தினசரி தொகுப்புகள்: December 18, 2016

கேந்திப் பூவின் மணம் – ராஜகோபாலன்

ஊர்பெருமை பேசுவதில் தமிழ்நாட்டில் யாரும் குறைந்தவர்கள் இல்லை. ஆனால் ஊர்கிறுக்கு பிடித்தவர்கள் குறைவு. அதுவும் இலக்கியத்தில் ஊர்க்கிறுக்கு பிடித்து அலைபவர்கள் எப்போதும் திருநெல்வேலி ஆட்கள்தான். பாவம், தஞ்சையும், கும்பகோணமும் கொஞ்சம் முட்டித்தான் பார்க்கும்....

ஜில் ஜில் என ஆடிக்கொண்டு…

https://www.youtube.com/watch?v=OtpvfjTHSRs   வண்ணதாசனை ஆவணப்படம் எடுக்க நெல்லை சென்றிருந்தபோது விடுதியில் இந்தப் பாடலை நெடுநாட்களுக்குப்பின் பார்த்தேன். இப்போது சினிமாவுக்குள் இருக்கிறேன் என்பதனால் அட என வியந்து எழுந்துவிட்டேன். அதன்பின் வெண்முரசு எழுதுவதன் இடைவெளிகளின் சோர்வை வெல்ல...

பூனையும் புலியும்

  நேருக்கு நேர்  கே.வி.திருமலேஷ்   1 கொழுத்த பூனை ஒன்று என் வீட்டினுள் நுழைந்தது என்னைப் பார்த்ததும் நின்றது. அங்கு என்னை எதிர்பார்க்கவில்லை போலும் அதுவும் ஒரு திங்கட்கிழமை காலையில் எல்லோரும் வேலைக்கு போயிருக்கும் நேரத்தில். பூனை என்னை பொறுமையின்றி பார்த்தது. நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டோம், இருவருக்கும்...

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 60

மலைப்பாறைகளை கட்டித்தூக்கும் வல்லமைகொண்ட மென்பட்டுநூல். மெல்லியது வல்லமைகொண்டதாகும்போது வாளெனக் கூர்கொள்கிறது. யாழ்நரம்பென இசை எழுப்புகிறது.  அவள் மூச்சு அவன் மார்பின்மேல் படர்ந்தது. “ஏன்?” என்று அவன் காதுக்குள் கேட்டாள். “என்ன?” என்றான். “அஞ்சுகிறீர்களா?”...