Category Archive: திரைப்படம்

ஒன்றின் கீழ் இரண்டு

அன்புள்ள ஜெ,   தற்செயலாக ஒரு படம் பார்த்தேன். ஒரு மலையாள இணைய தளத்தில் மலையாளத்தில் எடுக்கப்பட்ட சிறந்த திரில்லர்களை வகைப்படுத்தியிருந்தனர். அதில் சிறந்த மெடிக்கல் திரில்லர் என்று இது சொல்லப்பட்டிருந்தது.. பகத் ஃபாஸில், முரளி கோபி, ஹனி ரோஸ் நடித்தபடம். இயக்கம், எடிட்டிங் .அருண்குமார் அர்விந்த்.   நான் படத்தை தரவிறக்கம் செய்து பார்த்தேன். எளிமையான மலையாளப்படம் அல்ல. மிகக்கூர்மையான எடிட்டிங். அபாரமான காட்சியமைப்புக்கள். ஒவ்வொரு காட்சிக்கும் விசித்திரமான காட்சியமைப்பு. ஆனால் எந்தக்காட்சியும் துருத்துக்கொண்டும் இல்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129843

எழுத்தாளனும் பெண்களும்

கார்ல் மார்க்ஸின் தீம்புனல் வெளியீட்டுவிழாவுக்கு சென்றிருந்தபோது ஷாஜி இந்தப் படத்தைப்பற்றிச் சொன்னார். மலையாள எழுத்தாளர் பி.கேசவதேவ் எழுதிய ஆத்யத்தே கத என்ற குறுநாவலின் திரைவடிவம். பெரிய நிகழ்வுக, திருப்பங்கள் ஏதுமில்லை. சாதாரணமாக ஒழுகிச்செல்லும் படம். வெட்டியாக இருந்தால், ஒரு காலகட்டத்தை தெரிந்துகொள்ளவேண்டுமென்றால், பார்க்கலாம் அக்காலத்தைய யதார்த்தவாதம். ஆகையால் கொஞ்சம் நாடகத்தனம். ஆனால் பெரும்பாலும் இயல்பான கதாபாத்திரங்கள், உரையாடல்கள், நடிப்பு. நசீர் இயல்பாக நடித்திருக்கிறார். அன்றைய மலையாள இளைஞர்களின் பாவனைகள். அவருடைய விடுதி, அலுவலகம், அன்றைய சமூகச்சூழல் எல்லாமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129399

மெல்லிய பூங்காற்று

இரு தருணங்களிலாக நான் ஒரு திரைப்படத்தைப்பார்த்தேன். கே.பாலசந்தர் இயக்கிய ‘தண்ணீர் தண்ணீர்’. முதல்முறை பார்க்கும்போது எனக்கு 19 வயது. கல்லூரி இறுதி வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். வகுப்பை வெட்டிவிட்டுக் கையில் புத்தகங்களுடன் நாகர்கோயில் பயோனியர் முத்து திரையரங்குக்குச் சென்று சொட்டிக்கொண்டிருந்த மழையில் நனைந்துகொண்டு வரிசையில் நின்று ஈரஉடலில் மின்விசிறிக்காற்று குளிரக்குளிர, அரங்கெங்கும் ஈர உடைகள் நீராவியை உமிழ,  தென்தமிழ்நாட்டின் கடும் வறட்சியைப்பற்றிய அந்தப்படத்தைப்பார்த்தேன். ஆரம்பித்த சில கணங்களுக்குள் paலைநிலம் வழியாக வெக்கையில் உடல் எரியச் சென்றுகொண்டிருந்தேன். தலையில் தண்ணீர்க் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21126

வாழ்க்கை எனும் அமுதத்துளி

லோகி மது அருந்தினால் விரும்பிப்பாடும் பாடல்களில் ஒன்று இது. பெரும்பாலும் அழுதுவிடுவார். இன்று இவ்வரிகளுடன் அவரது கண்ணீர் வழியும் முகமும் கலந்துவிட்டிக்கிறது.

Permanent link to this article: https://www.jeyamohan.in/7855

திரைப்படம் – ஏற்பின் இயங்கியல்

கட்டணக் கழிப்பறை, பேப்பர்மேன், கர்சீப் விற்பவர்.. ரங்கநாதன் தெருவின் குட்டிக் கதைகள்..! அங்காடித் தெரு சுவாரஸ்யம் – #9YearsOfAngadiTheru 24 ஆம் தேதி வீட்டிலிருந்து கிளம்பி வெவ்வேறு ஊர்களிலாக அலைந்துகொண்டிருந்தேன். தனிமை. எவரிடமும் பேசாமல் வாயின் தசைகள் கிட்டத்தட்ட உறைந்துவிட்டிருந்தன. செல்பேசியை பெரும்பாலும் அணைத்தே வைத்திருந்தேன். நேரம் பார்க்க செல்பேசியை இயக்கியபோது வசந்தபாலனின் குறுஞ்செய்தி வந்தது.  #9YearsOfAngadiTheru. விகடன் ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது. அது ஓர் விந்தையான சரடால் என்னை மீண்டும் இவ்வுலகுடன் இணைத்தது. சிலநாட்களுக்கு முன்னர் நான்கடவுள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119728

