Category Archive: இசை

எம்.எஸ்.வி பற்றி சுகா

எம்.எஸ்.விஸ்வநாதன் மேல் எனக்கிருக்கும் தனிப்பட்ட ஈர்ப்புக்குக் காரணம், அவரது குரல். விஸ்வநாதனின் குரல் என் மனதுக்கு அளித்த சுகத்தை, வேறெந்த பாடகரின் குரலும் தரவில்லை. தேர்ந்த பாடக, பாடகிகளுடன் விஸ்வநாதன் இணைந்து பாடும் போது கூட, என்னால் விஸ்வநாதனின் குரலையே அதிகம் ரசிக்க முடிகிறது. ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படத்தின் ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ பாடலில் ஜானகியை விடவும், ‘முத்தான முத்தல்லவோ’ படத்தின் ‘எனக்கொரு காதலி இருக்கின்றாள்’ பாடலில் பாலசுப்பிரமணியத்தை விடவும் விஸ்வநாதனின் குரலே ஆத்மார்த்தமாக மனதை வருடுகிறது. சுகா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77329

இளையராஜா, எம்.எஸ்.வி, ஞாநி

எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இளையராஜா நடத்தும் இசைநிகழ்ச்சி சார்பாக ஞாநி சங்கரன் எழுதிய குறிப்பை பிறிதொரு தருணத்தில் என்றால் கீழ்மையின் உச்சம் என்றே சொல்வேன். ராஜா எம்.எஸ்.வியின் இறப்பு உருவாக்கிய அனுதாபத்தை வைத்து பணம் சம்பாதிக்க முனைகிறார் என்றும் அது கிரிமினல் நடவடிக்கை என்றும் ஞாநி எழுதியிருக்கிறார். ராஜாவின் நிகழ்ச்சி மூலம் பெறப்படும் பணம் எம்.எஸ்.வி பேரால் ஒரு டிரஸ்ட் அமைக்க செலவிடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அச்செய்தியை அறிந்தும் பொருட்படுத்தாமல் ஞாநி இதை வன்மத்துடன் எழுதுகிறார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77246

எம். எஸ் .வியின் மலையாளப்பாடல்கள் – ஷாஜி

அன்பு ஜெயமோகன் கனடா, அமேரிக்கப் பயணம் சிறப்பு என நம்புகிறேன். அருண்மொழியும் குழந்தைகளும் நலம் தானே? எம் எஸ் வி யைப் பற்றி நான் மலையாளத்தில் எழுதிய விரிவான கட்டுரை (மலையாளம் வாரிக ஓணப்பதிப்பு 2014) நீங்கள் படித்திருக்கவில்லை என்று தெரியும். அவரது மலையாளப் பாடல்களைப் பற்றியான விரிவான பார்வை இதில் இருக்கிறது என்றே நினைக்கிறேன். சுட்டி இங்கே. http://epaper.malayalamvaarika.com/336496/Malayalam-Vaarika/05092014#page/98/1 வாய்பு கிடைத்தால் படித்து கருத்தை சொல்லுங்கள். ஷாஜி அன்புள்ள ஷாஜி வேறொருவர் இணைப்பை அளித்து இந்தக்கட்டுரையை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77072

எம்.எஸ்.வி ஒரு கட்டுரை- வெ சுரேஷ்

விஸ்வநாதன்- ராமமூரத்தியின் இசையில் அறுபதுகளில் வெளிவந்த பாடல்களுக்கு எந்தவொரு புதிய பாராட்டும் தேவையில்லை. அவை அவற்றுக்கான உயரங்களுக்குச் சென்று அமர்ந்துவிட்டவை. ஆனால் எழுபதுகளில் எம்எஸ்வி இசையில் வெளிவந்த பாடல்கள் அவற்றுக்குரிய இடத்தை இன்னும் பெறவில்லை என்றுதான் எண்ணுகிறேன். – See more at: http://solvanam.com/?p=41097#sthash.hF7Kv5l6.dpuf

Permanent link to this article: https://www.jeyamohan.in/76989

அஞ்சலி – எம்.எஸ்.வி

எம்.எஸ்.விஸ்வநாதனை நான் இருமுறை சந்தித்திருக்கிறேன். முதல்முறையாகச் சந்தித்தது ஷாஜியின் நூல் வெளியீட்டுவிழாவில். ஷாஜி அவருக்கு நெருக்கமானவர். மீண்டும் சந்தித்தபோது அவருக்கு அந்நிகழ்ச்சி  நினைவில் இருக்கவில்லை. ஷாஜியையே நினைவிருக்கவில்லை. பொதுவாக அவரது இசை பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். அவரது பெரும்பாலான பாடல்களை அவர் நினைவில் வைத்திருக்கவில்லை. முதுமை என்பதை விட மேலாக அவரது இயல்பு அது என்று தெரிந்தது. மிதந்து சென்றுகொண்டிருந்தார். அந்த அலையெல்லாம் இசை. நான் நினைவறிந்த நாள்முதல் எம்.எஸ்.வி இசையை கேட்டுக்கொண்டிருக்கிறேன். இன்றும்கூட கேட்டேன். ஒவ்வொருநாளும் அவரது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76968

