Category Archive: சிறுகதை

நம்பிக்கையாளன் [சிறுகதை]

  திடீரென்று ரேடியோ கிர்ர் என்றது. அறைக்குள் இருந்த ஆழ்ந்த அமைதியை அது கிழிக்க அத்தனைபேரும் திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தனர். இளைஞன் தகாததுசெய்ததுபோன்ற சிறு உடற்குன்றலுடன் அதை நிறுத்தினான். ‘ ‘ இறைமறுப்பாளர்களின் கருவி ‘ ‘ என்றார் குழுத்தலைவர் வெறுப்புடன். ‘ ‘ அது இறையடியார்களுக்கு ஒருபோதும் உரிய காலத்தில் உதவியது இல்லை ‘ ‘ ‘ ‘சாத்தானின் நாக்கு ! ‘ ‘ என்றார் இன்னொருவர். ‘ ‘ஆனால் இப்போது நமக்கு வேறுவழியில்லை. வெளியுலகத்தொடர்புக்கு இதுமட்டும்தன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/55

அனோஜனின் யானை – கடிதங்கள் – 6

யானை – அனோஜன் பாலகிருஷ்ணன் சிறுகதை ஈழ இலக்கியமும் பிணச் சோதனை விமர்சன மரபும்- அனோஜன் பாலகிருஷ்ணன் ஒருதுளி இனிமையின் மீட்பு அலைதலும் எழுத்தும்- அனோஜன் பாலகிருஷ்ணன் அன்புள்ள ஜெ பொதுவாக ஈழ இலக்கியம் மலேசிய இலக்கியம் ஆகியவற்றை இங்கே பேசும்போது ‘இதோடு அவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்’ என்ற பாணியிலேயே சொல்வார்கள். ஆகா ஓகோ என புகழ்வார்கள். ஆனால் விமர்சனப்பார்வை இருக்காது. ஒரு சலுகை காட்டும் பாவனைதான் இருக்கும். ஆனால் உங்கள் தளத்தில் கடுமையான விமர்சனப்பார்வை உள்ளது. அதோடு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119606

சகடம் -சிறுகதை விவாதம் – 4

 ஒரு சிறுகதை விவாதம் அன்புள்ள ஜெ, நலம் விழைகிறேன். நண்பர் நாகபிரகாஷ் எழுதிய கடிதத்தை வாசித்தேன். முதலில் விமர்சனங்களால் அவர் ஏன் தன்னை இவ்வளவு சிக்கலாக்கி கொள்ள வேண்டுமென்று எனக்கு தோன்றுகிறது. அவர் கருத்தை இரு விதத்தில் நான் நிராகரிக்கிறேன். ஒன்று நிங்கள் எனக்கு புதிய வாசகர் சந்திப்பில் சொன்னது நியாபம் வருகிறது என் கதையை படித்துவிட்டு ஒரு டால்ஸ்டாய் வாசகனக்கு நீ தரும் கதையா இது என்றீர்கள். இல்லையென்று மழுங்க மண்டையை ஆட்டினேன். அதிலிருந்து ஒன்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119555

சகடம் – சிறுகதை விவாதம் – 3

திரு ஜெ அவர்களுக்கும் இந்த சிறுகதையை எழுதிய நண்பர் நாகபிரகாஷ் அவர்களுக்கும் நன்றி கலந்த வணக்கம். நான் இதுவரை கதையை பற்றிய விமர்சனங்களை எழுதியதில்லை. அதற்கான தகுதி இருக்கிறதா என்பதும் ஏதாவது புரியாமல் எழுதிவிடுவோமோ என்ற பயமுமே காரணம். ஆனாலும் ஜெவின் அழைப்பிற்கும் நாகபிரகாசத்தின் கேள்விக்கும் செவிமடுப்போமே என்பதற்காகவே இதை எழுதுகிறேன். பிழை இருந்தால் பொறுத்துக்கொள்ளுங்கள். முதலில் எனக்கு இந்த கதையில் பிடித்ததை எழுதி விடுகிறேன். எழுத்தின் நடை அற்புதமாக உள்ளது. ஆரம்பித்த சில வரிகளிலேயே ஆழமாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119513

அனோஜனின் யானை – கடிதங்கள் – 3

யானை – அனோஜன் பாலகிருஷ்ணன் சிறுகதை அன்புள்ள ஜெ அனோஜனின் யானையை வாசித்தேன். அதன்பிறகே அவரையும் அவர் கதையையும் பற்றிய கடிதங்களை வாசித்தேன். பலகோணங்களில் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன. முக்கியமான ஒரு அம்சத்தைச் சுட்டிக்காட்டவே இதை எழுதுகிறேன். யானை பௌத்த மரபில் ஒரு முக்கியமான உருவகம். பௌத்தமெய்ஞானமே யானையாக பெரும்பாலான கதைகளில் சொல்லப்பட்டுள்ளது. கருவியிலேயே மாயாதேவியின் வயிற்றுக்குள் புகுந்தது அந்த யானைதான். அதன்பின் கௌதமபுத்தராக சித்தார்த்தன் வந்து நிற்கையில் உலகஞானம் அனைத்தும் யானையாக வந்து அவரைப் பணிகிறது. பௌத்தச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119484

