Category Archive: இசை

சங்கத்தமிழிசை

  வழக்கமான பக்திப் பாடல்களின் மோஸ்தரை சங்கப் பாடல்களின் மீது போர்த்தவில்லை என்பது ஆசுவாசமளிக்கிறது. இரண்டாயிரம் வருடங்கள் பழமையான வரிகள் சொற்கள் இசையால் எவ்விதமான சிதைவையும் அடையவில்லை என்பதுடன் ஒவ்வொரு வரியும் சொல்லும் அவை உத்தேசிக்கப்பட்ட காட்சியையும் உணர்வெழுச்சியையும் அர்த்தச் செறிவுடன் இயல்பாக முன்வைக்கின்றன. பாடல்களையும் அவற்றின் உணர்வு நிலைகளையும் சிதைக்காமல் பாடலுக்குள் பொதிந்துள்ள உன்னதத்தை மேலேற்றும்படி அமைந்துள்ள இசை குறிப்பிடத்தக்கது.   மனித குலத்தின் புராதனமான பாடல்கள் – வேணு தயாநிதி

Permanent link to this article: https://www.jeyamohan.in/129960

ஆண்டு இயம்பிய உளவே! – சங்கப்பாடல்கள் இசையுடன்

யாதும் ஊரே திருச்சியைச் சேர்ந்த எனது நண்பர் ஒருவர், அவரது தங்கையை கும்பகோணத்துக்காரருக்கு கட்டிக்கொடுத்துவிட்டு, அவர்களது திருமணம் முடிந்த ஒரு மாதம் கழிந்து, தம்பதிகளின் புதுக்குடித்தனத்தை பார்வையிட்டு வரச் சென்றிருந்தார். அவர் சென்ற சமயம் மாப்பிள்ளை இல்லை. தங்கையுடன் பேசிக்கொண்டிருந்தார். வெளியில் ரோட்டில் கார்களும், பைக்குகளும், ஸ்கூட்டர்களும் போகும் சத்தம். ஒலிப்பான்களின் ஓசை. பேச்சின் இடையில் அவரது தங்கை, “அண்ணா, அவர் வந்துட்டார்” என்று வாசலுக்கு சென்றுள்ளார். ரோட்டில் ஆயிரம் ஸ்கூட்டர்கள் சென்றிருக்கும், தனது தங்கை குறைந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129868

நீ மதுபகரூ…

சினிமாப்பாடல்களில் வரிகளின் இடம் என்ன? வரிகள் வழியாகவே இசை நினைவில் நின்றிருக்கிறது,எனக்கு. வரிகள் நன்றாக இல்லை என்றால் இசை உவகையூட்டுவதில்லை. தமிழின் பல மகத்தான பாடல்களை நான் கேட்பதே இல்லை. கீழ்மைநிறைந்த வரிகளால்தான். நல்ல வரிகள் அமைந்தால்கூட கேட்கக்கேட்க கொஞ்சம் சலிப்பூட்டுகின்றன அவை. ஓர் இடைவெளிக்குப்பின் அவற்றை கேட்டால் மட்டுமே வரிகள் புத்துயிர்கொள்கின்றன. ஆகவேதான் தெரியாத மொழிப்பாடல்களை மேலும் நுட்பமாக கேட்கமுடிகிறது. பாடல்களின் வரிகளில் பொருள்முழுமை பெறாத குழந்தைத்தனம் இருக்கவேண்டும். அல்லது எண்ணி முடிவடையாத ஒரு மர்மம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126790

‘வீட்டவிட்டு போடா!’

  ராஜன் சோமசுந்தரம் அமெரிக்கா செல்லும் வழக்கமான நம் கணிப்பொறியாளர்களைப்போல அங்கே சென்றபின் செயற்கைகோள் போல திரும்பி இந்தியாவைப் பார்த்துக்கொண்டிருப்பவர் அல்ல. அமெரிக்காவை அறிய, அதன் இசைமரபுகளில் ஊடுருவ பெருமுயற்சி எடுத்துக்கொண்டார். அதன்விளைவான வெற்றிகளையும் அடைந்தார். பேசும்போது அமெரிக்காவுக்கு ஜாஸ்,ப்ளுஸ்,ராப் வகை பாடல்கள் அளித்தது என்ன என்று கேட்டேன்.அமெரிக்காவுக்கான ஒரு ஜனரஞ்சக இசையை என்று சொன்னார்.   காரில் நீண்டபயணத்தில் இசைகேட்டபடி, அதைப்பற்றிப் பேசியபடியே சென்றோம். அப்போது ஒரு பாடல். ரே சார்ல்ஸ் இசையில் வந்த இப்பாடல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126479

ஓஸிபிசா, ரகுபதிராகவ…

எண்பதுகளில் ஓஸிபிஸா குழு சென்னைக்கு வந்தது. அதைப்பற்றிக் குமுதம் செய்திகளாக வெளியிட்டுக்கொண்டிருந்தது. ஒளியமைப்புகள் மட்டும் ஐம்பது லாரிகளில் கொண்டுவரப்பட்டு அரங்கை அடைந்தன என்று செய்தி வெளியிட்டிருந்தார்கள். ஆனால் நிகழ்ச்சி முடிந்தபின் குமுதம் இதழில் அரசுபதில்களில் ‘பாட்டா அது ?காட்டுக்கூச்சல்’ என எழுதியிருந்தார்கள். மேலும் ஐந்தாண்டு கழித்து நான் முதன்முதலாக ஓஸிபிஸாவின் பாடலைக் கேட்டேன். எனக்குப்பிடித்திருந்தது. ஏன் அதைக் காட்டுக்கத்தல் என்கிறார்கள் என்று ரமேசன் அண்ணனிடம் கேட்டேன், டேப்ரெக்கார்டர் என்ற அற்புத வஸ்துவுக்குச் சொந்தக்காரர். அப்போதுதான் வளைகுடாவிலிருந்து திரும்பியவர். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/33125

