Monthly Archive: December 2016

பணமில்லாப் பொருளாதாரம் – பாலா
. சென்னை நுங்கம்பாக்க நெடுஞ்சாலையில், லேண்ட்மார்க் என்னும் பெயரில் ஒரு புத்தகக்கடை இருந்தது. உண்மையிலேயே லேண்ட்மார்க்தான். புத்தக ஆர்வலர்கள், புத்தகங்களைப் பார்வையிட்டு, திறந்து, நுகர்ந்து, புத்தகங்கள் வாங்கிச் செல்வார்கள். வார இறுதியில் அங்கே செல்வது, பலருக்குப் பெரும் பொழுதுபோக்கு. பல இயக்குநர்கள், உதவி இயக்குநர்களாக இருக்கும் போது, ஓசியில் புத்தகம் படிக்க என்றே அதில் பணிபுரிந்திருக்கிறார்கள். அந்தக் கடை மரித்து, சில வருடங்களாகின்றன. இன்று சென்னையின் பல புத்தகக்கடைகள், பொழுதுபோக்கு சாதனங்கள், சினிமா சி.டிக்கள், பரிசுப் பொருட்கள் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/93872

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 19- பேசபட்டவை… கிருஷ்ணன்
  இது போன்ற கூடுகைகளின் நோக்கமே முக்கிய அல்லது சில மாறுபட்ட சிந்தனைகளை கவனப்படுத்த அல்லது உருவாக்க முடியுமா என்பது தான். கடந்த காலங்களில் மலையாளக் கவி டி.பி.ராஜீவன் கவிதைகளில் இருந்து படிமத்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டியதன் அரசியல் அவசியம் பற்றிப் பேசினார், அது ஊட்டி முகாம் வரை நீடித்தது. சென்ற ஆண்டு கே.என்.செந்தில் தற்காலத்திய நெருக்கடி என்பது ‘கருணையின்மை’ தான் என்றார், அது அப்போதே சிந்திக்க வைத்தது, இப்படி விஷ்ணுபுரம் கூடுகைகளுக்கு சில தவிர்க்க …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/94078

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள்- 18
அன்புள்ள ஜெ, விழாவைப்பற்றி எழுத வேண்டும் என எண்ணியிருந்தேன். ஒரு இனிய அயர்ச்சி. கணங்களில் அமிழ்ந்திருக்கவே மனம் விரும்பியது. நான் ஆ.மாதவன் விழாவில் பங்குகொள்ளவில்லை. பிற அனைத்து விழாக்களிலும் பங்கேற்று இருக்கிறேன். சென்ற காலங்களின் நினைவுகள், நண்பர்கள், கொண்டாட்டங்கள் என்னை அலைகழித்தபடி இருந்தன. எல்லோரையும் நினைத்துக்கொண்டேன். விழா பதிவுகள் குவிந்து கிடக்கின்றன. என்னையும் ஒரு நண்பர் ‘அண்ணா’ என்று விளித்து கடிதம் எழுதியபோது தான் துணுக்குற்றேன். பாரதி, சங்கர கிருஷ்ணா மற்றும் இன்னபிறர்களை கண்டபோது எனக்கு பின்னே …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/94075

யோகி சந்திப்பு -கடிதங்கள்
    அன்புள்ள ஜெ, எனக்கு நன்றாக நினைவில் உள்ளது; யோகி (சந்திப்பு)பற்றி நீங்கள் நித்யாவுடன் விவாதித்ததை “வாழ்விலே ஒரு முறை- முடிவின்மையில் இருந்து ஒரு பறவை” யில் எழுதி இருந்தீர்கள்; அதில் ஒரு வரி வரும்; நீங்கள் நித்யாவிடம் கேட்பதாக “நான் அவரை எரிச்சல் ஊட்டியிருப்பேனோ ” என்று , அதற்கு நித்யாவின் பதில் ” அது உன்னால் முடியுமா” இது என் நினைவில் என்றும் இருக்கிறது, இதில் இருந்து எனக்கு பல திறப்புகள் கிடைத்துள்ளன …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/93206

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 73
[ 20 ] பீதர்நாட்டு வணிகர்களுடன் மகாநாகம் வந்து காமரூபம் வழியாக இமயமலையடுக்குகளுக்குமேல் ஏறிய அர்ஜுனன் அங்குதான்   வெண்சுடர் கின்னரர்களின் உச்சிநிலம் குறித்து கேட்டறிந்தான். பீதவணிகர் ஆண்டுதோறும் கோடைகாலத்தின் தொடக்கத்திலேயே அத்திரிகள் சுமக்கும் வணிகப்பொருட்களுடன்  மலையடுக்குகள்மேல் ஏறிச்சென்று  இமயமலைச்சரிவுகளில் அமைந்த ஆயிரத்தெட்டு சிற்றூர்களில் வாழ்ந்த மலைமக்கள் வந்துகூடும் ஏழு அங்காடிகளை சென்றடைந்தனர். தவளம், சுஃப்ரம், பாண்டுரம், ஸ்வேதம், சுக்லம், அமலம், அனிலம் என்னும் ஏழு சந்தைகளும் ஆண்டுக்கொருமுறை கோடைப்பருவத்தின் இறுதி இரண்டு வாரங்களில் மட்டுமே கூடின. கோடை …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/94085

