு எதிர்கொள்ளப் படுகிறது எப்படி புரிந்து கொள்ளப் படுகிறது என்று பார்த்தால் சுவாரசியமாக இருக்கும். மிக முன்னேறிய நாடுகளில் ஒன்றான ஜப்பான், திமிங்கலங்களை வேட்டையாடும் விஷயத்தில் உலக நாடுகள் அனைத்தையுமே பகைத்துக்கொண்டுள்ளது. அருகிவரும் உயிரினமான திமிங்கலத்தை ஜப்பான் “அறிவியல் ஆராய்ச்சி” என்ற போர்வையில் நூற்றுக்கணக்காக கொன்று குவித்து வருகிறது. ஜப்பானியர்களுக்கு மீன் உணவில் மிக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/94530

வெண்கடல் – விமர்சனங்கள்

  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, தங்களது ‘வெண்கடல்’ சிறுகதைத் தொகுப்பினை சில நாட்கள் முன்புதான் படித்து முடித்தேன். ‘கைதிகள்’ அப்பு போலீசால் கொன்று புதைக்கப்படுவது ஒருவித பதைபதைப்பை ஏற்படுத்தியது அதே சமயம், சாகும் போதும் அவனது சிரிப்பும் நடத்தையும், உறுதியும், போலீஸ் தரப்பிற்கு எந்த வகையிலும் குறைவில்லாத கொடூரம் அவனது இயக்கத்தின் தரப்பிலும் உள்ளது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. மரணத்தை சிரிப்புடன் ஏற்க ஒன்று ஞானியாக இருக்க வேண்டும் அல்லது ஆழமான கொள்கை வெறியனாக இருக்கவேண்டும் என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/94505

செ(ஜ)ய மோகா… நிறுத்து! உன் வசைஎழுத்தை!!!!

எங்கள் மக்கள் கவிஞன் இன்குலாப்பை இழிவுபடுத்தி வசைபாடும் செயமோகனே! நீயார்?அவரது மேன்மையை உரசிப் பார்க்க.***எங்கள் மண்ணின் பாவலன் இன்குலாப் ஒடுக்கப்பட்டவர்களின் நண்பன் இன்குலாப் சேரியில் ஒதுக்கப்பட்ட மக்களின் தோழன் இன்குலாப். *** ஆமாம் செயமோகா…. உனக்கும் அவருக்கும் என்ன பகை? உனது “விசுணுபுர”த்து மக்களுக்காக எங்கள் பாவலன் பாடவேண்டுமா? அல்லது நீ “வெண்கொற்றம்” புடிக்கும் காவிக் கூட்டத்திற்கும் சாதிவெறிபிடித்த சனாதனிகளுக்கும் மேட்டிமை நிறைந்த உனது தொண்டரடிப் பொடியாகளுக்கும் வெண்சாமரம் வீசவேண்டுமா? எங்கள் கவிஞரிடம் என்ன எதிர்பார்ப்பு உனக்கு? …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/94409