Category Archive: விமர்சனம்

கே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகள்

  ஒரு வாக்குறுதி   பொன்சூடி நீ சிவந்தபோது உன்னை கொய்தெடுத்து கட்டினான் அல்லவா? மிதித்தான், புடைத்தான் செம்புக்கலத்தில் அவித்தான் எரிவெயிலில் உலத்தினான் உரலில் இட்டு உள்ளை வெளியே எடுத்தான் கொன்றவர்களுக்க்கும் வென்றவர்களுக்கும் அன்னமாக்கி பரிமாறினான்   எனினும் ஏன் சீதை அவன் மீண்டும் வரும்போது காதல் நடிக்கும்போது நிலம் ஒருக்கும்போது சம்மதத்துக்காக தொட்டுப்பார்க்கும்போது மிதித்து அகற்றாமல் அவனை புன்னகைத்து ஏற்கிறாய்?   சிரிப்பல்லாமல் விளைவதென்ன அக்கா? யாருடையதோ என் வயல் என்று அறியப் பிந்தியது என் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127863

கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -2

கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள்-1 2. நடிக்கும் காலாதீதம்   பிரமிளின் கவிதையில் இந்தமூன்று சரடுகள் எப்படி முயங்குகின்றன என்பதை இரு தளங்களில் காணவேண்டும். அவரது வெற்றி பெறாத – கவித்துவ எழுச்சி நிகழாத – கவிதைகளிலும் கவித்துவம் கைகூடிய சிறந்த கவிதைகளிலும். வெற்றி பெறாத கவிதைகளில் அவரது தன்முனைப்பு மேலோங்கி நிற்கிறது. அதை நிறுவும் தர்க்கக் கட்டுமானமாக மீபொருண்மை சுருங்கி விடுகிறது. ஆன்மிக தரிசனமோ அத்தன்முனைப்பை நியாயப்படுத்தும் வெற்றுச்சொற்களாக கோஷமாக பாவனையாகச்சுருங்கிச்சிறுத்துக் காணப்படுகிறது.   எங்கிட்டுவெங்கிட்டு? …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127780

அபி: ‘காலத்தின் மீது விழும் மெல்லிய வெயில்’ – யாழன் ஆதி

  வாழ்வின்மீதான அனுமானங்களில் எப்போதும் ஓர் ஏக்கத்தொனியோடுதான் படைப்புகள் தன்னளவில் உருக்கொள்கின்றன. குறிப்பாக மொழி மனித மனத்தின் தேடல்களை அதன் ஒளிவுமறைவுகளில் எப்போதும் ஒரு சுண்டெலியைப் போலவே சுரண்டிக்கொண்டிருக்கிறது. மொழியின்மீதான அவதானமும் அது தரும் நம்பிக்கையின் பேரொளியும் ஓர் ஆக்கவாளியைத் தொடர்ந்து அவர்போக்கில் இயங்கவைக்கிறது. ஓர் ஓவியர் தனக்கான வெளியை எங்கிருந்து உருவாக்குகிறார். ஒரு புனைவுக்காரர் தனக்கான ஆக்கத்திற்கான ஜீவனை எதிலிருந்து பிடுங்கிக்கொள்கிறார். எத்தகைய நல்லவை அணில்கள் தங்கும் இந்தக் கிளைகள் என்னும் சொற்றொடரின் இருப்பில் என்ன …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127232

கீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம்

  காடு அமேசானில் வாங்க காடு வாங்க குட்டப்பனின் வாழ்க்கையை வாழவேண்டும் என்கிற ஆசை கொண்டதனாலேயே கிரிதரன் தன் வாழ்வை தொலைக்கிறான் என்கிற எண்ணம் வந்தபோது காலை தூக்க கனவிலிருந்து எழுந்தமர்ந்தேன். உண்மைதானா என்கிற எண்ணம் நாள் முழுவதும் தொடர்ந்தது. அப்படிதான் இருக்க வேண்டும் என்று நினைக்கும்போது இஞ்சினியர் அய்யரையும் அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என நினைத்தேன். குட்டப்பனின் தெளிவு, எல்லாவற்றிற்கும் தீர்வு காணும் குணம், சோர்வேயறியாத உடல்பலம், எல்லோருக்கும் பயன்படும் அவன் சேவைகள் கண்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126681

விசும்பு மதிப்பீடு

    புனைவுகள் எப்போதும் வாழ்க்கையின் ஒவ்வொரு தளத்தையும் விசாரணைக்கு உட்படுத்தி சாராம்சப்படுத்துவதன் வாயிலாக வாழ்வின் பொருளை அல்லது பொருளின்மையை உணர்த்துவதாக அமைகிறவை. அறிதல்களுக்கான கருவிகள் பெருகப் பெருக புனைவுகளுக்குள்ளும் அக்கருவிகளின் தாக்கம் பிரதிபலிக்கவே செய்யும். மதம், தத்துவம், வரலாறு, மானுடவியல், உளவியல் எனப் பல துறைகளின் தாக்கம் புனைவுகளில் பிரதிபலிக்கும் போதுதான் ஒரு மொழியின் புனைவிலக்கியப் பரப்பு வளமானதாகவும் காலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதாகவும் இருக்கும். அவ்வகையில் தமிழில் குறைவாக எழுதப்படும் புனைவு வகைமையான அறிவியல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126544

‘நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’

