வெண்முரசு செந்நா வேங்கை

செந்நா வேங்கை

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 47

விதுரரின் மாளிகையிலிருந்து அரண்மனை திரும்பும் வரை அரசியர் மூவரும் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளவில்லை. தங்கள் எண்ணங்களில் மூழ்கி தேரின் ஒற்றைப் பீடத்தில் மூன்று வெவ்வேறு உலகங்களிலென அமர்ந்திருந்தனர். விதுரரின் நிலைகுலைவு அவர்களை வெவ்வேறு...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 36

அஸ்தினபுரியின் தென்மேற்கு எல்லையில் குருதிகொள் கொற்றவையின் சிற்றாலயம் அமைந்திருந்தது. படைப்புறப்பாட்டிற்கு பலிபூசனை செய்வதற்கு மட்டுமே உரிய அவ்வாலயம் மாமன்னர் ஹஸ்தியினால் அந்நகரம் உருவாக்கப்படுவதற்கு முன்னரே அங்கிருந்தது. புராணகங்கையின் சிற்றோடைகள் பரந்தோடியமையால் பசுமை கொழித்த...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 80

உத்தரன் களம்பட்ட செய்தியை முரசுகளின் ஓசையிலிருந்து ஸ்வேதன் அறிந்தான். விராடர் களத்தில் விழுந்த செய்தியால் விராடப் படையினர் உளஎழுச்சி அணைந்து ஒருவரை ஒருவர் தோளோடு தோள்பட அழுத்தியபடி பின்னகர்ந்துகொண்டிருந்தனர். உத்தரன் இறந்த செய்தி...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 62

நிமித்திகர் அவைமேடையில் ஏறி “வெல்க மின்கொடி! வெல்க பாண்டவர்பெருங்குலம்!” என அறிவித்தார். அவை அமைதியடைந்தது. சுரேசர் கைகாட்ட யுதிஷ்டிரரையும் பாண்டவர்களையும் வணங்கிவிட்டு அரவானும் ஸ்வேதனும் சென்று பின்புறம் இருக்கைகளில் அமர்ந்தனர். சங்கன் மீண்டும்...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 46

விதுரரின் மாளிகை முற்றத்தில் அரசியர் மூவரும் அமர்ந்த அணித்தேர் சென்று நின்றது. முன்னரே அங்கு அணிவகுத்திருந்த காவலர்கள் வாள் தாழ்த்தி வாழ்த்துரை முழக்கினர். மாளிகையின் உள்ளிருந்து மூன்று சேடியர் கையில் மலர்த்தாலமும் சிற்றகல்சுடரும்...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 5

அவையில் ஒலித்த போர்க்கூச்சல்களையும் வாழ்த்தொலிகளையும் இளைய யாதவரும் அர்ஜுனனும் செவிகொள்ளவில்லை என்று சாத்யகிக்கு தோன்றியது. முற்றிலும் பிறிதொரு உலகில் அவர்கள் தனித்திருப்பதுபோல. அவர்களுக்கு மிக அப்பால் பிறிதொரு உலகிலென திரௌபதி அமர்ந்திருந்தாள். எத்தனை...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 76

கரிச்சான் குரலெழுப்பிய முற்புலரியிலேயே சங்கன் விழித்துக்கொண்டான். முந்தையநாள் முன்னிரவிலேயே அவன் துயின்றுவிட்டிருந்தான். வழக்கத்திற்கு மாறாக அன்று ஒளியறா மாலையிலேயே உணவு பரிமாறப்பட்டுவிட்டிருந்தது. பன்றியிறைச்சித் துண்டுகள் இட்டு சமைக்கப்பட்ட ஊனுணவை தொட்டியில் இருந்து பெரிய...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 77

சங்கன் ககனவெளியிலிருந்து பல நூறு தெய்வங்கள் திரண்டெழுந்து தன் உடலில் வந்து பொருந்தும் உணர்வை அடைந்தான். உடற்தசைகள் அனைத்தும் வெவ்வேறு உயிரும் தனித்தனியே விழைவும் தமக்கென்றேயான அசைவும் கொண்டவைபோல் தோன்றின. தோள்கள் சினமெழுந்த...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 56

மீண்டும் படைகளின் நடுவே செல்லத் தொடங்கியபோது ஸ்வேதன் சற்று விரைவு குறைத்தே புரவியை செலுத்தினான். வஜ்ரகுண்டலன் அவர்களை நோக்கியபடி சற்று விலகி வந்தான். ஆணிலியுடன் செல்வதை அவன் இழிவெனக் கருதுவதை காணமுடிந்தது. பந்தங்களின்...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 4

அறையிலிருந்து அனைவரும் வெளியே சென்றதும் சாத்யகி திரும்பி அசங்கனிடம் “இங்கு நிகழ்ந்த எதையுமே அவ்வண்ணமே பொருள்கொள்ள வேண்டியதில்லை. அரசுசூழ்தலின் கணக்குகள் நம்மால் புரிந்துகொள்ள முடியாதவை. இங்கு ஏன் இளைய யாதவர் இந்தத் திருமணப்...