Category Archive: விமர்சனம்

வைக்கம் முகமது பஷீரின் பாத்தும்மாவுடைய ஆடும், இளம் பருவத்துத்தோழியும்

: வைக்கம் முகமது பஷீரின் ஒரு கதாபாத்திரம் குழந்தையாக இருக்கும்போது பள்ளியில் ஆசிரியர் கேட்கிறார் “ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் என்ன வரும்டா?” குழந்தை தன் ஊரில் குன்றுமேலேறி நின்று இரு ஆறுகள் இணைவதைப் பார்த்த ஞாபகத்தில், “இன்னொரு பெரிய ஒன்று’ என்று பதில் கூறுகிறது. அடிவிழுகிறது. எவ்வளவு சொல்லியும் குழந்தைக்குப் புரியவில்லை. இரண்டும் இணையாமலிருக்கும் போதுதான் இரண்டு. இணைந்துவிட்டால் எப்போதும் மிஞ்சுவது ஒன்றுதானே? முதிர்ந்து பழுத்தபிறகு பஷீர் எழுதிய கதையில் ஒரு கதாபாத்திரம் அறிகிறது `நான் நீ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/191

அத்தர் மணம்- ராம்குமாரின் அகதி- மயிலாடுதுறை பிரபு

உருவாகி நிலைபெற்றிருக்கும் வடிவப் பிரக்ஞையும் எழுத்தாளனின் கட்டற்ற படைப்பூக்கமும் இணையும் புள்ளியில் ஒரு புதிய படைப்பொன்று சூழல் முன் தன்னை அறிவித்த வண்ணம் உள்நுழைகிறது. முன்னோடிகளின் சாதனைகள் ஆல் போல் தழைத்திருக்கும் வெளியில் ஒரு புதிய எழுத்தாளன் அருகென வேரூன்றத் தொடங்குகிறான். ரோஜாவின் தனித்துவமான அத்தர் மணத்துடன் தமிழ்ப் படைப்புலகுக்குள் காலடி வைக்கிறது ராம்குமாரின் ‘’அகதி’’ சிறுகதைத் தொகுப்பு. ராம்குமார் அசோகமித்திரனை தனது ஆதர்சம் என்று சொல்கிறார். எனினும் அவரது அழகியல் அவரை தி.ஜானகிராமனின் கதைகளுக்கும் வண்ணதாசன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129881

அம்மையப்பம் – கடிதம்

அம்மையப்பம் [புதிய சிறுகதை] அன்பின் ஜெ, நலம்தானே? ”அம்மையப்பம்” மறுபடி படித்தேன். முதல்முறை 2013-ல் தளத்தில் வெளியான போது படித்தபோதே பச்சென்று மனதுக்குள் ஒட்டியிருந்தது. வெண்கடல் தொகுப்பில் எனக்குப் பிடித்த முதல் கதை. இரண்டாவதும் மூன்றாவதும் முறையே வெறும்முள்ளும், கைதிகளும். நண்பர் ஒருவருக்கு சமீபத்தில் அம்மையப்பத்தை ‘கண்டிப்பாகப் படிக்கவேண்டிய மிக நல்ல கதை’ என்று பரிந்துரைத்தபோது, படித்துவிட்டு “உனக்கு ஏன் இந்தக் கதை பிடித்திருந்தது?” எனக் கேட்டார். எனக்கு நானே மறுபடி கேட்டுக்கொள்வதற்காகவும், அவருக்கு பதில்சொல்ல கோர்த்துக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128330

ராம்குமாரின் ‘அகதி’ – காளிப்பிரசாத்

    முதல் தொகுப்பில் வரும் கதைகளே ஒரு ஆசிரியரின் எண்ணவோட்டத்தை நமக்கு அளிக்கின்றன. அவை அவரது ஆரம்பகால கதைகளாக இருக்கும் பட்சத்தில். அதன் பின்னான தொகுப்புகள் பெரும்பாலும் அதை கயிறு திரித்தோ அல்லது கூர்தீட்டியோ அலங்காரம் செய்தோ மேலெழுபவையாகத்தான் இருக்கின்றன. அதானால்தான் எந்த ஒரு எழுத்தாளருக்கும் முதல் தொகுப்பின் கதைகள் முக்கியமானவையாக இருக்கின்றன. அவற்றில் போதாமைகள் இருக்கலாம் எழுத்துப்பிழைகள் இருக்கலாம் வடிவ நேர்த்தி குறைந்திருக்கலாம் ஆனால் வாசகனுக்கு அவை முக்கியமானவையே. ஏனெனில் அந்த எழுத்தாளர் ஏன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129686

“ஒருபோதும் சென்றடையவில்லை என்கிற நிறைவின்மையை அடைக”

மூன்றுநாட்கள், இரண்டு நூல்வெளியீடுகள் அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு, “ஒருபோதும் சென்றடையவில்லை என்கிற நிறைவின்மையை அடைக”… தீம்புனல் நாவல் வெளியீட்டு நிகழ்வில் நீங்கள் சொல்கிற இந்த ஒற்றைவரி இன்றைய நாள்முழுதையும் மீளமீள ஒரு கலையாழத்துக்குள் கொண்டுசெல்கிறது. ஜி.காரல் மார்க்ஸ் அவர்களின் ‘தீம்புனல்’ நாவல் வெளியீட்டு நிகழ்வு முடிந்த இருதினங்களாகவே அதன் காணொளிகளைக் காண காத்திருந்தேன். முழுக்க கலைசார்ந்த ஒரு பார்வையை முன்வைக்குமிடத்தில் தான் விமர்சனமும் ஒரு தனிக்கலையாகப் பரிணமிக்கிறது. இக்குரல் ஒருவகையில், சுந்தர ராமசாமி உள்ளிட்ட முன்னாளுமைகளை எனது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129420

