Daily Archive: January 4, 2017

மழையில் நிற்பது….

மொழிவாரி மாநிலப் பிரிவினையின்போது தமிழகத்தில் அடிபட்ட பெயர்களில் ஒன்று பீர்மேடு. காமராஜர் குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைய வேண்டுமென்று விரும்பினார். ஆகவே தேவிகுளம் பீர்மேடு ஆகிய மலைப்பகுதிகளையும் பாலக்காட்டையும் கேரளாவுக்கு விட்டுக் கொடுத்தார். குமரிமாவட்டத்திலுள்ள மூன்று பெரிய அணைகளும், ஐந்து சிறிய அணைகளும், தமிழகத்தின் மீன் வளத்தில் மூன்றில் ஒரு பகுதியை அளிக்கும் கடற்கரையும் தமிழகத்துடன் வந்தாகவேண்டுமென்பதில் காமராஜர் குறியாக இருந்தார். ஆகவே எவ்வகையிலும் அது ஒரு லாபகரமான நடவடிக்கைதான் பீர்மேடு தமிழகத்தின் முதன்மையான முக்கியமான சூஃபி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/93917

சூரியனுக்கே சென்ற தமிழன்!!!!!!!!!

மாலைநேரத்தில் நகைச்சுவைப் பதிவுகளைப்பார்த்துவிட்டுத் தூங்குவது என் வழக்கம். சமீபத்தில் பார்த்த உச்சகட்ட நகைச்சுவை இது. இதற்கு எத்தனை பார்வையாளர்கள். இதற்கு ஒரு எதிர்வினை, அதுதான் கிளாஸிக்! இப்பாடலில், பெரும்பாலான நூல்கள் சொல்லும் தமிழன் தான் அறிவியலின் முன்னோடி என்றகருத்தை தாங்கள் எவ்வித முரண்பாடுமின்றி ஏற்றுக்கொள்ளக்கின்றீர்கள்.ஆனால் அவர்கள் சொல்லும் அந்த சக்கரம்,வானூர்தி போன்றவையெல்லாம் இல்லையே,?என்பது தான் உங்களுடைய கருத்தாகும் . உங்களின் சந்ததேக்கத்திற்கு என்னுடைய பதில் அவையெல்லாம் பல்லாாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததால் தான் புலவர்கள் அதை பற்றி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/93408

கன்றுகள் காடாகவேண்டும்!

  அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். நலம். நலம் விழைக பிரார்த்திக்கின்றேன். இன்று மார்கழி 2, ஒரு வித திருப்தியுடன் எந்த வகையில் என்று தெரியவில்லை ஆனால் எண்ணிக்கொள்ளும்படியான நிறைவு இந்த கடிதம் எழுதிகிறேன். கார்த்திகை மாத மூன்றாம் வாரத்தில் தோட்டப் பணி தொடங்கி கார்த்திகை 24 அன்று செடி நடவு தொடங்கி அன்றே இனிதே நிறைவேறியது. அனைத்தும் மரப்பயிர் 30 வகையான மரங்கள், மரங்கள் என்பதை கடந்து புளி, புன்ணை, கொடுக்காப்புளி, கொய்யா, பலா, தான்றிகாய் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/93445

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 77

[ 28 ] அர்ஜுனன் விழித்துக்கொண்டபோது கல்லால் ஆன சிற்றறைக்குள் வெம்மைமிக்க தசையென அணைத்திருந்த மென்மயிர்ப் போர்வைக்குள் இருந்தான். உள்ளே எரிந்த கனலின் ஒளியில் அச்சிற்றறை செங்குருதி என ஒளி நிறைந்திருந்தது. கைகளை ஊன்றி எழமுயன்றபோதுதான் உடலில் ஆழ்ந்த வலியை உணர்ந்தான். முனகியபடி படுத்துக்கொண்டபோது விழிகளுக்குள் அலையலையாக குருதியின் ஓட்டத்தை கண்டான். கீழே விழுந்துகொண்டே இருப்பதைப்போல் உணர்ந்தான். அவன் படுத்திருந்த மென்மயிர்ப் படுக்கை அலைபாயும் நீர்ப்பரப்பெனத் தோன்றியது. அவனுடைய முனகலை அவனே கேட்டான். மெல்ல எழுந்து அவனருகே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/94198