அன்புடன் ஆசிரியருக்கு இந்த வருடத்தை உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்லியபடியே தான் தொடங்கினேன். 2014 டிசம்பரில் முதற்கனல் வாசித்தேன். இந்த மூன்று டிசம்பர்களுக்கு இடையில் நான் வாசித்தவற்றை எண்ணிக் கொள்கிறேன். அதிலும் உங்களுடன் முறையான உரையாடல் தொடங்கியது கீதை உரையை கேட்ட பின்னே என்பதே ஒரு வித பெருமிதத்துடன் என்னால் உணர முடிகிறது. அதன் பிறகு வெய்யோன். வெண்முரசு நாவல் வரிசையில் எழுச்சியும் கொந்தளிப்புமாக வெகு அணுக்கமாக உணர்ந்த நாவல் வெய்யோன். அதன் பிறகு …
Daily Archive: January 1, 2017
Permanent link to this article: https://www.jeyamohan.in/94112
ஊட்டி நாராயணகுருகுலம்- ஓரு விண்ணப்பம்
ஊட்டி நாராயணகுருகுலத்தை நண்பர்கள் அறிந்திருப்பீர்கள். நித்ய சைதன்ய யதி இருந்த இடம். இப்போது சுவாமி வியாசப்பிரசாத் அவர்களால் பராமரிக்கப்படுகிறது.ஆண்டுதோறும் அங்குதான் குருநித்யா காவிய முகாம் நிகழ்கிறது. இவ்வாண்டும் ஏப்ரலில் நிகழ்த்துவதாக இருக்கிறோம். குருகுலம் முழுக்கமுழுக்க அறிவார்ந்த தத்துவவிவாதங்கள் மட்டுமே நிகழும் இடம்.பக்திமுறைகள்,மதச்சடங்குகள் ஏதுமில்லை. ஆகவே அதிக வருகையாளர்கள் இப்போது இல்லை. ஆனால் நிறைய கட்டிடங்கள் இருப்பதனால் பராமரிப்பு சற்று கடினம் குருகுலத்தைச் சுற்றி உயிர்வேலிதான் இருந்தது. ஆனால் சமீபமாக காட்டெருதுக்கள் உள்ளே வருகின்றன. நண்பர்கள் பலர் அவற்றைப் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/94035
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 74
[ 22 ] பன்னிருநாட்கள் அர்ஜுனன் கின்னரஜன்யர்களின் மலைச்சிற்றூர்களில் தங்கினான். அவன் காவலனாக அமைந்த வணிகக்குழு ஏழாகப் பிரிந்து ஏழு அங்காடிகளுக்கும் சென்றது. கின்னரர் கொண்டுவந்து அளித்துவிட்டுப்போன அருமணிகளில் சிறந்தவற்றை தாங்களே கொள்ளவேண்டுமென்ற போட்டி வணிகர்களிடையே இருந்தது. ஆகவே அவர்கள் கிளைகளாகப் பிரிந்து அத்தனை அங்காடிகளையும் நிறைத்துக்கொண்டனர். அத்தனை அங்காடிகளிலிருந்தும் கிளம்பிவந்து ஓரிடத்தில் சந்தித்து செய்தி மாற்றிக்கொண்டனர். கின்னரஜன்யர்களுக்கு அவற்றின் இயல்போ மதிப்போ தெரிந்திருக்கவில்லை. ஒளிவிடும் கற்கள் அனைத்தையும் அவர்கள் கொண்டுவந்து நீட்டினர். அவற்றில் பெரும்பான்மையும் எளிய …
Permanent link to this article: https://www.jeyamohan.in/94124