Category Archive: சிறுகதை

வில்லுவண்டி[ சிறுகதை] தனா

  அங்கனத்தேவன் பட்டியில் வில்லு வண்டி வைத்திருந்தது செந்தட்டி மட்டும் தான். கோயம்புத்தூரில் இருந்து ஒரு ஆள் உயரத்திற்கு ஜாதி மாடுகளை வாங்கி வந்து அதில் கட்டியிருப்பார். இரவங்கலார் மலையில் இருந்து பிரம்புகளை வெட்டி வந்து வண்டிக்கு கூடாரம் கட்டினார். உட்காரவும் சாயவும் இலவம் பஞ்சில் மெத்தை விரிப்பு. வெள்ளிப்பூண் போட்ட சாட்டை. வில்லுவண்டி தனா

Permanent link to this article: https://www.jeyamohan.in/132279/

ஆகாயம் [சிறுகதை]

கல்லுவேலை காரியக்காரர் செண்பகராமன் மாடன் பிள்ளை அவருடன் வந்த மிளகுமடிசீலை காரியக்காரர் மார்த்தாண்டன் நீலன் பிள்ளையுடன் கல்லாசாரிகள் வேலைசெய்துகொண்டிருந்த புறமுற்றத்தின் நடுவே நடந்தார். “பாத்து நடக்கணும்… தரை முழுக்க அம்புமுனை வாள்முனை மாதிரி கல்லுடைசல்கள் உண்டு… குத்தினா ரத்தக்கோரையாக்கும். தெய்வ சிற்பங்கள் உள்ள மண்ணு ஆனதினாலே மிதியடி போடக்கூடாது” என்றார் செண்பகராமன் மாடன் பிள்ளை “ஆமா, இரும்புத்துண்டு மாதிரில்லா மின்னுது” என்றார் மார்த்தாண்டன் நீலன் பிள்ளை. சிற்பிகள் கற்களின்மேல் தொற்றி அமர்ந்தும் அருகே மண்டியிட்டும் வேலைசெய்துகொண்டிருந்தனர். நூற்றுக்கணக்கான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131938/

ராஜன் [சிறுகதை]

பூதத்தான் நாயர் கைகளைக் கூப்பியபடி உள்சுற்று மதிலுக்கு வெளியே இரண்டாம் கொட்டியம்பலத்தின் வாசலில் நின்றான். புற்றிலிருந்து எறும்புகள் போல வேலையாட்கள் வெளிவந்துகொண்டும் உள்ளே சென்றுகொண்டும் இருந்தார்கள். வாழைக்குலைகள் கருப்பட்டிகள் எண்ணைக் கொப்பரைகள் உள்ளே சென்றன.பாத்திரங்களும் குத்துவிளக்குகளும் வெளியே சென்றன அவன் கைகளை கூப்பியபடி உடலை ஒடுக்கி நின்றுகொண்டே இருந்தான். முதல்சுற்றுமதில் பெரியது. முட்டைத்தேய்ப்பு கொண்ட சுதைமண் சுவர். அதன் கொட்டியம்பலமும் பெரியது. அங்கேதான் இரண்டாம் காரியஸ்தன் சங்கரன் நாயர் இருந்தார். அவர்தான் அவனை வரவழைத்து உள்ளே போகச்சொன்னார் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131821/

தேனீ [சிறுகதை]

சுசீந்திரம் கோயிலுக்குள் காசிவிஸ்வநாதர் ஆலயம் ஒரு தனி உலகம். தெப்பக்குளம், அதற்கு இணையாக ஓடும் சாலையில் கடைகள், மூலம் திருநாள் மகாராஜா கட்டிய முகப்புக்கோபுரம், நந்தி, கொன்றைவனநாதர் சன்னிதி, கொடிமரம், அர்த்தமண்டபம், செண்பகராமன் மண்டபம், அனுமார் சன்னிதி என்று எங்கும் ஒளியும் திரளும் நிறைந்திருக்கும். காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் ஒரே ஒரு குண்டு பல்பு மட்டும் எரியும். வெளிச்சுற்றுப் பிராகாரத்தில் இருந்து விலகி யானைமேல் அம்பாரிபோல ஒற்றைப்பாறைமேல் அமைந்திருக்கும் சிறிய கற்கோயிலுக்கு வெட்டுபடிகளில் ஏறிச் செல்லவேண்டும். அது சுசீந்திரம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131744/

முதுநாவல்[சிறுகதை]

இது 1814 ல் திருவிதாங்கூர் திவான் தேவன் பத்மநாப மேனோன் சின்னம்மை நோயால் இறந்தார் என்ற செய்தி வந்து பெரும்பாலான ஊர்களில் இருண்ட மழைமூட்டம்போல துயரம் நிறைந்திருந்த ஒரு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பாறசாலை ஊரின் அந்திச்சந்தையின் தெற்கு வாசலில் உச்சிகடந்த பொழுதில் ஓர் ஒற்றை மாட்டுவண்டி வந்து நின்றது. அதிலிருந்து இடும்பன் நாராயணன் என்ற பெயர்கொண்ட ஏட்டு இறங்கி நின்று உரத்த குரலில் “எங்கேடா அந்த தலைக்கெட்டு காதர்? அவன் தன் அம்மையிடம் குடித்தது பால் என்றால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131679/

இணைவு [சிறுகதை]