விஷ்ணுபுரம் விருது விழா, ஒருங்கிணைதலின் கொண்டாட்டம்
சென்ற விஷ்ணுபுரம் விருதுகள் குறித்த நினைவுகளை மீட்டிக்கொண்டிருந்தேன். இம்முறை விஷ்ணுபுரம் விருதுக்கு வண்ணதாசன் தேர்வு செய்யப்படுவது சென்ற மார்ச் மாதத்திலேயே நண்பர்கள் கூடி முடிவெடுத்த விஷயம். நான் ஐரோப்பியப் பயணம் முடிந்து வந்ததுமே வண்ணதாசனை அழைத்து அவருக்கு விருது அளிக்க இருப்பதாகவும் அதை ஏற்று அவர் எங்களை கௌரவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன். வண்ணதாசன் அவருக்கே உரித்தான தயக்கத்துடனும் பணிவுடனும் ஏற்புத்தெரிவித்தார். விருது அறிவிப்பை செப்டம்பர்- அக்டோபர் வாக்கில் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/93901

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 17
  அன்புள்ள ஜெ வுக்கு , 23 டிசம்பர் பொழுது கழியவேயில்லை. எப்போது 24 பகல் விடியும் ஆதர்ச எழுத்தாளர்களை எப்படி சந்திக்கப்போகிறோம் என்ற பரபரப்புடனேயே பொழுது விடிந்தது. காலையில் முதல் நிகழ்விலேயே நாஞ்சில் அய்யாவின் கம்பனின் தமிழாடல்களையும் பாரதியின் யுகத்தமிழையும் அவர்தம் சொல்லால் காது நிறைத்தேன். பாரதிமணி அய்யாவின் அனுபவங்கள் இயல்பான அவர்தம் உரையாடலால் அரங்கு களைகட்டியது. நான் மது உண்டவனில்லை. அவரின் ராயல் ஸ்காட்ச் டச்சில்! அது உண்ட மயக்கம் கொண்டேன். இனி விழா …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/94029

விஷ்ணுபுரம் விருதுவிழா உரை காணொளிகள்
பவா செல்லத்துரையின் உரை இணைப்பு   நாஸர் உரை     கு சிவராமன்   வண்ணதாசன் உரை ஜெயமோகன் உரை வண்ணதாசன் ஆவணப்படம் – சுருக்கப்பட்ட வடிவம் வண்ணதாசன் ஆவணப்படம் – முழு வடிவம்
Permanent link to this article: https://www.jeyamohan.in/94014

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 72
[ 18 ] தளிர்ப்பசுமை சூழ்ந்த சோலைக்குள் மரங்களின் அடிக்கவர்களின்மேல் கட்டப்பட்ட சிறுகுடில்கள் குருவிக்கூடுகள்போலிருந்தன. காற்றில் மரங்கள் ஆட அவை மெல்ல ஆடுவது தொட்டில்போலிருந்தது. மூங்கில் வேய்ந்த தரைமேல் ஈச்சையோலைகளைப் பரப்பி மெத்தென்றாக்கியிருந்தனர். வைதிகமுனிவரான காண்டவரின் மாணவர்களான சந்திரரும் சிகரரும் அங்கே தங்கள் மாணவர்களுடன் இருபது குடில்களிலாக தங்கியிருந்தனர். விருந்தினர்களுக்கான பெரிய குடில் நடுவே நின்றிருந்த பிரமோதம் என்னும் இலுப்பைமரத்தின் மேல் அமைந்திருந்தது. அதில் அந்தணர் நால்வரும் தங்கவைக்கப்பட்டனர். அவர்கள் சுகவாணிச் சோலைக்குள் நுழைந்ததுமே சந்திரரும் சிகரரும் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/94038

விஷ்ணுபுரம் விருது விழா – சுகா
  // இன்றைய என்னை நான் வடிவமைத்துக் கொள்ள தானறியாமல் தன் எழுத்து மூலம் உதவிய மகத்தான படைப்பாளியுடன் மூன்று தினங்கள் இருந்த மனநிறைவுடன் கிளம்பினேன். அண்ணாச்சியை வணங்கி விடைபெற்றேன். விமான நிலையத்துக்கு தனது காரில் அனுப்பி வைத்தார் சகோதரர் முத்தையா. விமான நிலைய வாசலில் ஜான் சுந்தரிடம் விடைபெறும் போது இருவருமே ஒருவரை ஒருவர் முகம் பார்த்துக் கொள்ளவில்லை. விமானம் கிளம்பும் போது வழக்கமாகச் சொல்லும் சண்முக கவசத்தைச் சொல்லவில்லை. மனம் அலைந்து கொண்டிருந்தது. கோல்டன் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/94069

Older posts «