வெண்முரசு கார்கடல்

கார்கடல்

கருமுகில் திரள்தல்

வெண்முரசு நாவல் தொடரின் இருபதாவது நாவல் கார்கடல். போரின் மகாபாரதப்போரின் உச்சங்கள் நிகழ்வது இந்நாவலில் அந்த மாபெரும் போர் இருண்டு முகிலென அனைத்து அறங்களையும் நெறிகளையும் மூடுவதன் சித்திரம் உள்ளது. ஒவ்வொரு கட்டுகளாக...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-88

சஞ்சயன் சொன்னான்: அரசே, குருக்ஷேத்ரக் களத்தில் பொடியும் புகையும் மெல்ல அடங்கிக்கொண்டிருப்பதை இப்போது பார்க்கிறேன். முகில்கள் பெய்தொழிந்து வான் வெளுப்பதுபோல் அங்கே ஒவ்வொரு வீரராக தோன்றுகிறார்கள். அதுவரை அங்கு படைகள் மோதிக்கொண்டிருந்தன. அப்படைகளுக்குள்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-87

அஸ்வத்தாமன் அணுகி வருந்தோறும் புரவிக்கனைப்பொலி பெருகிப் பெருகி வந்தது. அது நான்குபுறங்களிலும் இருந்து எழுந்து அவர்கள் அனைவரையும் சூழ்ந்தது. சகதேவன் அச்சத்துடன் “மூத்தவரே…” என்றான். யுதிஷ்டிரர் “யாதவனே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-86

துரோணர் வீழ்ந்ததும் படைகள் எழுப்பிய வாழ்த்தொலி பொய்யென்று ஒலித்தது. முழவேந்தியவர்களும் கொம்பூதியவர்களும் எழுதிவைத்து படிப்பவர்கள்போல் கூவினர். ஆனால் அவ்வோசை செவிகளில் விழ விழ அவர்களின் வெறி மிகுந்தது. “வீழ்ந்தார் எரிவில்லவர்! மண்பட்டார் திரிபந்தணர்!”...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-85

கிருபர் தனியாக தேரில் சென்று அஸ்வத்தாமன் போரிட்டுக்கொண்டிருந்த களத்தை அடைந்து இறங்கியபோது தொலைவில் அம்புகள் பறவைக்கூட்டங்கள்போல் சிறகோசையுடன் வானை நிறைத்திருப்பதை கண்டார். சகுனியும் அஸ்வத்தாமனும் இணைந்து மறுபுறம் முழு ஆற்றலுடன் போரிட்டுக்கொண்டிருந்த சிகண்டியை...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-84

துரியோதனன் அந்தக் கணத்தை பின்னரும் பலமுறை எண்ணி எண்ணி வியந்தான். மச்சர்களுடன் நிகர் நின்று பொருதிக்கொண்டிருந்தபோது எண்ணம் ஏதும் இன்றி அவன் வில் தாழ்த்தி செயலிழந்தான். உள்ளத்தில் ஒரு சொல் எஞ்சவில்லை. உடலெங்கும்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-83

அர்ஜுனன் தேரில் தலைதாழ்த்தி அமர்ந்திருக்க இளைய யாதவர் அவனை நோக்கி “உன் உள்ளம் இன்னும் விசைகொள்ளவில்லை” என்றார். “யாதவரே, நான் அந்த யானையை பற்றி எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றான். இளைய யாதவர் “ஆம், நானும்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-82

வெடியோசைகள் எழுந்து எதிரொலித்துக்கொண்டிருந்த களத்தில் திருஷ்டத்யும்னனை அகற்றி உள்ளே கொண்டுசெல்ல முயன்றுகொண்டிருந்தனர் மருத்துவர். பீமன் தன் தேரிலிருந்து இறங்கி திருஷ்டத்யும்னனை நோக்கி ஓடினான். சாத்யகி திருஷ்டத்யும்னன் மேல் அருகே கிடந்த தேர்ப்பலகை ஒன்றை...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-81

அர்ஜுனன் மண்ணில் விழுந்து புரண்டு கூச்சலிட அவனை நோக்கி ஓடிவந்த மருத்துவ ஏவலர் “அவர் உடலின் அனலை அணையுங்கள்... நீர்! நீர் எங்கே?” என்று கூவினார். இடப்பக்கமிருந்து நகுலனும் வலப்பக்கமிருந்து சகதேவனும் அவனை...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-80

ஆவக்காவலரை நோக்கி “எனது ஆவநாழியை...” என்று சொன்னபடி திரும்பிய அர்ஜுனன் தன் கால்களுக்குக் கீழே நிலம் இழுபட்டதுபோல் உணர்ந்து மண்ணை நோக்கி சென்றான். நெடுந்தொலைவு கீழிறங்கிக்கொண்டே இருக்கும் உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. மண்...