போழ்வு [சிறுகதை]     முன்தொடர்ச்சி [1 ] கொல்லம் படகுத்துறையில் இறங்கி நேராக என் சாரட் நோக்கி ஓடினேன். ஸ்காட் மிஷனில் இருந்து எனக்காக அனுப்பப் பட்டிருந்த வண்டி.என்னுடன் என் பெட்டியை தூக்கியபடி மாத்தன் ஓடிவந்தான். நான் மூச்சிரைக்க ஏறி அமர்ந்ததும் அவன் பெட்டியை என் அருகே வைத்தான். வண்டிக்காரன் மாத்தனிடம் “எங்கே?” என்றான். நான் உரக்க “பன்னிரண்டாம் ரெஜிமெண்ட்… பன்னிரண்டாம் ரெஜிமெண்டின் தலைமை அலுவலகம்” என்றேன். அவன் திரும்பி “பொதுவான வண்டிகளை உள்ளே விடமாட்டார்கள்” என்றான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131640/

‘பிறசண்டு’ [சிறுகதை]

  “அப்பன் பாத்து வரணும்… வளி கொஞ்சம் எறக்கமாக்கும்”என்றான் ரத்தினம். அவர் கையைப்பிடித்து “பதுக்கே, காலை எடுத்து வைங்க” என்று காரிலிருந்து இறக்கினான் “பாத்துக்கிடுதேம்ல, நீ கையை விடு…” “விளுந்திருவீக” “நான் உன்னைய பிடிச்சுகிடுதேன்… ” அவர் அவன் தோளை பிடித்துக்கொண்டார். வெயில் ஏறியிருந்தது. கண்கள் கூசின. “லே அந்த கிளாஸை எடுலே” “இருங்க”என்றான். டிரைவரிடம் “முருகேசன் அண்ணா, அந்த டாஷ்போர்டிலே ஒரு கூலர் கெடக்கு எடுங்க” என்றான் முருகேசன் அதை எடுத்துக்கொண்டுவந்து கொடுத்தார். அதை கண்ணாடிக்குமேலே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131535/

நிழல்காகம்[சிறுகதை]

நித்யா சொன்னார். பல்லாயிரக்கணக்கான குழந்தைக்கதைகளிலும் சிலநூறு நீதிக்கதைகளிலும் அவ்வப்போது நவீன இலக்கியத்திலும் இடம்பெறுவதும், கன்னங்கரியதாகையால் காலவடிவென்று கருதப்படுவதும், காலமேயென்றாகிவிட்ட மூதாதையராக தோற்றம் அளிப்பதும், காலம் கடுமைகொண்ட தெய்வ வடிவமான சனீஸ்வரரின் ஊர்தியென்று வணங்கப்படுவதும், இவையனைத்துக்கும் அப்பால் பிறிதொரு சொல்லற்ற வான்வெளியில் தன்னியல்பாக பறப்பதும், இரைதேடவும் குலம்பெருக்கவும் மட்டும் மண்ணில் வந்தமர்வதும், கரைந்தும் தலைசரித்து நோக்கியும் சலிப்புற்று எழுந்து சென்றும் சிற்றடி எடுத்துவைத்து எல்லைமீறியும் நம்முடன் உறவாடுவதும், சற்றே செவிகூர்ந்தால் ஓயாத குரலோசையாக நம்மைச் சூழ்ந்திருப்பதாகத் தெரிவதுமான காகம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131339/

லாசர் [சிறுகதை ]

”என்னலே அது?” என்றபடி ஜான்சன் ஓடி அருகே வந்தான். லாசர் அதை உடனே மண்ணை அள்ளிப்போட்டு மூடிவிட்டான். “ஏலே என்னலே அது? ஏலே சொல்லுலே” என்றான் ஜான்சன். லாஸர் அதை அவனிடமிருந்து எப்படி மறைப்பது என்று தெரியாமல் “ஒண்ணுமில்லே” என்றான். அவன் முகமும் உடலும் எல்லாவற்றையும் காட்டின. அவன் பதறிப்போயிருந்தான். “என்னவாக்கும்?” என்றபடி ஜான்சன் அருகே அமர்ந்தான். “பைசாவா? பைசாவாலே?” அவன் குரல் தழைந்தது. “பைசான்னா ஆருகிட்டையும் சொல்லாண்டாம். நாம ரெண்டுபேரும் எடுத்துக்கிடுவோம்… திருச்செந்தூருக்கு போவோம்…அங்க கடல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129455/

தேவி [சிறுகதை]

“ஒத்தை ஒரு பொம்புள கேரக்டரா? செரியாவாதே” என்றார் ‘பெட்டி’ காதர். “ஒருநாடகம்னா மினிமம் மூணு பொம்புளை கேரக்டர் வேணும். அதாக்கும் வளமொறை. சும்மா ஆளாளுக்கு தோணின மாதிரி நாடகம்போட்டா நாடகமாயிடுமா?” “இல்ல நாடகம்தானே?” என்று அனந்தன் சொன்னான். “நாடகம்னா? வே, நாடகம்தானேன்னு அம்மைய மகன் பெண்டாள முடியுமா? இல்ல கேக்கேன்” லாரன்ஸ் சூடாகிவிட்டான். “நாடகத்தைப் பத்திப் பேசும்வே. சும்மா வாயில வந்தத பேசப்பிடாது. பகவதி இருக்கப்பட்ட ஊராக்கும்” ‘பெட்டி’ காதர் சற்று தணிந்தார். “இஞ்சபாருங்க. நான் பதிமூணு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131081/

Older posts «