Category Archive: திரைப்படம்

அங்காடித்தெரு பத்தாண்டுகள்

அங்காடித்தெரு படம் வெளியாகி பத்தாண்டுகளாகின்றன. ஒரு நல்ல சினிமா இனிய நினைவுகளாக ஆகிவிடுகிறது. ஏனென்றால் அது ஒரு கூட்டு உழைப்பு. பலருடைய பங்களிப்பால் உருவாவது. கூடிச் செயல்படும் எச்செயலும் இனியது. அது படைப்பூக்கம் கொண்டதாக இருக்குமென்றால் மேலும் இனியது   அங்காடித்தெருவின் படப்பிடிப்பு நடந்த சென்னை கடை, நெல்லை இட்டமொழி அருகே செங்காடு எல்லாம் நினைவில் எழுகின்றன. வசந்தபாலன். வசந்தபாலனின் வலங்கையாக அப்படத்தில் பணியாற்றிய நண்பர் வரதன் என முகங்கள் முன்னால் வருகின்றன. அனைவருக்கும் அன்பு   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130354/

தானென்றாதல்

கடத்தற்கரியதன் பேரழகு எர்ணாகுளத்தில் திரைக்கதையாசிரியர் ஜான்பால் அவர்களுடன் ஒரு படத்தின் சூழல் நோக்கும்பொருட்டு பயணம் செய்துகொண்டிருந்தபோது அவர் ஒரு மாளிகையைச் சுட்டிக்காட்டி  “அதுதான் செம்மீன் பாபுவின் இல்லம்” என்றார். திகைப்பாக இருந்தது, அது ஓர் அரண்மனை. அதன்பின் செம்மீன் பாபு என்னும் கண்மணி பாபு என்னும் பாபு மிர்ஸா இஸ்மாயில் சேட்  அவர்களின் வாழ்க்கையைப்பற்றிச் சொன்னார். பின்னர் ஜான்பால் அவர் தொலைக்காட்சியில் நடத்திவந்த நிகழ்ச்சியில் அதையெல்லம மீண்டும் சொல்வதைக் கேட்டேன். மலையாள சினிமாவில் ஒருவகையான தேவதைக்கதை போலச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130050/

கடத்தற்கரியதன் பேரழகு

  என் அப்பா மொத்தமே இரண்டு சினிமாக்கள்தான் பார்த்திருக்கிறார். மலையாளப்படமான செம்மீன், தமிழ் புராணப்படமான தசாவதாரம். இரண்டாவது படத்தை பதினைந்து நிமிடம் பார்த்தார். பிடிக்கவில்லை. கதகளி ரசிகரான அவருக்கு இரணியன் கோமாளி மாதிரி பேசுவதாகத் தோன்றியது. ஆனல் செம்மீனை முழுக்க பார்த்தார். “நல்ல படம், கடல்  நன்றாக இருக்கும்” என்றார்.  அவருக்கு சினிமா என்னும் கலைக்கு கண்ணும் மனமும் பழகவில்லை என நினைக்கிறேன். ஆனாலும் செம்மீனை அவரால் ரசிக்க முடிந்திருக்கிறது   செம்மீன் அக்காலத்தில் தமிழ்நாட்டிலும் மிகப்பெரிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129954/

ஒன்றின் கீழ் இரண்டு

அன்புள்ள ஜெ,   தற்செயலாக ஒரு படம் பார்த்தேன். ஒரு மலையாள இணைய தளத்தில் மலையாளத்தில் எடுக்கப்பட்ட சிறந்த திரில்லர்களை வகைப்படுத்தியிருந்தனர். அதில் சிறந்த மெடிக்கல் திரில்லர் என்று இது சொல்லப்பட்டிருந்தது.. பகத் ஃபாஸில், முரளி கோபி, ஹனி ரோஸ் நடித்தபடம். இயக்கம், எடிட்டிங் .அருண்குமார் அர்விந்த்.   நான் படத்தை தரவிறக்கம் செய்து பார்த்தேன். எளிமையான மலையாளப்படம் அல்ல. மிகக்கூர்மையான எடிட்டிங். அபாரமான காட்சியமைப்புக்கள். ஒவ்வொரு காட்சிக்கும் விசித்திரமான காட்சியமைப்பு. ஆனால் எந்தக்காட்சியும் துருத்துக்கொண்டும் இல்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129843/

தனிமையின் முடிவில்லாத கரையில்…

  வைக்கம் முகம்மது பஷீரின் புகழ்பெற்ற நீலவெளிச்சம் என்னும் கதையின் திரைவடிவம் 1964ல், எனக்கு இரண்டு வயதாக இருந்தபோது வெளிவந்தது. பார்கவி நிலையம். ஒளிப்பதிவாளர் ஏ.வின்செண்ட் இயக்கியது.இப்படத்திற்கு ஒளிப்பதிவு பி.பாஸ்கர் ராவ்.. எழுத்து வைக்கம் முகம்மது பஷீர். பஷீர் எழுதிய ஒரே படம். அவருக்கு ஒரு நிலமும் வீடும் அமைந்தது இந்த சினிமா வழியாகத்தான்.   இது மலையாளத்தின் ஒரு ‘கல்ட் கிளாஸிக்’ எனப்படுகிறது. முதன்மையான காரணம் இன்றும் மலையாளிகளின் நாவில் திகழும் பாடல்கள். பாபுராஜ் இசையமைப்பில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129610/