டு லெட்டும் விமர்சகர்களும் – கடலூர் சீனு

இனிய ஜெயம், பொதுவாக பிரமாதமாக டெம்ப்ட் கொடுக்கப்பட்டு, வெளியாகி அதை விட பிரமாதமாக அப்படம் தோல்வி கண்ட பிறகு, படப்பிடிப்பு துவங்கும் முன் டெம்ப்ட் கொடுப்பதற்காக, வெகுஜனப் பத்திரிகைகளுக்கு அளிக்கப்படும் பேட்டிகளை, பின்னால் தேடி சென்று வாசிப்பது எனது பொழுது போக்குகளில் ஒன்று . உதாரணமாக, சுறா எனத் திமிறத் தயாராகி விட்டார் விஜய். சுறா சொல்லிப் பாருங்களேன். வேகம், மூர்க்கம், ஓய்வே அற்ற சுறுசுறுப்பு, தான் இருக்கும் கடலை ஆளும் ராஜா இன்னும் என்னென்னவோ மனசுல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118696

செழியனின் டு லெட் – கடலூர் சீனு

கடந்த வருடம் புதுச்சேரி திரைப்பட விழாவை துவக்கி வைத்து பேசியவர் செழியன். அந்த விழாவில் டு லெட் முதல் திரைப்படமாக திரையிடப்பட்டது.  அதில் அந்தப் படம் திரை விழாக்களை நோக்கி எடுக்கப்பட்டது என்றும், கேளிக்கை சினிமா அம்சங்கள் இதில் கிடையாது ஆகவே, பொது திரையரங்கம் நோக்கி இது எடுக்கப்பட வில்லை,இருப்பினும் இதில் உள்ள வாழ்கையை அனைவரும் ரசிக்கும் வண்ணம், டிசம்பர் இறுதிக்குள், மக்கள் பார்வைக்கான திரை அரங்குகளில் பார்க்கக் கிடைக்கும் என கூறி இருந்தார்.  இந்த பெப்ரவரி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118692

சினிமா பற்றி நீங்கள் கேட்டவை

  சென்ற இருபது நாட்களாக இணையத்தில் எழுந்த என்மீதான வெறுப்பின் கசப்பின் அலையைப்பற்றி நண்பர்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அது வெற்றிக்கு எதிரான கசப்பு. என் வெற்றி என் புனைவுகளில் உள்ளது என்பதே என் எண்ணம். ஆனால் இவர்களின் உள்ளத்தில் இவர்கள் மதிக்கும் வெற்றி என்பது சினிமாவில் கிடைக்கும் உலகியல்வெற்றி மட்டுமே. அது இவர்களை பொறாமையால்  கொந்தளிக்கச் செய்கிறது. இலக்கியவெற்றியை மதிப்பிடுமளவுக்கு இவர்களுக்கு அறிவோ நுண்ணுணர்வோ இல்லை.   சர்க்கார் வெளிவருவதற்கு முன் அதன் கதை திருட்டு,அதற்கு வசனம் எழுதிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115079

கலையில் அதிவன்முறை

  மதிப்பிற்குரிய ஜெயமோகன், மனிதர்களைக் கொடுமைப்படுத்துவதை ஒரு மையமாக வைத்து பல ஆங்கில மற்றும் இதர மொழித் திரைப்படங்கள் எடுத்து வருகிறார்கள். இப்போதெல்லாம் torture-porn என்றே இதனை அழைக்க ஆரம்பித்து விட்டனர். ஹாஸ்டல் என்ற திரைப்படம் ஓரிரு ஆண்டுகள் முன்பு வந்தது – அதில் சித்திரவதைக் காட்சிகள் தத்ரூபமாகக் காட்டப் படுகின்றன. ஒரு வகையில் சித்திரவதை நிகழ்த்துபவர்களுடன் படத்தைப் பார்க்கிறவர்களும் சேர்ந்து உட்கார்ந்து கிடைத்த மனிதனை சித்திரவதை செய்வதை ரசிக்கட்டும் என்று படம் எடுக்கிறார்களோ என்று ஐயம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35624

பாபு நந்தன்கோடு

இணையத்தில் பழைய மலையாளப்பாட்டுகளுக்காக தேடிக்கொண்டிருந்தபோது நினைவில் மறைந்த ஒரு பாடலை கேட்டேன், இல்லை கண்டேன். ஸ்வப்னம் படத்துக்காக சலீல் சௌதிரி இசையமைத்து வாணி ஜெயராம்பாடிய பாடல். கறுப்புவெள்ளை சித்தரிப்பு. நந்திதா போஸ் என் இளமையில் நினைவில் இருந்த முகம். வங்க புதிய அலைப் படங்களின் நாயகி. அக்காலத்தில் நல்ல இயக்குநர்கள் பலருக்கும் அவர்தான் பிரிய முகம்.. பாடலின் தொடக்கமே சட்டென்று வசீகரித்தது. நந்திதா மிக இயல்பாக பாடுகிறார். கைகளின் அசைவில் அவருடைய இனிய பதற்றம் தெரிகிறது. உடலசைவில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11222

Older posts «