வெண்முரசு இமைக்கணம்

இமைக்கணம்

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-1

ஒன்று : காலம் திரேதாயுகத்தில் இது நிகழ்ந்தது. வெண்ணிறமான சிற்றுடலும் சிவந்த துளிக்கண்களும் கொண்ட தியானிகன் என்னும் சிறுபுழு தன் துளையிலிருந்து வெளியே வந்து நெளிந்து அங்கே அமர்ந்திருந்த பிரபாவன் என்னும் சிட்டுக்குருவியை நோக்கி...

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-2

பன்னீராயிரமாண்டுகாலம் பிரபாவன் விண்முகில்கள் மேல் அலைந்தது. மழையும் வெயிலும் மீளமீள வந்துசென்றன. நிகழ்ந்தவற்றின் தடமின்றி எஞ்சுவதே விண் என்று பிரபாவன் உணர்ந்தது. எனவே விண்ணில் எதுவும் நிகழ்வதேயில்லை என்று தெளிந்தது. ஒன்றுபோல் மறுநாள்...

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-3

முஞ்சவானின் உச்சிமுனையில் சிவக்குறியருகே ஊழ்கத்தில் அமர்ந்திருந்த யமன் அந்தச் சிறகொலி கேட்டு விழிதிறந்து சினத்துடன் எழுந்தார். அவர் அருகே இருட்குவையெனக் கிடந்த எருமை விழிமணிகள் மின்ன முக்ரையோசை எழுப்பி தலைகுனித்து பாய்ந்தது. நாரதர்...

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-4

இரண்டு : இயல் கோமதிநதியின் கரையில் அமைந்த நைமிஷாரண்யம் தேவர்களின் வேள்விநிலம். சூரியனின் அவிப்பெருங்கலம். சொல்பெருகும் காடுகளுக்கு நடுவே சொல்லவியும் பெருங்காடென அது முனிவரால் வாழ்த்தப்பட்டது. மண்புகுவதற்கு முன்பு சரஸ்வதி ஆறு வடகிழக்கிலிருந்து தென்மேற்கு...

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-5

ஏழு ஆழங்களுக்கு அடியில் தன் இருண்ட மாளிகையில் இருள்வடிவ அரியணையில் அமர்ந்து அறம்புரந்த மறலியின் முன்னால் வந்து வணங்கி நின்ற ஏவலனாகிய வேளன் பணிந்து “அரசே, தங்கள் ஆணையின்படி திரேதாயுகத்திலிருந்து நைமிஷாரண்யத்தில் காத்துநின்றிருந்தேன்....

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-6

இளைய யாதவர் தன் குடில்வாயிலில் வந்து நின்றபோது முற்றத்தின் நெடுமரத்தின் அடியில் வெண்ணிற அசைவை கண்டார். “அங்கரே, தாங்கள் அல்லவா?” என்றார். “ஆம், நானே” என்று கர்ணன் சொன்னான். மேலும் கேட்காமல் இளைய...

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-7

குருகுலத்து வசுஷேணர் நூறாண்டு வாழ்ந்தார். முதுமையில் மைந்தரும் பெயர்மைந்தரும் சூழ அரண்மனையில் அமைந்த வசுஷேணர் நெடுநாட்கள் புதிதென எதுவும் இயற்றாமையால் உடலும் உள்ளமும் ஓய்ந்தவராக இருந்தார். ஒவ்வொருநாளும் மாறாமல் அன்றாடத்தையே ஆற்றினார். முதற்புலரி...

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-8

விண்ணின் மூச்சுலகில் அப்போதும் வசுஷேணர் எஞ்சியிருந்தார். வேறு ஒரு காலத்தில் விழிநிலைக்க அமைந்து அனைத்தையும் நோக்கிக்கொண்டிருந்தார். அவருக்கு முன்னும் பின்னும் வாழ்ந்தவர்கள் அனைவரும் மூச்சுலகிலிருந்து வேறுலகுகளுக்கு எழுந்துசென்றபின் அவர் மட்டும் அங்கே எஞ்சினார்....

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-9

தன்னிலை அறிந்து மீண்டபோது கர்ணன் தரையில் அந்த வளைகோட்டுக்கு  மேலேயே கிடந்தான். அவன் கொண்ட அரைமயக்கில் அவன் மேலிருந்து எடைமிக்க உடற்சுருட்களை மெல்ல அகற்றியபடி கார்க்கோடகன் ஒழிந்துசெல்வது தெரிந்தது. இடமுணர்ந்ததும் திடுக்கிட்டு கையூன்றி...

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-10

மூன்று : ஒருமை நைமிஷாரண்யத்திலிருந்து வெளியே வரும்வரை யமன் கர்ணனின் உருவில்தான் இருந்தார். கருக்கிருட்டில் தன் ஆலயமுகப்புக்கு வந்து அங்கிருந்து யமபுரிக்கு இமைக்கணத்தில் மீண்டார். உவகையுடன் தன் அரண்மனைக்குச் சென்று அதன் முதல்படியில் காலடி...