Category Archive: சிறுகதை

ஏதேன் [சிறுகதை]

“அதுக்குப்பிறகு ஆப்ரிக்காவுக்கு போனேன்” என்று சாம் ஜெபத்துரை சொன்னான். “ஆப்ரிக்கா நல்லதாக்கும்” என்று சொல்லி நான் ஒரு வெங்காயச் சுருள்கீற்றை எடுத்து வாயிலிட்டு தின்றேன் கூடவே கோக் ஒரு வாய். “இவரு வாய வச்சிருக்கப்பட்டதப் பாத்தா நாம சோடா குடிக்க, இவரு ரம்மு குடிக்க மாதிரில்லாடே இருக்கு” என்றான் பிரபு. “வெங்காயமும் கோக்கும் நல்ல காம்பினேஷன்… ஜிர்ர்னு இருக்கும்” என்றேன் “இது இந்த ஐயர்மாரு கறி திங்கமாட்டேன்னு சொல்லி சீஸை தின்னு குசு விடுத மாதிரியாக்கும்” என்றான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130230

மொழி [சிறுகதை]

தங்கையா நாடார் மூச்சிரைக்க ஓடி கோயில்முற்றத்தை தாண்டி கரடி நாயரின் வீட்டை அடைந்தபோது வழியில் துண்டு கீழே விழுந்தது. “நாற எளவு!” என்று சபித்தபடி அதை ஓடிச்சென்று எடுத்து தோளிலிட்டபடி அம்மச்சி மாமரத்தைக் கடந்து வீட்டுக்குள் நுழைந்தார்.   பெரிய வீடு. இரண்டு வாசல்முற்றங்கள். வடக்குநோக்கிய முன்முற்றத்தில் தவளைக்கண்ணனும் லாரன்ஸும் பிறரும்  நின்றிருந்தார்கள். பக்கவாட்டிலிருந்த கிழக்குமுற்றத்தில் பெண்களின் கூட்டம். வைக்கோர்போர் அருகே ஒரு வேலையாட்களின் கூட்டம். கருப்பன் அப்பால் நின்று வெறிகொண்டு குரைத்துக்கொண்டிருந்தது   பெருவட்டர் வாயில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130284

ஆடகம் [சிறுகதை]

  [ 1 ] தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என்று ஆகும்பேயைச் சொல்கிறார்கள் என்று நான் இணையத்தில் வாசித்தேன், ஆகவே அந்த ஊரைத் தேர்ந்தெடுத்தேன். ஏனென்றால் நான் தற்கொலை செய்துகொள்ளும் ஊரில் மழைபெய்து ஊரே நனைந்திருக்கவேண்டும் என்றும் ,இலைகளெல்லாம் அசைந்து அசைந்து  சொட்டிக்கொண்டிருக்கவேண்டும் என்றும், வானம் நீலச்சாம்பல் முகிலால் மூடப்பட்டு இடியோசை அவ்வப்போது எழவேண்டும் என்றும் எண்ணினேன்.   நான் எவரும் எளிதில் கண்டுபிடிக்கமுடியாத ஓர் இடத்தில் செத்துக்கிடப்பேன். மழைத்தாரைகள் என் உடலை அறைந்து கொண்டிருக்கும். நீரோடைகள் என் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130265

கோட்டை [சிறுகதை]

அணஞ்சியம்மை ஒரு சாக்குப்பையை அக்குளில் இடுக்கிக்கொண்டு வந்து சேர்ந்தபோது நான் கோயில்முற்றத்தில் இடிந்த திண்டின்மேல் அமர்ந்து பச்சைமாங்காய் தின்றுகொண்டிருந்தேன்.   “பிள்ளே, இங்கிண நாணியம்மை தம்ப்ராட்டிக்க வீடு எங்கயாக்கும்?” என்று அவள் கேட்டாள்.   அப்போது அவள் யாரென்று எனக்குத்தெரிந்திருக்கவில்லை. வடித்த காதுகள் தோளில் தொங்கின. இருமுலைகளும், இரு நீண்ட பைகளாக ஆடின. முலைக்காம்புகள் குப்புற நிலம்நோக்கியிருந்தna, பசுவின் காம்புகளைப்போல. இடையில் ஒரு வேட்டி மட்டும் கட்டியிருந்தாள். முகம் சிலந்திவலைபோல சுருக்கங்கள் மண்டியிருந்தது. நரைத்த கண்கள் . …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130261

விலங்கு [சிறுகதை]

மார்த்தாண்டத்திலிருந்து அருமனை. அங்கிருந்து பத்துகாணி என்னும் ஊர். அந்த ஊரே சென்ற இருபத்தைந்தாண்டுகளில் உருவாகிவந்தது. மேற்குதொடர்ச்சி மலையின் அடர்காடுகளின் விளிம்பு, அருக்காணி போலீஸ் ஸ்டேஷன் அதற்கு அடுத்த அடையாளம். அங்குதான் விசாரித்தேன். “சக்கப்பாறையா? இங்கயா?” என்று கேட்டார் அங்கிருந்த இரண்டு போலீஸ்காரர்களில் ஒருவர். “இங்க எல்லா பாறையும் சக்கைப்பாறைதானேடே” என்றார் உள்ளிருந்த வயதான ஏட்டு. “இங்க அப்டி ஓரெடமும் இல்ல” என்றார் போலீஸ்காரர். நான் “ஆளு ஆரையாவது அனுப்பினா நல்லது. செலவ பாத்துக்கிடலாம்” என்றேன். போலீஸ்காரர் திரும்பி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130248

