Daily Archive: January 9, 2017

நடைதிறப்பு
இந்தியாவைப்பார்க்கும்பொருட்டு நாங்கள் கிளம்பியது 2008 செப்டெம்பரில். நண்பர் கிருஷ்ணன் பின்னர் சொன்னார், அந்தப்பயணத்தின் மிகப்புத்திசாலித்தனமான அம்சம் என்னவென்றால் அதற்கு இந்தியப்பயணம் என்று பெயரிட்டதுதான் என. நாங்கள் சென்றது ஈரோட்டிலிருந்து ஆந்திரம் வழியாக மத்யப்பிரதேசத்தைக் கடந்து காசிவரை. அப்படியே கயா வழியாக ஒரிசாவுக்குள் நுழைந்து விசாகப்பட்டினம் வந்து சென்னை வந்தோம். அதை இந்தியா என நம்பிக்கொண்டமை எங்களுக்கு மிகப்பெரிய மன எழுச்சியை அளித்தது. அந்த உத்வேகமே அப்பயணத்தை இன்றைக்கும் மறக்கமுடியாத அனுபவமாக ஆக்குகிறது. பின்னர் பலபயணங்கள். அதைவிடப்பெரிய பயணமாக …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/93739

ஏழாம் உலகின் இருள்
ஜெ   முதல் முறை படிக்க வேண்டுமென்ற வேட்கையில் வாசித்ததினால் இந்நாவல் தொட்டுக் காட்டிய வலியையோ குரூரத்தையோ கீழ்மையையோ நான் முற்றாகக்கவனித்திருக்கவில்லை. அதனால்,மீண்டும் நூலகம் சென்று எடுத்து வந்து ஒரு வாரத்தில் வாசித்து முடித்தேன். முதலில் என்னைக் கவர்ந்தது அந்த வட்டார மொழி.அதன் ஓசை நயம். சில நாள்களுக்கு விளையாட்டாக பேசினாலும்,திட்டினாலும் அம்மொழியின் சிலசொற்கள் நாவில் ஊறும்.(சவிட்டிப் போடுவம் பாத்துக்க)இம்மாதிரி. அடுத்து அதன் சித்தரிப்பு.நிஜ உலகிற்கு நிகரான அதன் புனைவு.நடுங்க வைப்பது.குறைபட்ட  உடல்கள் கொண்ட மனிதர்கள்,சிறிய ஆத்மாக்கள்.விலங்குகளைப்போல.வளர்ப்புப் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/94226

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 82
[ 37 ] கைலைமலைத் தாழ்வரையில் உச்சிவெயில் எழுந்ததுமே பொழுது இறங்கத்தொடங்கிவிட்டது. பறவைகளின் ஒலிகள் சுதிமாறி, காற்றில் குளிர் கலந்தது. கதிர் சரிந்துகொண்டிருக்கும்போதே வேட்டைவிளைகளுடன் காலர்கள் வரலாயினர்.  மான்கள், பன்றிகள், காட்டுஆடுகள், மிளாக்கள் குருதியுறைந்து விழிவெறித்து நாசரிய வாய்திறந்து மூங்கில்கழிகளில் தொங்கியபடி வந்தன. பெண்கள் கிழங்குகளையும் காய்களையும் கனிகளையும் கொண்டுவந்து நிரத்தினர். அனைத்து உணவும் மன்றிலேயே கொண்டு சேர்க்கப்பட்டன. மூத்தோர் மூவரும் அங்கே இருந்து ஆணைகொடுக்க அடுமடையர்கள் பன்னிருவர் வந்து தாங்கள் கைத்தேர்ச்சிகொண்டிருந்த செம்புக்கத்திகளால் விலங்குகளின் தோலில் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/94323