Category Archive: காணொளிகள்

சங்கத்தமிழிசை

  வழக்கமான பக்திப் பாடல்களின் மோஸ்தரை சங்கப் பாடல்களின் மீது போர்த்தவில்லை என்பது ஆசுவாசமளிக்கிறது. இரண்டாயிரம் வருடங்கள் பழமையான வரிகள் சொற்கள் இசையால் எவ்விதமான சிதைவையும் அடையவில்லை என்பதுடன் ஒவ்வொரு வரியும் சொல்லும் அவை உத்தேசிக்கப்பட்ட காட்சியையும் உணர்வெழுச்சியையும் அர்த்தச் செறிவுடன் இயல்பாக முன்வைக்கின்றன. பாடல்களையும் அவற்றின் உணர்வு நிலைகளையும் சிதைக்காமல் பாடலுக்குள் பொதிந்துள்ள உன்னதத்தை மேலேற்றும்படி அமைந்துள்ள இசை குறிப்பிடத்தக்கது.   மனித குலத்தின் புராதனமான பாடல்கள் – வேணு தயாநிதி

Permanent link to this article: https://www.jeyamohan.in/129960

ஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்

  ஸ்ருதி டிவி – யூடியூப் வலைத்தளம்   அன்புள்ள ஜெ,   நம் நண்பர்களின் எழுத்தாளர்களின் உரைகளை மீண்டும் ஒருமுறை கேட்டேன். விழா ஏற்பாடுகளிலும் வரவேற்பிலும் வெளியே நின்றிருந்ததால் ஹெச்.எஸ். சிவபிரகாஷ் அவர்களின் உரையைத் தவறவிட்டேன். குழந்தைகள் அடம்பிடித்ததில்  வெளியே சென்று நிற்க வைத்து ஆசுவாசப்படுத்தியதில் சு.வேணுகோபால் அவர்களின் உரையும் கேட்க முடியவில்லை. முன்பு இவ்வாறு தவறவிட்டால் பெரும் வருத்தமே எஞ்சும். ஆனால் இப்பொழுது அப்படி இருப்பதில்லை.   முன்பு சென்னையில் நடக்கும் இலக்கிய கூட்டங்களுக்குச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129425

பத்து உரைகள் – கடிதங்கள்

பத்துநூல் வெளியீடு உரைகள். அன்புள்ள ஜெ, விஷ்ணுபுரம் விழாவின் பத்து உரைகளையும் கேட்டேன். கடலூர் சீனு, சுனீல்கிருஷ்ணன், சுரேஷ் பிரதீப் உரைகள் சிறப்பாக இருந்தன. விஜயகிருஷ்ணன் பேச்சு என் ஏரியா இல்லை. ஆகவே ஒன்றும் சொல்வதற்கில்லை. மற்றபடி அனைவருமே சுருக்கமாகவும் சிறப்பாகவும் பேசினார்கள். எங்கும் எவரும் மீறிப்போகவோ திசைமாறவோ இல்லை. சுருக்கமாக புத்தகம் பற்றியே பேசினார்கள். கதைச்சுருக்கம் சொல்லிவிட்டு போகவும் இல்லை. இளம்பேச்சாளர்களில் பிரியம்வதாவும், நவீனும் நன்றாகப் பேசினார்கள். நவீன் சுருக்கமாகப் பேசினார். முத்துக்குமார் மிகவும் தணிந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129417

விஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிகள்

        விஷ்ணுபுரம் விருது விழா காணொளிகள். ஆரம்பநாட்களில் முறையாக ஒளிப்பதிவு செய்து வலையேற்றம் செய்யவில்லை. காணக்கிடைத்தவை இவை. நினைவுகளில் இருந்து எழுகின்றன

Permanent link to this article: https://www.jeyamohan.in/128385

குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிகள்

  விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில்  குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது – 2019   கவிஞர். ச.துரைக்கு அளிக்கப்பட்டது.சென்னையில் 9-6-2019 அன்று நிகழ்ந்த விழாவில் பேசப்பட்டவற்றின் காணொளித்தொகுதி     ஜெயமோகன் உரை   பி.ராமன் உரை   தேவதேவன் உரை   அருணாச்சலம் மகாராஜன் உரை   ச.துரை ஏற்புரை     நன்றி Team Shruti.TV