தேவகாந்தாரி

அன்பு ஜெயமோகன், எப்படி இருக்கீங்க? ‘ஏறும் இறையும்’ என்கிற சிறுகதையை வாசித்தேன். என் போன்ற சங்கீதப் பைத்தியத்துக்கு இது போன்ற கதை எவ்வளவு உவப்பாய் இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. கதை சதாசிவத்தின் மன நிலையில் சொல்வது போல் கோயிலில் சிவனும் கணங்களும் உலா வரும் விவரிப்பை கூட்டி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. ஏறு என்றால் என்ன? சிங்கமா அல்லது மாடா? தேவகாந்தாரியைப் பற்றி எழுதி விட்டு மைசூர் ராஜா ஐயங்காரைக் கேட்காமல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76354

எம்.எஸ். எதிர்வினைகள், பதில்

அன்பு ஜெயமோகன், வணக்கம். எம் எஸ் சுப்பலக்ஷ்மி பற்றிய புத்தகத்தைப் பற்றித் தங்களின் எண்ண ஓட்டங்களைக் கண்டேன். இது சம்பந்தமாக எனக்குத் தோன்றுவது வருமாறு: சுப்பலக்ஷ்மியின் பிறப்பு குறித்து தங்களின் நண்பர் அறிந்தபின் அவரின் மதிப்பில் எம் எஸ் தாழ்ந்து விட்டதைக் குறிப்பிட்டு இருந்தீர்கள். அவருக்கு அது பற்றித் தெரியாதது மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. என் அன்னை தந்தை போன்ற என் முந்தைய தலைமுறையினர்க்கும் அவர்கள் மூலமாக என் போன்றவர்க்கும் இது போன்ற விஷயங்கள் அனைத்துமே தெரியும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75728

ஓர் அக்கினிப்பிரவேசம்

எம் எஸ். சுப்புலட்சுமியின் அதிதீவிர ரசிகரான ஒரு பிராமணர் எனக்கு அலுவலகத்தோழராக இருந்தார். எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றி ஏராளமாகப்பேசியிருக்கிறார். அவரது இல்லத்தில் எப்போதுமே எம்.எஸ் பாடிய பாடல்கள்தான் காலையில் முதலில் ஒலிக்கும் என்றார். ஒருபேச்சில் தற்செயலாகச் சொன்னார், எம்.எஸ்ஸின் முகம்தான் ஒரு மங்கலமான பிராமண குடும்பத்தலைவியின் முகம் என்று.   நான் சாதாரணமாக, எம்.எஸ் பிராமணப்பெண்ணே அல்ல என்றேன். அவருக்கு ஆச்சரியம். நான் அவர் மதுரை சண்முகவடிவு என்ற தேவதாசி குலத்து வீணைக்கலைஞருக்குப் பிறந்தவர். அவரது அப்பாபெயர் என்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4607

கித்தாரில்…

திரு. ஜெயமோகன், வணக்கம். சென்ற முறை தங்களிடமிருந்து மின் அஞ்சல் வந்ததிலிருந்து தங்களின் வலைப்பூவை பைத்தியம் போல் படித்துக் கொண்டிருக்கிறேன். தாங்கள் என் நாவலைப் படித்திருந்ததைத் தெரிவித்ததனால் தங்கள் மேல் காதல் கொண்டு இதில் இறங்கி இருப்பேன் என்று நினைக்கிறேன். இதைச் சொல்லும் போதே தங்கள் வலைப் பூவைப் படிக்கப் படிக்க நான் அப்படி ஒன்றும் காலத்தை வீணாக்கி விடவில்லை என்று தோன்றுகிறது. அடேங்கப்பா!எப்படித் தான் இப்படி எழுதிக் குவிக்கிறீர்களோ என்று பிரமிப்பும் பொறாமையும் எழுகின்றன. நாம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75671

இசை – கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், மகாராஜாவின் இசை படித்தேன் – அருமை தங்களுக்காக இந்த இராமாயண பாடல் நீங்கள் கேட்டிருக்கக் கூடும் இருப்பினும் .. புரியாத புதிய விஷயங்களை பெரியவர்கள் ” இருப்பா சொல்றேன் என்று ஆற அமர விளக்கும் போது ஏற்படும் தெளிவு மகிழ்ச்சி உங்கள் பல வரிகளில் உள்ளது போலவே மகாராஜாவின் இசையும் இவருடன் எனக்கு பிடித்தமானவர்கள் KVN மற்றும் சஞ்சய் நன்றி மணிகண்டன் திரு ஜெயமோகன், பேதங்களை வளர்க்கும் கருத்துக்களில் சிக்கவேண்டாம் என்பது என் பொதுவான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75456

Older posts «

» Newer posts