ரா.கிரிதரனின் இசை- சுரேஷ் பிரதீப்

பத்து ஆசிரியர்கள்-9, கிரிதரன் ராஜகோபாலன் காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை – கிரிதரன் ராஜகோபாலன் முன்னுரை ரா. கிரிதரன் சிறுகதைகள் குறித்த ஒரு விவாதத்தை தொடங்குவதென்றாலும் ஒரு கட்டுரை எழுதுவதென்றாலும் தமிழ்ச் சிறுகதை மரபு வளமானது என்ற வரியை சொல்லித் தொடங்குவது ஒரு சம்பிரதாயமாகவே மாறிவிட்டது. இப்படிச் சொல்ல காரணங்கள் இல்லாமல் இல்லை. தமிழின் முன்னோடி எழுத்தாளர்கள் பலரும் வலுவான சிறுகதை ஆசிரியர்களாகவே இருக்கின்றனர். பல்வேற வகைமைகளில் தமிழ்ச் சிறுகதைகள் எழுதப்பட்டுவிட்டன. பல நுண்மைகள் தமிழ்ச் சிறுகதைகளில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129575

அழகியபெரியவன் கதைகள் – காளிப்பிரசாத்

  (1)   மிகச்சரியாக பதினோரு வருடங்கள் முன்பு விகடனில் வெளியான ‘வாகனம் பூக்கும் சாலை’ என்ற சிறுகதைதான் அழகியபெரியவன் எழுதி நான் வாசித்த முதல் சிறுகதை. அதற்கு விகடன் தளத்தில் பின்னூட்டமிட்டதும் நினைவிருக்கிறது. அதன்பின் இணையதளங்களில் அவரது கட்டுரைகளை வாசித்து வந்தாலும், கேணி கூட்டம் போன்ற மேடைகளில் அவரது உரைகளை கேட்டிருந்தாலும்  மீண்டும் முழுமையாக அவரது படைப்புகளை வாசிக்கும் வாய்ப்பு சென்ற வருடம்தான் வாய்த்தது. சென்ற வருட துவக்கத்தில் தமிழினி வெளியீடாக வந்திருந்த ‘கொங்குதேர் வாழ்க்கை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129628

அமுதும் நஞ்சும் அணைந்ததொரு காதை – அருண்மொழி நங்கை

 நீலகண்டம் வாங்க அருண்மொழியின் இலக்கியக் கருத்துக்கள் மேல் எப்போதுமே எனக்கு பெருமதிப்பு உண்டு. தன்னை முழுக்க முழுக்க வாசகியின் இடத்தில் நிறுத்திக்கொண்டு, ஒரு படைப்பு தனக்கு என்ன அளிக்கிறது என்பதை மட்டுமே முன்வைக்கும் கருத்துக்கள் அவை. எந்த நூலையும் வாழ்க்கைசார்ந்த தன் புரிதலுக்குள் கொண்டுவந்தே அவளால் பேசமுடியும்.   ஆனால் அவளுடைய கட்டுரைகளில் அவள் பேசுமளவுக்கு தெளிவு அமைவதில்லை, பயிற்சியின்மையின் குறை இருந்துகொண்டே இருக்கும் என்பது என் எண்ணம். ஆகவே அவள் எழுதிய எதையும் நான் பெரிதாகப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129583

நாகப்பிரகாஷின் கதைகள் – ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்

ஜெயகாந்தனின் ஒரு சிறுகதை.பெரிய இடி மழைக்காக மனிதர்கள் ஓடி ஒதுங்குவதைக் கண்டு ஒரு கட்டெறும்பு, எதற்குக் காரணம் இல்லாமல் ஓடுகிறீர்கள் எனக் கேட்டுக் கொண்டிருக்கும். மழை நன்றாக ஓய்ந்த பின்னர் மனிதர்கள் சகஜமான நிலைக்குத் திரும்பியிருப்பர். அப்போது அந்த எறும்பு நின்று கொண்டிருக்கும் இடத்திற்கு மேலே உள்ள ஒரு பழுத்த இலையும், அதில் தேங்கி இருந்த நீரும் அந்த எறும்பின் மேல் விழுந்த போது பிரளயம் எனப் பதறிக் கொண்டு ஓடும்.   நாகபிரகாஷின் கதை உலகமும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129451

காந்தி, இந்துத்துவம் – ஒரு கதை

அன்புள்ள ஜெ இன்று தற்செயலாக உங்களுடைய நீரும்நெருப்பும் என்ற கதையை வாசித்தேன். வெண்கடல் வரும்போதே அந்தக் கதையை வாசித்திருந்தேன். அது அறம் தொகுப்புக்குப் பின்னால் வந்தது. ஆகவே அறம்போலவே அது இருக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆகவே அதைப்பற்றிய ஓர் ஏமாற்றம் இருந்தது. அதோடு அன்று இணையத்தில் எழுதும் ஒரு சிலர் எதிர்மறையாக எழுதியிருந்தனர். அந்த எண்ணமும் எனக்குள் ஊடுருவியிருக்கலாம். அவர்களெல்லாம் சும்மா வெற்றுவேட்டுக்கள் என்று தெரிய எனக்கு மேலும் சில ஆண்டுகள் ஆகியது இப்போதுதான் வெண்கடலை வாசித்தேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129466

Older posts «