சகடம் – சிறுகதை விவாதம் – 2

ஒரு சிறுகதை விவாதம் பிரியத்துக்குரிய நாகப்ரகாஷ் நலம்தானே, எழுத்தாளனாக உருத்திரள முயலும் இந்த காலம் இருக்கிறதே அதுவொரு   இனிய துயர், உள்ளே இருக்கும் ஊற்றின் அதை மூடி நிற்கும்  இறுதிக் கல்லை அடித்துப் புரட்டும் வரை சோர்வுகள் குழப்பங்கள் எல்லாம் இருக்கவே செய்யும், குறுக்கு வழியே இல்லை, நமது தலையால் நாமே முட்டிப் புரட்டி அகழ்ந்து பறிக்க வேண்டிய பாறை அது. வெற்றி பெற வாழ்த்துக்கள். :) முதலாவதாக மயிலாடுதுறை பிரபு எழுதிய புள்ளரையன் கோவில் சிறுகதையை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119479

அனோஜனின் யானை – கடிதங்கள்-2

யானை – அனோஜன் பாலகிருஷ்ணன் சிறுகதை   ஒரு குழந்தையிடம் கனவுகள் முளைவிடத் தொடங்கும் தருணத்தில் தொடங்கி அவன் மத்திம வயது  வருவது வரையான கால கட்டமும் ஈழத்தில் போர் மேகங்கள் சூழ தொடங்கியது முதல் இறுதி போர் வரையிலான காலகட்டமும் பிரமாதமாக முயங்கி வருகிறது இக்கதையில்.சுயந்தன் குழந்தையாய் ,சிறுவனாய் ,வாலிபனாய்,வளர்ந்து வரும் தருணங்களை கதை போக்கிலேயே காட்சிப்படுத்தி இருந்த விதம் அபாரம்.ஒரு குடும்பம் சிதைவதின் குறுக்கு வெட்டு வரலாறு இக்கதை.சுயந்தனின் தமையனோடு கைது செய்யப்பட்டு காணாமல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119443

சகடம் – சிறுகதை விவாதம் -1

ஒரு சிறுகதை விவாதம் அன்புள்ள ஜெயமோகன், ஒரு சிறுகதையை வாசித்து முடித்தவுடன் எழும் முதல் உணர்வை வைத்தே அது சிறந்த படைப்பா இல்லையா என முடிவு செய்கிறோம். ஆம் என்றால் மேலும் உட்சென்று நம்மை அசைத்த கூறுகளை அடையாளம் காண்கிறோம். அக்கூறுகளைக் கொண்டு மேலுமொருமுறை அதை ஓட்டி மனதில் ஒரு இடமொதிக்கி அதை நிரந்தரம் கொள்ளச் செய்கிறோம். இல்லையென்றால் முன்பை விட இருமுறை கவனமாக திரும்பிப் பார்த்து அதில் நம்மை ஒட்டவைத்துக் கொள்ளும் அம்சம் தென்படுகிறதாவென மீண்டுமீண்டும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119457

ஒரு சிறுகதை விவாதம்

நாகப்பிரகாஷ் இக்கடிதத்தையும் உடனிருக்கும் கதையையும் அனுப்பியிருந்தார். வாசகர்கள், நண்பர்கள் தங்கள் விமர்சனங்களை, ஆய்வை எழுதலாம். மீண்டும் ஒரு கதை விவாதம் நிகழ உதவியாக இருக்கும் ஜெ ஜெ, இது என்னுடைய ஏழாவது சிறுகதை. ஆனால் இதுவும் நண்பர்கள் அனைவராலும், எழுதுகிறவர்களாலும் நிராகரிக்கப்பட்டது. தெளிவாக இல்லை, பெரும்பாலானவர்களுக்குப் புரியாது. எதுவுமே புதிதாக இல்லை. இனி வேறு எப்படிச் சிறுகதை எழுத என்று எழுதியதெல்லாம் மூட்டை கட்டி ஓரம் வைத்துவிட்டுப் படிக்க வேண்டும் போலிருக்கிறது. ஆனால் என் எழுத்தில் என்னதான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119353

யானை – அனோஜன் பாலகிருஷ்ணன் சிறுகதை

அனோஜன் பாலகிருஷ்ணனின் புதிய சிறுகதை. ஐயமில்லாமல் ஈழச்சிறுகதைப் பரப்பில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு என நினைக்கிறேன். ஈழச்சிறுகதை இது வரை சென்றடைந்த தளங்கள் முதன்மையாக நுண்சித்தரிப்பு [அ. முத்துலிங்கம்] பகடி [ஷோபா சக்தி] மற்றும் யதார்த்தச் சித்தரிப்புகள் மட்டுமே. அவை இலக்கியத்தின் வகைமைகள் எனினும் தங்களுக்கான எல்லைகளும் கொண்டவை. நுண்சித்தரிப்புகள் முழுமையை இலக்காக்க இயலாது, அவை வளர்ச்சிபோக்கு அற்றவை. பகடி மிகமிக எல்லைக்குட்பட்ட கலைவடிவம். பகடி ஒருபோதும் அந்த ஆசிரியனின் குரலாக அன்றி, அந்தக் காலகட்டத்தின் ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119346

Older posts «