Monthly Archive: January 2017

பயணக்கட்டுரை
[நகைச்சுவை]   பயணம்சென்ற அல்லது செல்லாத ஒருவர் அப்பயணத்தில் நிகழ்ந்த அல்லது நிகழ்ந்ததாக அவர் எண்ணுகிற அல்லது அப்படி சொல்ல விரும்புகிற அனுபவங்களை எழுதுவது பயணக்கட்டுரை என்று சொல்லப்படுகிறது.பயணக்கதை என்றும் சொல்லப்படுவதுண்டு. இரண்டுக்கும் அதிக வேறுபாடு இல்லை. பயணக்கதைகள் தமிழகத்தில் ராணுவ வீரர்களினால் உருவாக்கப்பட்டவை என்பதற்கான கல்வெட்டு ஆதாரம் உள்ளது என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். தமிழர்கள் அதிகமாக ஊர்விட்டு ஊர் சென்றது பட்டாளத்துக்குத்தான். போன இடத்தில் என்ன செய்தாலும் வந்த இடத்தில் அனுபவங்கள் பெருகுவதென்பாது  மானுட இயல்பே. …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/3709

வெண்முரசின் கார்வை
  அரி கிருஷ்ணன் எழுதிய கடிதத்தை ஜெயமோகன் தளத்தில் பார்த்தேன்.  மிக நன்றாக இருந்தது. பெரும்பாலும் நமக்கு வெளிமுகமாக பார்ப்பதுதான் அதிகம். வெளியில் என்ன நடக்கிறது மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள், என்ன செய்கிறார்கள். ஏன் அப்படி செய்கிறார்கள் என்பதையே அதிகம் சிந்திக்கிறோம். ஆனால் பார்வையை உட்புறமாக செலுத்தி நான் என்ன நினக்கிறேன்,  ஏன் இப்படி நினைக்கிறேன் எப்படி என் சிந்தனை நிகழ்கிறது என காண்பது அரிது.  தான் உள்ளூர கொண்டிருக்கும்  ஆன்மீகக் கருத்தில் வந்துதாக்கும் தத்துவக் கருத்துக்களை …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/94897

ஊழிற்பெருவலி
    இனிய ஜெயம்,   வண்ணக்கடல் நாவலில்,  ஏகலைவன் நோக்கில்  அவமானத்தில் தகித்தபடி அவனை கடந்து செல்லும் கர்ணனைக் குறித்த வர்ணனை வரும். மிக அருகே கடந்து செல்லும் அந்த வெம்மையை உள்ளே கிளர்த்தியது அந்த வர்ணனைகள். எழுத்து மொழியாகி , மொழி உள்ளே கற்பனையைத் தூண்டி, கண்டு, தொட்டு, நுகர்ந்து, உணர்ந்து  அனுபவிக்கும் அனைத்தையும் பதிலீடு செய்கிறது.  இந்த வரிசையில்  பெரு வலி தனித்துவமானது.  மொழி வழியே நாம் வலியை உணர, பெரு வலியை …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/94895

முன்னாளெழுத்தாளர் டாட் காம்
  ‘ஆரம்பிச்சாச்சு சார்’ என்றார் .’தவக்களைங்கள அள்ளி தராசுத்தட்டுல போடுறமாதிரித்தான்னு வச்சுக்கிடுங்க. ஆனா வேற வழி இல்ல. இப்டியே விட்டா இவ்ளோ பெரிய விஷயம் இப்டியே அழிஞ்சுகூட போய்டும். அதான் படாப்பாடுபட்டு தொடங்கியாச்சு’ அவரையே எனக்கு அதிகம் பழக்கமில்லை. ஏதோ இலக்கியக்கூட்டத்தில் பார்த்தேனா? இல்லை சரவணபவனில் எனக்கு பின்னால் நின்று வேகமாகச் சாப்பிடும்படி என்னை ஊக்குவித்த முகமா? ‘நீங்க?’ என்றேன். அவர் ஏமாற்றத்துடன் ‘என்னையத் தெரியலியா சார்? நான்தான் கிரௌஞ்சன்’ என்றார். ‘சார்?’ என்றேன் ‘கிரௌஞ்சன் சார்…எழுத்தாளர்’ …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/55305

ஒரு செல்லசிணுங்கல்போல….
மிக எளிமையாகச் சொல்லப்போனால் கவிதையென்பது ஒரு குறிப்பிட்ட வகையான மொழிவெளிப்பாடு மட்டுமே. நம்மைச் சூழ்ந்திருக்கும் அனைத்தையும் மொழியாக ஆக்கிக் கொண்டிருக்கிறோம். பொருட்கள் நிகழ்வுகள் உணர்வுகள். இந்த நிகழ்வையே உளம் என்கிறோம். உள்ளும் புறமும் என ஓடும் பிரக்ஞையினூடாக இவற்றை இணைத்து முடைந்து பேருரு ஒன்றை உருவாக்குகிறோம். அதுவே நம்மைச் சூழ்ந்திருக்கும் மொழியென்னும் இப்பெருவெளி. அது நாம் பிறந்து திளைத்து வாழும் கடல். பல கோடிபேரால் பலகோடி முறை பேசப்படுவதனாலேயே அது முடிவிலாத நுட்பங்களைக் கொண்டுள்ளது. புரிந்து கொள்ளப்படவேண்டும் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/94856

