Daily Archive: January 2, 2017

யாரோ சிலர்!
  ஜெ, துக்ளக்கில் வண்ணநிலவன் எழுதியது இது.. வண்ணதாசன் பல விருதுகளைப் பெற்றவர்.. இவ்வாண்டு கோவையை சேர்ந்த யாரோ சிலர் நடத்தும் விஷ்ணுபுரம் எனும் அமைப்பின் விருது கிடைத்தது உங்களைப்பற்றி அவரிடம் எடுத்துச் சொல்ல நான் சென்னை செல்லலாம் என நினைக்கிறேன் ஜெயராமன் * அன்புள்ள ஜெயராமன், இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பு நான் ஒரு விமர்சனக்குறிப்பு எழுதினேன். வண்ணநிலவன் கதைகள் சுந்தர ராமசாமி உட்பட பிராமணர்களால் சில குறிப்பிட்ட பிராமணக் கதாபாத்திரச் சித்தரிப்பு காரணமாக கொண்டாடப்பட்டவையே ஒழிய கணிசமான …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/94213

ஆசிரியனின் பீடம்
ஜெயமோகன் சார், இந்தக் கடிதத்தை எழுத முக்கியக் காரணம் மிகுந்த மன உளைச்சல் தான் என்பதை முன்பே நான் சொல்லிவிடுகிறேன். கட்சிகள் மத்தியில் அரசியல் நடந்தால் அதை பொருட்படுத்தவே மாட்டேன். அது அவர்களுடைய இயல்பு. அரசியல் அவர்களுக்கு அவசியம். நல்லவர் கெட்டவர் என்ற பாகுபாடு தேவையே இல்லை. நான் நம்பிக்கை வைத்திருக்கும் முக்கியமான தரப்பினர் படைப்பாளிகளும், பேராசிரியர்களும் தான். அதற்கும் இப்போது ஆபத்து வந்து விட்டது. இவர்கள் சந்திக்காமல் இருந்தாலே போதும். அப்படித்தான் இதுவரை இருந்து வந்துள்ளனர். …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/93790

தாள்பணம் இல்லா பொருளியல் -கடிதங்கள்
இனிய ஜேயெம் (சீனுவை சந்தித்தேன் அல்லவா :) பாலாவின் அக்கறை கொண்ட நல்ல கட்டுரையை வாசித்தேன் , சில மாற்றுக்கள் மட்டும் , இந்திய அரசு ஆதார் வழி பணமில்லா பிளாஸ்டிக் கரன்சியை கொண்டுவந்துள்ளது , இறுதிப் பயனாளர்கள் பைசா செலவின்றி இணையம் இன்றி பணம் செலுத்த பெற அரசே வழி வகுத்துள்ளது , பக்கத்தில் உள்ள நாடார் கடைக்கு போகிறீர்கள் ,அவர் தன் சொல்போனில் 500-1000 ரூபாய் மதிப்புள்ள கைரேகை ஸ்கேனரை இணைத்துள்ளார் ,16 ரூபாய்க்கு …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/93937

என் சிறுகதைகள் ஒலிவடிவாக
என் சிறுகதைகளை ஒலிக்கோப்புகளாக வாசித்து யூடிய்யுபில் ஏற்றியிருக்கிறார் கிராமத்தான் என்னும் வாசகர். ஆர்வமுள்ள நண்பர்களுக்காக   சோற்றுக்கணக்கு   கோட்டி   ஓலைச்சிலுவை ஊமைச்செந்நாய் உலகம் யாவையும்     தாயார் பாதம் யானைடாக்டர்     பெருவலி மத்துறு தயிர்  
Permanent link to this article: https://www.jeyamohan.in/93637

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 75
[ 24 ] காலையில் பார்வதி அர்ஜுனனைத் தொட்டு “புலர்கிறது, இங்கு மிக முன்னதாகவே காலையொளி எழுந்துவிடும்” என்றாள். அவன் திடுக்கிட்டு விழித்தெழுந்து உடல்நடுங்க காய்ச்சல் படர்ந்த விழிகளால் அவளை நோக்கினான். “என்ன?” என்றாள். “இல்லை” என அவன் தலையசைத்தான். அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. “என்ன?” என அவள் மீண்டும் கேட்டாள். அவன் தலையை அசைத்தபடி எழுந்து அமர்ந்தான். “கனவில் இருந்தீர்களா?” அவன் ஆம் என தலையை அசைத்தான். “என்ன கனவு?” என்றாள். அவன் தலையை அசைத்தபடி …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/94152