Permanent link to this article: https://www.jeyamohan.in/122686

யானையும் நாரையும்

  ’ஆனடோக்டர்’ அன்புள்ள ஜெமோ சார்,   சில தினங்களாக ‘ஆனடொக்டர்’ பற்றிய வேறுபட்ட அட்டைப்படங்கள்  பல விதமான உணர்ச்சியை ஒருங்கே உருவாக்குகிறது. அதை பற்றிய பல விதமான சிந்தனைகள் நடக்கும் வேளையில் பார்க்க கிடைத்த இந்த காணொளி ” https://www.youtube.com/watch?v=Kxnk7ujGmKc ” என்னை ஒரு யானையை குழந்தையை போல் எடுத்து கொஞ்ச முடியுமா என்றொரு ஏக்கத்தை நல்குகிறது   அந்தளவுக்கு யானையின் விளையாட்டும், சேட்டையும், ஒரு விதமான நக்கலுடன் கூடிய உடல் மொழி நம்மை அறியாமல் ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/101026

அழகியே- ஒரு நகல்

  வேடிக்கையான காணொளி. என்ன வேடிக்கை என்றால் மிகமிக சீரியஸாக எடுத்திருக்கிறார்கள். சினிமா தெரிந்தவர்களால் இந்த படப்பிடிப்புக்கான செலவு என்ன என்று ஊகிக்க முடியும். ட்ரோன் , ஜிம்மிஜிப் கிரேன்  எல்லாம் தாராளமாக பயன்படுத்தியிருக்கிறார்கள். பல காட்சிகளில் விரிவான ஒளியமைப்புகள் செய்யப்பட்டுள்ளன. தொழில்முறை படத்தொகுப்பு. தொழில்முறை நடனக்கலைஞர்கள், தேர்ந்த நடனப்பயிற்சி. டிஐ கூட செய்திருக்கிறார்கள்   இத்தனைக்கும் ஒரு கல்யாண வீடியோ இது.  வருங்காலக் கணவனும் மனைவியும் ஆடும் டூயட். ஒருவகையான கேனத்தனம். ஆனால் இளமை கொண்டாட்டம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97623

நித்யா காணொளிகள்

  நித்ய சைதன்ய யதியின் வகுப்புகளின் காணொளிகள் சில வலையேற்றம் செய்யப்பட்டிருப்பதை இப்போதுதான் கண்டேன். அவருடைய அழகிய முகமும் தளர்ந்த மென்மையான சொற்களும் எத்தனை அழுத்தமாக என்னுள் பதிந்துள்ளன. அதனால்தான் போலும் ,இந்த காணொளிகள் எவ்வகையிலும் எனக்கு புதியனவாக இல்லை   நித்யா காணொளிகள்

Permanent link to this article: https://www.jeyamohan.in/97397

என் கந்தர்வன் — பாலா

  அன்பின் ஜெ. தலைவர்களும், தலைமைப் பண்புகளும் என்னும் தலைப்பு மிகப் பிடித்தமான ஒன்று. அது பற்றிய வரையறைகள் காலந்தோறும் மாறிக் கொண்டே வந்திருக்கின்றன. அந்த மாறுதல்களைப் படிப்பது மிக சுவாரஸ்யம்,ஒவ்வொரு பெரும் நிறுவனமும், தன்னுள்ளே தலைவர்களை உருவாக்க, அதற்கான சூழலை உருவாக்க பெரும் முயற்சிகளை எடுக்க முயல்கின்றன. கூகுள் அதில் ஒரு முயற்சியாக – டாக்ஸ் அட் கூகுள் என்னும் வரிசையில் பெரும் கலை ஆளுமைகளை அழைத்து உரையாடுகிறார்கள்.தகவல் தொழில்நுட்பத்தின் உச்சமும் கலையும் சந்திக்கும் இடத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/96809

செய்தியாளர்கள் -ஒரு கடிதம்

ஜெ, https://www.youtube.com/watch?v=Qtb2l9tq0Vk இது மிக நீளமான வீடியோ. முடிந்தால் முழுமையாக பார்க்கவும். அல்லது நிமிடம் 20 லிருந்து பார்க்கவும். 10 வருடங்களுக்கும் மேலாக ஜல்லிகட்டுக்காகப் போராடி வரும் வழக்கறிஞர் திரு. அம்பலத்தரசு ஜல்லிகட்டு தொடர்பான ordinance பற்றி மிகத்தெளிவாக தமிழில் சட்டநுணுக்கங்களை விளக்குகிறார். அங்கிருந்த செய்தியாளர்களால் இதை விளங்கிக்கொள்ளவே முடியவில்லை. சார் நீங்க வளவளன்னு பேசுறீங்கன்னு அவரை மொக்கை செய்கிறார்கள். அவர் வேற உங்களுக்கு தெரியும் என்று அடிக்கடி சொல்கிறார். அவருக்கு தெரியாது இவர்களுக்கு ஒன்றும் தெரியாது. இவர்களுக்கு தேவை ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/94861

Older posts «