மதம்
அப்பாவுக்கு சின்னவயதிலேயே ஒழுங்கு என்பது மண்டைக்குள் நுழைந்துவிட்டது. பிரிட்டிஷ்காரர்கள் அவர்களின் ராணுவமனநிலைகொண்ட பள்ளிகள் வழியாக அளித்த ஒழுங்கு அல்ல. அதற்கு முன்னரே நம்முடைய மரபில் இருந்து உருவாகி வந்த ஒழுங்கு.Permanent link to this article: https://www.jeyamohan.in/7596

தாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’
  ‘நாவல் காலம் மாறுவதைப்பற்றி பேசும் ஒரு இலக்கிய வடிவம்’ மிக பொத்தாம்பொதுவான ஒரு கூற்று. ஆனால் வியப்பூட்டுமளவுக்கு சரியானதும்கூட. உலக இலக்கியத்தின் மகத்தான ஆக்கங்கள் பலவும் காலமாறுதலை விரிவாகச் சொல்வதையே கருவாகக் கொண்டுள்ளன. காலம் மாறுவது எதனூடாக தெரியவருகிறது? வாழ்க்கை மாறுவதனூடாக. ஆகவே அது வாழ்க்கையின் இயக்கத்தைப் பற்றிப் பேசும் கலை. வாழ்க்கை மாறும்போது மதீப்பீடுகள் மாறுகின்றன. ஆகவே நாவல் மதிப்பிடுகளின் உண்மையான சாரம் பற்றி விவாதிக்கும் கலை. மதிப்பீடுகள் மாறும்போது ஏற்படுவது ஆழமான உணர்ச்சிக்கொந்தளிப்பு. …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/183

செய்தியாளர்கள் -ஒரு கடிதம்
ஜெ, https://www.youtube.com/watch?v=Qtb2l9tq0Vk இது மிக நீளமான வீடியோ. முடிந்தால் முழுமையாக பார்க்கவும். அல்லது நிமிடம் 20 லிருந்து பார்க்கவும். 10 வருடங்களுக்கும் மேலாக ஜல்லிகட்டுக்காகப் போராடி வரும் வழக்கறிஞர் திரு. அம்பலத்தரசு ஜல்லிகட்டு தொடர்பான ordinance பற்றி மிகத்தெளிவாக தமிழில் சட்டநுணுக்கங்களை விளக்குகிறார். அங்கிருந்த செய்தியாளர்களால் இதை விளங்கிக்கொள்ளவே முடியவில்லை. சார் நீங்க வளவளன்னு பேசுறீங்கன்னு அவரை மொக்கை செய்கிறார்கள். அவர் வேற உங்களுக்கு தெரியும் என்று அடிக்கடி சொல்கிறார். அவருக்கு தெரியாது இவர்களுக்கு ஒன்றும் தெரியாது. இவர்களுக்கு தேவை ஒரு …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/94861

ஆரோக்கிய நிகேதனம் – கடிதம்
  அன்புள்ள ஆசிரியருக்கு, ஆரோக்கிய நிகேதனம் வாசிப்பவர் அமைதியாக மரணிக்கலாம். நான் இதன் ஜீவநாடியான ஜீவன்தத்தருடன் பிறந்து அவர்கூடவே இன்பதுன்பங்களில் வாழ்ந்து அவரோடவே அமைதியாக மரணித்தேன். மரணந்தான் எத்துணை சுகந்தம்! மஞ்சரி சொன்னதைப்போலத்தான். எனக்கு இதுநாள் வரை இப்படி ஒரு தெளிவை யாரும் எதுவும் கொடுக்கவில்லை. தாராசங்கர் பானர்ஜி ஜீவன்தத்தாய் வாழ்ந்து எனக்கு காட்டிவிட்டார். அபயையிடம் அவர் சொல்லியபோதுதான் நானே என்னைப்பார்த்து ஒரு கேள்வி கேட்டுக்கொண்டேன். “அட ஆமால்ல கிறிஸ்டி….அன்னைக்கி எப்பிடி இந்த கடன்பிரச்சனைலேர்ந்து விடுபடபோறேன்னு தெரியலயேன்னு …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/94670

நஞ்சு கசப்பு சிரிப்பு – வா.மு.கோமுவின் கதைகள்
பத்தாண்டுகளுக்கு முன்பு வாமுகோமு விஜயமங்கலத்திலிருந்து வெளியிட்டுக் கொண்டிருந்த ஒரு சிற்றிதழைக் குறித்து சில வரிகளில் நான் ஒரு மதிப்புரை எழுதியிருந்தேன். இலக்கியத்தை ஒரு அவச்சுவை விளையாட்டாக ஆக்கும் முயற்சி அவ்வெழுத்துகளில் இருப்பதாக. ஆனால் அவ்வப்போது அசலான நகைச்சுவை உணர்ச்சி அவற்றில் வெளிப்படுவதாகவும் கூறியிருந்தேன். குறிப்பாக அவ்விதழில் “அன்புள்ள கதலா…” என்று ஆரம்பித்து எழுதப்பட்டிருந்த ஒரு படிக்காத கிராமத்துப் பெண்ணின் காதல் கடிதம் போன்ற கவிதை சுவாரசியமாக இருந்தது. தமிழின் இரண்டு முதன்மையான இலக்கியப்போக்குகளுக்கும் வெளியே சில எழுத்துமுறைகள் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/94848

Older posts «