கதாபாத்திரப் பரிணாமம் ,விமர்சனம்

Vaanam Kottatum Movie Review நண்பர் தனாவின் படம் அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தொடக்கப் பதற்றங்கள் ஓய்ந்து படத்தின் வெற்றியை ரசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அனைவருக்கும் லாபம் வரும் ஒரு படம் என்பது கொண்டாட்டமாக ஆகிவிடுகிறது   ஓர் ஆர்வத்தில் இதற்கு வந்த விமர்சனங்களைக் கூர்ந்து கவனித்தேன். தமிழில் வருமளவுக்கு சினிமா விமர்சனங்கள் எந்த மொழியிலும் இல்லை என நினைக்கிறேன். ஒரு படத்திற்கு சாதாரணமாக ஐநூறு விமர்சனங்கள் வருகின்றன. மலையாளத்தில் நினைத்தே பார்க்கமுடியாது. ஹாலிவுட் படங்களுக்கு உலக அளவில்கூட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129772/

வானம் கொட்டட்டும்

தனா விஷ்ணுபுரம் வாசகர்வட்ட நண்பராக அறிமுகமானவர், நண்பர்களுடன் மேகமலைக்குச் செல்லும் ஒரு பயணத்தை அவர் ஏற்பாடு செய்திருந்தார். அதன்பின் மணி ரத்னத்தின் உதவியாளரானார். நம் தளத்தில் சிறுகதைகளும் எழுதியிருக்கிறார்   தனா இயக்கத்தில் வானம் கொட்டடும் இன்று வெளியாகவிருக்கிறது. எழுத்து மணி ரத்னம். படம் நான் ஏற்கனவே பார்த்துவிட்டேன். மென்மையான உணர்வுகளை நம்பகமான சூழலில் சொல்லும் இனிய படம்.   வாழ்த்துக்கள் தனா     தனசேகர் அறிமுகம் உறவு புதியவர்களின் கதைகள் – தனசேகர் மாசாவின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129727/

மிஷ்கின்,சிசிடிவி ஒரு விவாதம்

  நான் சைக்கோ பார்க்கவில்லை. படம்பார்க்கும் மனநிலையிலேஎயே இல்லை. ஆனால் மிஷ்கினின் இந்த ஆரம்பக்கல்விப் பயிற்றல் எனக்குப் பிடித்திருக்கிறது. தன்னம்பிக்கையாகச் சொல்கிறார். ஆனால் என்ன பிரச்சினை என்றால் இந்த ஆரம்பப் பாடத்தை கிட்டத்தட்ட நூறாண்டுகளாக இங்கே எழுத்திலும் திரையிலும் புனைவை உருவாக்குபவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதுதான்.   இங்கே பிரச்சினை இந்த ஆரம்பப் பாடம்  படம் பார்ப்பவர்களுக்குப் புரியவில்லை என்பது அல்ல. அவர்களுக்கு ஏனோ ஒரு படைப்பு பிடிக்கிறது, அல்லது பிடிக்கவில்லை. அதற்கு தனிப்பட்ட காரணங்கள் இருக்கும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129691/

குடைக்கீழே…

  பழைய மலையாளப் பாடல்களுடன் ஏதோ ஒரு நினைவு இணைந்திருக்கிறது. இந்தப்பாடலை இதற்கு முன் கேட்டது முன்பு ஒரு முறை லட்சத்தீவுக்கு படகில் செல்லும்போது. ஆனால் அப்போது இது என் இளமைக்காலத்தைய நினைவாகப் பதிந்துவிட்டிருந்த ராமகிருஷ்ணன் ஆசாரியுடன் இணைந்திருந்தது. அவருக்கு பிடித்தமான பாடல். சுருள்முடி நெற்றியில் தொங்கி அசைய, மரத்தை இழைத்தபடி இதைப் பாடுவார்.  “கேட்டோ கொச்சே, இந்தப் பாட்டை நம்ம பெண்ணு சேர்ந்து பாடுவா”   அழகன், பாடகன், மிகமிக மென்மையானவன். கனவுகளிலேயே வாழ்ந்தவன். இந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129460/

எழுத்தாளனும் பெண்களும்

கார்ல் மார்க்ஸின் தீம்புனல் வெளியீட்டுவிழாவுக்கு சென்றிருந்தபோது ஷாஜி இந்தப் படத்தைப்பற்றிச் சொன்னார். மலையாள எழுத்தாளர் பி.கேசவதேவ் எழுதிய ஆத்யத்தே கத என்ற குறுநாவலின் திரைவடிவம். பெரிய நிகழ்வுக, திருப்பங்கள் ஏதுமில்லை. சாதாரணமாக ஒழுகிச்செல்லும் படம். வெட்டியாக இருந்தால், ஒரு காலகட்டத்தை தெரிந்துகொள்ளவேண்டுமென்றால், பார்க்கலாம் அக்காலத்தைய யதார்த்தவாதம். ஆகையால் கொஞ்சம் நாடகத்தனம். ஆனால் பெரும்பாலும் இயல்பான கதாபாத்திரங்கள், உரையாடல்கள், நடிப்பு. நசீர் இயல்பாக நடித்திருக்கிறார். அன்றைய மலையாள இளைஞர்களின் பாவனைகள். அவருடைய விடுதி, அலுவலகம், அன்றைய சமூகச்சூழல் எல்லாமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129399/

Older posts «