வாழ்க்கை எனும் அமுதத்துளி

லோகி மது அருந்தினால் விரும்பிப்பாடும் பாடல்களில் ஒன்று இது. பெரும்பாலும் அழுதுவிடுவார். இன்று இவ்வரிகளுடன் அவரது கண்ணீர் வழியும் முகமும் கலந்துவிட்டிக்கிறது.

Permanent link to this article: https://www.jeyamohan.in/7855

கிறித்தவ இசைப்பாடலாசிரியர்கள்

  தமிழின் தனித்தன்மை கொண்ட ஓர் இலக்கியவடிவம் என்று கிறித்தவ தோத்திரப்பாடல்களை சொல்லமுடியும். குமரிமாவட்டத்தில் பிறந்து வளார்ந்த நான் தொடர்ந்து நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அவற்றைக் கேட்டுவருகிறேன். என் மனம் கவர்ந்த கிறித்தவ தோத்திரப்பாடல்களின் பெரிய பட்டியலே உண்டு. ஆனால் இந்தப்பாடல்களின் முறையான வரலாறோ இதன் ஆசிரியர்களின் பெயர்களோ நானறியாதவை. சமீபத்தில் வாசிக்கநேர்ந்த ஒரு நூல் அதன் காரணமகாவே மிகுந்த மனக்கிளர்ச்சியை உருவாக்குவதாக அமைந்தது பேராசிரியர் யோ.ஞானசந்திர ஜான்சன் [தமிழ்த்துறை, கிறித்தவக்கல்லூரி தாம்பரம்] பேராசிரியர் அ.கா.பெருமாள் அவர்களின் மாணவர். அவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/58315

காலடி ஓசையிலே

இரண்டுபேருடைய காலடியோசைகள் மட்டுமே எனக்குத் தெரியும். எத்தனை ஓசைகளிலும். எத்தனை ஆயிரம் காலடிகளிலும். எப்படி என்று விளக்க முடியாது. ஏன் என்றும் சொல்லிவிடமுடியாது. அவற்றை நினைவில் வைத்திருப்பது என்னுள் வாழும் தூய விலங்கு ஒன்று. ஒன்று அம்மா, இன்னொன்று அருண்மொழி. இரு காலடியோசைகளுடனும் உணவுகளின் நினைவும் எப்படியோ கலந்துள்ளது. அருண்மொழி வரும் ஓசை கேட்டால் பத்துநிமிடத்திற்கு முன்னர் சாப்பிட்டுவிட்டு வந்திருந்தால்கூட சாப்பிடுவதற்காக உள்ளம் தயாராகிவிடும். அதன்பின்னரே நிலைமை புத்திக்குத் தட்டுப்படும். வலிகளில் தனிமைகளில் வெறுமைகளில் அக்காலடியோசைகளை நானே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97669

என் கந்தர்வன் — பாலா

  அன்பின் ஜெ. தலைவர்களும், தலைமைப் பண்புகளும் என்னும் தலைப்பு மிகப் பிடித்தமான ஒன்று. அது பற்றிய வரையறைகள் காலந்தோறும் மாறிக் கொண்டே வந்திருக்கின்றன. அந்த மாறுதல்களைப் படிப்பது மிக சுவாரஸ்யம்,ஒவ்வொரு பெரும் நிறுவனமும், தன்னுள்ளே தலைவர்களை உருவாக்க, அதற்கான சூழலை உருவாக்க பெரும் முயற்சிகளை எடுக்க முயல்கின்றன. கூகுள் அதில் ஒரு முயற்சியாக – டாக்ஸ் அட் கூகுள் என்னும் வரிசையில் பெரும் கலை ஆளுமைகளை அழைத்து உரையாடுகிறார்கள்.தகவல் தொழில்நுட்பத்தின் உச்சமும் கலையும் சந்திக்கும் இடத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/96809

புதிய ஆகாசம் புதிய பூமி

1962 ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி மலையாளத்தில் ’புதிய ஆகாசம் புதிய பூமி’ என்னும் படம் வெளியாகியது. எம்.எஸ்.மணி இயக்கியது. தோப்பில் பாஸி கதைவசனம். சத்யன் ராகினி நடித்தது. நட்டாலம் காளிவளாகத்துவீட்டில் பத்மாவதியம்மா விசாலாட்சியம்மா அப்போது முழுகருவடைந்திருந்தாள். முதல்மகனுக்கு ஒருவயது. பிரசவத்துக்காக நட்டாலம் வந்திருந்தாள். இரண்டாவது அண்ணனின் மனைவியின் தங்கைக்குத் திருமணம். ‘நல்வாதி’ ஆகையால் அனைவரும் சென்றாகவேண்டும். திருவனந்தபுரம் செல்வதென்பது அன்று ஒரு பெரும் கொண்டாட்டம். வீடே களிமயக்கில் இருந்தது. பூர்ணகர்ப்பிணியை பஸ்ஸில் கூட்டிக்கொண்டு போவது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/96911

Older posts «