துளி [சிறுகதை]

காலையிலிருந்தே கோபாலகிருஷ்ணன் திமிறி, தலையாட்டி, உறுமிக்கொண்டிருந்தான். அருகே சென்ற ராமன் நாயரின் தோளை தும்பிக்கையால் தட்ட அவர் நிலைதடுமாறி தின்று மிச்சம்போட்டிருந்த ஓலைமட்டைகளில் கால்வைத்து தென்னைமரத்தை பிடித்துக்கொண்டு நின்று”என்னடே ஆச்சு? டேய் என்ன? என்ன உனக்கு?”என்றார். கோபாலகிருஷ்ணன் ‘பர்ராங்!” என்றான். என்னருகே நின்றிருந்த கருப்பன் ‘வவ்! வவ்!” என்று வாலைச்சுழற்றி குதித்தது. ”வே, அந்த நீக்குபிடிச்ச நாய அந்தால கொண்டுபோவும். அதைக்கண்டாலே இவனுக்கு பிடிக்கல்ல” என்றார் ராமன் நாயர். “ரெண்டாளும் பிரண்டாக்குமே” என்றேன். “பின்ன என்ன மசுத்துக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130246

வேட்டு [சிறுகதை]

  எருமைமாட்டின் இறைச்சியை மிகநுணுக்கமான துண்டுகளாக நறுக்கி குருமிளகும் இஞ்சியும் சேர்த்து அரைத்த மசாலாவுடன் கருகப்பொரித்து எடுக்கும் ஒரு தொடுகறிக்கு புகழ்பெற்ற முழுப்பிலங்காடு ஜானம்மாவின் விடுதியில் நானும் ஔசேப்பச்சனும் ஸ்ரீதரனும் குமாரன் மாஸ்டரும் பழனியப்பனும் அமர்ந்திருந்தபோதுதான் ஔசேப்பச்சன் “பிரதர் லைஃப் இஸ் எ மித். இதில் காதல் கற்பு எதற்கும் எந்த மதிப்பும் இல்லை. காமம், அதுமட்டும்தான் உண்மை. ஐந்து நிமிட நேர உண்மை. ஒரு இரண்டுமணிநேரம் அந்த உண்மையைச் சுற்றி அழகான பொய்யை கட்டிக்கொள்ளமுடியும்… அவ்வளவுதான்” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130303

அங்கி [சிறுகதை]

பீர்மேட்டிலிருந்து கட்டப்பனை போகும் வழியில் பாதியிலேயே இருட்டிவிட்டது. செபாஸ்டியன் பைக்கை ஓட்ட நான் பின்னால் அமர்ந்திருந்தேன். சாரல்மழை முகத்தில் அறைந்துகொண்டிருந்தது. வானத்தை ஒளியை மேகங்கள் மங்க வைத்திருந்தாலும் மழைத்தூறல்களில் ஒளி இருந்தது. ஈரமான நிலமும் இலைப்பரப்புகளும் மென்மையான ஒளியுடன் இருந்தன.   ”நேரமாயிடும்னு சொன்னேனே” என்றான் செபாஸ்டியன். “வேண்டாம் வேண்டாம்னு சொன்னா கேக்கல்ல. வாகைமண்ணு வண்டல்மண்ணுண்ணு அனத்தினே”   “செரி, நேரமானா என்னடே? போ… “   “போறதுக்குள்ள இருட்டீரும்” என்று செபாஸ்டியன் சொன்னான். “வளியிலே வெளிச்சமும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130224

காளான் [சிறுகதை] விஷ்ணுகுமார்

  சோபாவில்  குப்புற படுத்திருந்த மது திரும்பிப்  படுக்கும் போது ரவி ஒருவர் மட்டுமே அமரும் சோபாவில் கால்களை நீட்டி பின் தலையை சாய்த்து எதையோ தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்ததைக் கண்டான்.   “என்னடா சீக்கிரமா தெளிஞ்சிருச்சா?” என்று கேட்டபடி மது  டீபாய் மீது சிதறியிருந்த நேந்திரம் சிப்ஸயை எடுத்து கடித்தான்.   “ஒரே பிளாங்கா இருக்கு மச்சி எம்ப்டினெஸ். எங்காவது தூரமா போனும் ஆனா இந்த பூமில இல்ல , எல்லாமே புதுசா இருக்கனும். ஹொலிவூட் படத்தில …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130307

தவளையும் இளவரசனும் [சிறுகதை]

  இரவில் பேரழகியான இளவரசியாக இருந்தவள் விடிந்ததும் தவளையாக மாறிய கதையை நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது ஒரு படக்கதைப் புத்தகத்தில் வாசித்தேன். கடைசிப்பக்கத்தில் அந்தப் பச்சைத்தவளையைக் கண்டதும் எனக்கு வாந்தி வந்து உடல் உலுக்கியது. ஏனென்றால் நான் அந்தத் தவளையை மணந்த இளவரசனாக என்னை கற்பனை செய்துகொண்டிருந்தேன். மியான்மாரின் மேய்க் ஆர்க்கிபெலகோவுக்கு மேலும் எண்பது கிலோமீட்டர் தொலைவில் தனியார் சுற்றுலா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கௌங்கையின் என்னும் இந்தச் சிறிய தீவின் ஆடம்பரக் குடிலின் அறைக்கு வெளியே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130219

Older posts «

» Newer posts