  1916 ல் திருவனந்தபுரத்தில் இருந்து வந்த தமிழன் பத்திரிகையில் அதன் ஆசிரியர் பண்டித எஸ்.முத்துசாமிப் பிள்ளை ஒரு சம்பவத்தை எழுதியிருந்தார்.  ஏதாவது ஒரு விஷயமாக சாலைக்கடைப் பக்கமாக அவர் போகாத நாள் இல்லை. ஒருநாள் போகும்போது ஒரு பண்டாரம் சிவகணம் போல நின்று ‘முத்திநெறி அறியாத மூர்க்கரோடு முயல்வேனை‘ என்ற பாடலை ‘கல்லும் கரையும் வண்ணம்‘ பாடிக்கொண்டிருந்தார். இவர் நின்று அதை கவனித்தார். பண்டாரத்துக்கு ஓரளவு சில்லறை சேர்ந்தது   தானும் சில்லறை போட்டு நகரும்போது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3217

மீட்சி -ஒரு சிறுகதை

  நண்பர் தாமரைக்கண்னன் எழுதிய முதல் சிறுகதை ‘ மீட்சி’. முதல்சிறுகதை என்றவகையில் செறிவுடனும் நுண்மையுடனும் அமைந்திருக்கிறது. இனிய வாசிப்பனுபவமாகவும் அமைந்துள்ளது.   ஆனால் இக்கதையில் நான் காணும் சில போதாமைகள் உள்ளன. அவற்றை என் பார்வைகள் எனக் கொள்ளலாம். விவாதக்குறிப்பாகவே இதை எழுதுகிறேன்   அ. .ஒரு நவீன இலக்கியப்படைப்பு மரபான மொழிநடையை கைக்கொள்வது, மரபான மொழிபின் பகுதியாக அல்ல. அது ஒரு மறுஆக்கமாக அமையவேண்டும். மரபான மொழிநடையை அது எடுத்துக்கொண்டு நவீனமாக்கவேண்டும். மரபான மொழிநடையை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122207

மாறுதலின் இக்காலகட்டத்தில்…

தமிழினி “இலக்கிய முன்னோடிகள் வரிசை” புத்தகங்கள் வெளியீட்டு விழாவில் பேசிய ஏற்புரை. இலக்கிய விமரிசனம் செய்வது ஒரு படைப்பாளிக்கு ஆபத்தான விஷயம். ஏனெனில் இலக்கிய விமரிசனம் சார்ந்து சொல்லப்படும் ஒரு சொல் உடனடியாக ஒன்பது சொற்களை பதிலாக உருவாக்குகிறது. அதற்குப்பதில் சொல்ல நாம் தொண்ணூறு சொற்களை உருவாக்கவேண்டும். இது முடிவே இல்லாத செயல்பாடு. ஆகவே உலக அளவில்கூட பல முக்கியமான படைப்பாளிகள் காலப்போக்கில் விமரிசகர்கள் ஆகியிருக்கிறார்கள். சிறந்த உதாரணம் டி எச் எலியட். தமிழில் க.நா.சு. நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41

ஈழத்திலிருந்து ஒரு குரல்

தமிழகத்தில் ஒவ்வொரு தரப்புகளுக்குமிடையில் முரண்பாடுகளும் கோட்பாட்டு ரீதியான வேறுபாடுகளும் வெவ்வேறான அரசியல் நிலைப்பாடுகளும் உண்டு. அது அவர்களுடைய உள் வீட்டுப் பிரச்சினை. ஆனால் கருத்துலகம் என்ற வகையிலும் கோட்பாடு என்ற வகையிலும் அங்கே நிலவுகின்ற பிரச்சினைகள் ஈழச்சூழலிலும் பிரதிபலிக்கும் என்று ஒரு நியாயத்தை எவரும் சொல்லக்கூடும். அதில் உண்மையும் உண்டு. உதாரணமாக பெரியாரியம், தலித்தியம் மற்றும் இன அடையாளம் குறித்த பிற அம்சங்களில். ஆனால், அந்தக் கருத்து நிலையைக் கொள்வது வேறு. அங்குள்ள அணிகளுடன் தம்மை அடையாளப்படுத்தி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119658

ஈழ இலக்கியமும் பிணச் சோதனை விமர்சன மரபும்- அனோஜன் பாலகிருஷ்ணன்

ஈழ இலக்கியம் பற்றிய கூச்சல்கள் தனிப்பட்ட வாழ்கையில் அலைக்கழிப்பும் துயரம் நிறைந்த அனுபவமும் இருந்தால் நல்ல இலக்கியம் பிறக்கும் என்பது பொதுவான நம்பிக்கை. டால்ஸ்டாய், ஜெயமோகன்,ஷோபாசக்தி, மிலன் குந்தேரா, ஹனீப் குரேஷி வரை அதற்கான முன்னோடிகள் இருக்கிறார்கள்தான். ஆனால் வெறுமே துயரும் அலைக்கழிப்பும் மட்டுமே நல்ல இலக்கியத்தைப்படைப்பதற்குப் போதுமானதாக இருப்பதில்லை. நல்ல உதாரணம் ஈழத்து எழுத்தாளர்களின் ஆக்கங்கள். ஈழம் என்றாலே போர், கண்ணீர், இனப்படுகொலை என்ற எண்ணமே மனதில் வரும். அதெல்லாம் சரிதான், ஆனால் அவற்றை முன்னிறுத்தி எழுதப்படும் படைப்பில் இலக்கியத்தரம் இருக்கிறதா என்பதே இலக்கியத்திற்கான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119092

Older posts «

» Newer posts