Daily Archive: January 14, 2017

ஜல்லிக்கட்டு பற்றி…

அன்புள்ள ஜெயமோகன், ஜல்லிக்கட்டு தடைப் பற்றி எதாவது ஒரு கடிதம் மற்றும் அதற்கான பதில் உங்கள் தளத்தில் வருமென்று எதிர்பார்த்தேன். ஜல்லிக்கட்டு தடைப் பற்றி உங்கள் கருத்தினை அறிய ஆவல். பண்பாடு என்ற பெயரில் பிராணிகளை துன்புறுத்துவது அனுமதிக்க முடியாது என்ற உச்ச நீதிமன்றத்தின் கருத்தினை எவ்வாறு அணுகுகிறீர்கள்? அன்புள்ள, பாலாஜி பெங்களூர் * அன்புள்ள பாலாஜி, முன்பு இதேபோன்ற ஒரு ’வலை’யில் சிக்கிய அனுபவம் எனக்குண்டு. கோயில்களில் யானைகளை பயன்படுத்துவதைத் தடுக்கவேண்டும் என குரல்கொடுக்கும் ஓர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/94452

ஜல்லிக்கட்டுத்தடை- ஒரு பேட்டி

ஜெ, ஜல்லிக்கட்டு பிரச்சினை குறித்து எண்ணும்போதெல்லாம் அது வெறும் சாதிப்பெருமைக்காக நடத்தப்படுவது, தலித்களை இதுவரை அண்டவிடாதது அழியட்டுமே, என்ன இப்ப என்ற மனநிலையில் இருந்தேன். காங்கயம் கார்திகேயன் சிவசேனாதிபதி முகம் இந்த போராட்டங்களில் தென்படத்துவங்கியபோது கவனிக்கத் துவங்கினேன். காங்கயத்தில் நாட்டுமாடுகளை பாதுகாக்கும் அமைப்பை, விதை நெல் போல அதன் விந்தணுக்களை சேகரிக்கும், வழங்கும் அமைப்பை நடத்துபவர். (தனிப்பட்டமுறையில் தெரிந்த மிக நேர்மையானவர் என்பதும் நம் வாசக நண்பர் பிரபாகரன் அவர்களின் நண்பர் என்பதுவும் கூடுதல் காரணங்கள்) விவசாயிகளுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/94448

தாள்பணம் இல்லா பொருளியல் -கடிதங்கள் 2

  பெருமதிப்பிற்குரிய ஜெமோ. அவர்களுக்கு, வணக்கம். ‘மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள்’ என்ற கட்டுரையில் 20.09.2016 அன்று இவ்வாறு குமுறியிருந்தீர்கள் இந்திய வரலாற்றில் எப்போதும் அறியப்பட்ட அரசியல்கட்சித் தலைவர்கள் கள்ளப்பணத்திற்கு ஆதரவாக இப்படி வெளிப்படையாகக் களமிறங்கியதில்லை. இப்படி அதை ஆதரித்து இத்தனை பொருளியலாளர்கள் பேசியதில்லை. அறிவுஜீவிகள் அதன் பொருட்டு கண்ணீர் மல்கியதில்லை. இடதுசாரிகள் கள்ளப்பணத்தைக் காப்பதற்காக பிரச்சார மோசடிகளில் ஈடுபடும் ஒரு காலத்தை நாம் கண்ணெதிரில் கண்டுகொண்டிருக்கிறோம் இதற்காக நீங்கள் எவ்வளவு தூரம் வசைகளுக்கு ஆளாக நேர்ந்தது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/94396

வைக்கம் விஜயலட்சுமியின் பார்வை

  இன்று வாசித்த ஒரு செய்தி மகிழ்ச்சியை அளித்தது. பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு சிகிழ்ச்சைக்குப்பின் பார்வை திரும்பியிருக்கிறது. கமல் இயக்கிய செல்லுலாய்ட் என்னும் படத்தில் பாடிய காற்றே காற்றே என்னும் பாடல் வழியாக கேரளம் முழுக்கப் பிரபலமானவர் இவர். பிறவியிலேயே பார்வையில்லாதவரான விஜயலட்சுமி மரபிசையை முறையாகக் கற்றவர். அபூர்வமான வாத்தியமாகிய காயத்ரிவீணையை வாசிக்கும் கலைஞர். நாநூறுக்கும் மேல் இசைநிகழ்ச்சிகளை செய்திருக்கிறார்   மலையாள மனோரமா செய்தி   காற்றே காற்றே

Permanent link to this article: https://www.jeyamohan.in/94480