நீலம்

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 1

பகுதி ஒன்று: 1. திருப்பல்லாண்டு ‘உலகறிந்து எழுந்தவர் ஒருங்குணர்ந்து உய்ந்திடும் ஒரு பொருள் நீ’ என்று சிறுகரிச்சானின் முதற்குரல் எழ விழித்தெழுந்து மைநீலம் விலக்கி மணித்தளிர் சிலிர்த்துக்கொண்டது மால்திகழ் பெருஞ்சோலை. முகைப்பொதியவிழ்ந்த பல்லாயிரம் இதழிமைகளைத்...

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 2

பகுதி ஒன்று: 2. மணிநீல மலர்க்கடம்பு உடல்தீண்டாது உளம்தீண்டாது உயிர்தீண்டி எழுப்பியது எது? செவிநுழையாது சிந்தையறியாது சித்தமறிந்தது எது? விதைவிட்டெழுந்த முளை போல அணிமலர் பாயில் எழுந்தமர்ந்து மெய்ப்பு கொண்ட தன் உடலை தன்...

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 3

பகுதி ஒன்று: 3. முகிழ்முலை கனிதல் முதற்கரிச்சான் காலையை உணர்வதற்குள் சிற்றில் மூலையில் புல்பாயில் எழுந்தமர்ந்த ராதை தன் சுட்டுவிரலால் தோழியைத் தீண்டி “ஏடி, லலிதை” என்றழைத்தாள். அவிழ்ந்த கருங்கூந்தல் நெற்றியில் புரள, அழிந்து...

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 4

பகுதி இரண்டு: 1. சொல்லெழுதல் கன்றுகளின் கழுத்துமணியோசைகள் சூழ்ந்த பர்சானபுரியின் ஊர்மன்றில் நின்றிருந்த கல்லாலமரத்தின் அடியில் மரப்பீடத்தின்மேல் புலித்தோலைப் போட்டு அமர்ந்துகொண்டு ஆயர்குடியின் முதுதாதை மகிபானு தன் தொல்குடியின் கதையைச் சொன்னார். எதிரே இருந்த...

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 5

பகுதி இரண்டு: 2. பொருளவிழ்தல் யமுனைக்கரையில் சரிவில் வேரிறக்கி, விழுதுகளால் நீர்வருடி, தன் முகத்தை தான்நோக்கி நின்றிருந்த ஆலமரத்தடியில் ஆயர்குடிப்பெண்கள் கூடி நீராடிக்கொண்டிருக்க வேர்ப்புடைப்பில் அமர்ந்து அவர்கள் தந்த நறுஞ்சுண்ண வெற்றிலையைச் சுருட்டி வாயிலிட்டு...

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 6

பகுதி இரண்டு: 3. அனலெழுதல் வண்ணத்தலைப்பாகை வரிந்து சுற்றிய தலையும் கம்பிளிமேலாடையும் கையில் வலம்புரிக்குறிக்கோலும் தோளில் வழிச்செலவுமூட்டையுமாக பரிநிமித்திகன் பர்சானபுரிக்குள் வந்தான். அவன் விறலி தோளில் தொங்கிய தூளியில் விரலுண்ணும் விழிவிரிந்த கைம்மகவை வைத்திருந்தாள். அவர்கள்...

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 7

பகுதி மூன்று: 1. பெயரறிதல் பெயரிடப்படாத ஆயிரம் மைந்தர்கள் அதிகாலைச்சூரியனின் செம்பொன்னொளியில் தும்பிகளாகவும் வண்டுகளாகவும் வண்ணத்துப்பூச்சிகளாகவும் தேன்சிட்டுகளாகவும் ஒளிரும் சிறகுகள் கொண்டெழுந்தனர். ஒளிப்பெருக்கில் நீந்தித் திளைத்து, இளங்காற்றிலேறி பறந்து, பசுந்தளிர்களின் குளிரிலாடி, மலர்ப்பொடிகள் சூடி...

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 8

பகுதி மூன்று: 2. பெயராதல் ஆயர் சிறுமகளே, உனக்கிருக்கும் ஆயிரம் பணிகளை உதறிவிட்டு அதிகாலையிலேயே எழுந்து எங்கு ஓடிச்சென்றுவிட்டாய்? கைதுழாவி, கூந்தல் அலைதுழாவி நீ குளிராடும் யமுனைப்படித்துறையின் புன்னைமலர்ப்படலம் இன்னும் கலையவில்லை. உன் வெண்பஞ்சுப் பாதம்...

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 9

பகுதி மூன்று: 3. பெயரழிதல் கருநீலக் கடலொன்று கண்ஒளிர்ந்து கைவிரிந்து காலெழுந்து இதழ்மலர்ந்து உங்கள் மடிகொண்டமைந்தது. பெண்களே, பேதையரே, பெருமையல் திரண்டமைந்த அன்னையரே, அக்கண்களுக்கு மையிட்டு கன்னங்களில் பொற்பொடியிட்டு கைகளுக்கு வளையிட்டு கால்களுக்கு தண்டையிட்டு...

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 10

பகுதி நான்கு: 1. செழுங்குருதி கானகத்தில் கன்று மேய்க்கும் கன்னியரே கேளுங்கள். கன்னங்கருநீர் காளிந்தி கிளைவிரித்து ஓடும் சிறுவழியெல்லாம் சென்று ஆயர்குடி தோறும் அணுகி, நறுநெய் வாங்கி நிறைகுடம் தளும்ப மதுராபுரி அணையும் ஆக்னேயன்...