வெண்முரசு திசைதேர் வெள்ளம்

திசைதேர் வெள்ளம்

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-45

ஒவ்வொரு திசையிலிருந்தும் போர்ச்செய்திகள் வந்துகொண்டிருந்தன. கடோத்கஜன் பிரக்ஜ்யோதிஷத்தின் படைகளை மத்தென கலக்கிக்கொண்டிருந்தான். முன்னூறு பேர் கொல்லப்பட்டுவிட்டனர். பகதத்தனுக்கும் கடோத்கஜனுக்கும் நேர்ப்போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பகதத்தன் மூன்று முறை எறிகதை வீச்சுக்கு ஆளானார். கவசங்கள்...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-42

துரியோதனன் துச்சாதனனும் துச்சலனும் துர்மதனும் துச்சகனும் சூழ கவச உடையுடன் குருக்ஷேத்ரத்தின் முகப்புக்கு வந்தபோது படைப்பிரிவின் முகப்பில் நின்றிருந்த தேருக்கு அடியில் சிறு மரப்பீடத்தில் அமர்ந்திருந்த சகுனி தன் புண்பட்ட காலை மெல்ல...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-3

இரு கைகளையும் தூக்கி ஆர்ப்பரித்தபடி செருகளத்தின் முகப்பு நோக்கி ஓடிய அம்பையைத் தொடர்ந்து இருபக்கமும் அம்பிகையும் அம்பாலிகையும் சென்றனர். அவர்களின் குரல் கேட்டு அங்கே துயின்றுகிடந்த போர்வீரர்கள் அனைவரும் எழுந்தனர். ஒற்றைச்சரடால் கோக்கப்பட்ட...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-44

போர்க்களத்தில் தன் கையசைவுகள், உதடசைவுகள் வழியாக இடைவிடாது ஆணைகளைப் பிறப்பித்து சூழ்ந்திருந்த படைகளை முற்றாகவே ஆட்டுவித்துக்கொண்டு தேரில் நின்றிருக்கையில் சகுனி முதல்முறையாக நாற்களப் பகடைகளைத் தொட்டு எடுத்த நாளை எண்ணிக்கொண்டார். குழந்தையாக இருந்தபோது...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-57

சஞ்யசனின் கைகள் ஆடிக்குமிழிகளை ஒன்றுடன் ஒன்று இணைத்தும் பிரித்தும் காட்சிகளை மாற்றிக்கொண்டே இருந்தன. அவன் கண்விழிகள் அசைந்த விரைவிலேயே அவை நிகழ்ந்தன. அவன் உள்ளத்தின் விசையை கண்களும் அடைந்திருந்தன. எனவே எண்ணியதை அவன்...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-77

நாள்நிறைவை அறிவிக்கும் முரசுகள் முழங்கிக்கொண்டிருக்க சுபாகு கௌரவப் படைகளின் நடுவிலூடாகச் சென்றான். கௌரவப் படைவீரர்கள் தொடர்ந்து பலநாட்களாக உளச்சோர்வுடன்தான் அந்தியில் பாடிவீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்கள். அன்று அச்சோர்வு மேலும் பலமடங்காக இருக்கும் என அவன்...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-21

லட்சுமணன் அவையிலிருந்து வெளியே வந்து குளிர்காற்றை உணர்ந்தபோது மேலும் களைப்படைந்தான். கால்கள் நீரிலென நீந்தி நீந்தி அவனை கொண்டுசெல்வதுபோல தோன்றியது. வெளியே அவனுக்காகக் காத்து நின்றிருந்த துருமசேனன் அருகணைந்து “களமொருக்குதானே அடுத்த பணி,...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-52

அவந்தி நாட்டு அரசன் விந்தன் தன் தேரில் கௌரவப் படையின் எட்டாவது அக்ஷௌகிணியின் இரண்டாம் நிரையில் வில்லுடன் நின்றிருந்தான். சற்று அப்பால் அவனுடைய இரட்டையனும் அவந்தியின் இணையரசனுமாகிய அனுவிந்தன் அவனைப் போலவே கவசங்கள்...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-80

துண்டிகன் விழித்துக்கொண்டபோது தன் ஊரில், கோதுமை வயல்களின் நடுவே கட்டப்பட்டிருந்த காவல்மாடத்தின் வைக்கோல் படுக்கையில் படுத்திருந்தான். முற்றத்தொடங்கியிருந்த கோதுமை மணிகளின் மணமும் சிலுசிலுவென்ற ஒலியும் காற்றில் கலந்து வந்தன. கூகையின் ஓசையும் மிக...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-7

‘போர் என்பது போர் மட்டுமே’ எனும் சொல் எத்தொடர்பும் இன்றி சித்ராங்கதரின் உள்ளத்தில் எழுந்து ஊழ்கநுண்சொல்லென மீண்டும் மீண்டும் ஒலித்தது. போர் என்பது போர் மட்டுமே. இழப்பு அல்ல, இறப்பு அல்ல, வெற்றியோ...