Category Archive: வெய்யோன்

வெய்யோனொளியில்…

கர்ணனைப்பற்றிய நாவல் இது.வெண்முரசு நாவல்களை நான் செவ்வியலின் வெவ்வேறு வடிவங்களாகவே உள்ளூர உருவகித்திருக்கிறேன். செவ்வியல் என்பது அனைத்துவகையான புனைவுவகைகளுக்கும் உள்ளே இடமளிப்பது. அதன் இயல்பே தொகுப்புத்தன்மைதான். அதற்குள் ஒருமையையும் ஒத்திசைவையும் அது அடையமுயல்கிறது. அதன் மையத்தரிசனத்தால் அதை நோக்கிச் செல்கிறது. வெய்யோன் இயல்பாகவே பரசுராமனின் கதையிலிருந்து தொடங்கியது எனக்கே புதிய திறப்பாக அமைந்தது. அன்னையென்றும் காதலி என்றும் துணைவி என்றும் பெண்மையால் அலைக்கழிக்கப்படும் கர்ணனின் சித்திரமாக அது விரிந்தது. பெருந்தன்மையால் தோற்றுக்கொண்டே செல்பவன் வென்று நின்றிருக்கும் பேரறத்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88601/

வெய்யோன், எண்ணை, மரபு

வெண்முரசு நாவல்வரிசையின் ஒன்பதாவது நாவலான வெய்யோன் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. எண்ணியவற்றை எண்ணாதவை வென்றுசெல்லும் புனைவுப்பெருக்கு இந்நாவலிலும் நிகழ்ந்ததை நிறைவுடன் எண்ணிக்கொள்கிறேன். பிறாநாவல்கள் எவற்றையும் விட உளவலியும் துயரமும் அளிப்பதாக இருந்தது வெய்யோன். கர்ணனுடன் என்னை அடையாளம் கண்டுகொண்டமையால் அவன் அடைந்த துயரனைத்தையும் நானும் அடைந்தேன். என்னைச்சூழ்ந்திருக்கும் நட்பும் உறவும் என் உணர்வுநிலைகளால் துன்பப்பட்டிருந்தால் மன்னிக்கும்படி கோருகிறேன் இந்நாவல் எழுதும்போது ஒன்றைக் கவனித்தேன். சம்பந்தமில்லாத விஷயம்தான், ஆனாலும் பதிவுசெய்யவேண்டுமெனத் தோன்றியது. நாவல் அளிக்கும் கொந்தளிப்புகளால் தலைசூடாவதும் துயில்மறப்பதும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85293/

’வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 79

பகுதி பத்து: நிழல்கவ்வும் ஒளி- 3 புரவி துணிகிழிபடும் ஓசையில் செருக்கடித்ததைக்கேட்டு கர்ணன் விழித்தெழுந்தான். அந்த உளஅசைவில் சற்றே இருக்கை நெகிழ்ந்து மீண்டான். கடிவாளத்தைப் பற்றியபடி விழிதூக்கி நோக்கினான். விண்ணில் ஒரு புள் முரசுத்தோல் வழிக்கப்படும் ஓசையுடன் கடந்துசென்றது. எதிரொலிபோல இன்னொரு பறவை ஓசையிட்டது. அடுத்த கணத்தில் பல்லாயிரம் பறவைக்குரல்கள் எழுந்து காற்றை சூழ்ந்தன. கர்ணன் திரும்பி சூரியனை பார்த்தான். வானில் மிகமெலிதாக செந்நிற வளைகோடு ஒன்று தெரியத்தொடங்கியது. குருதிதொட்ட கிண்ணமொன்றை வைத்து எடுத்ததுபோல. பறவையொலிகள் பெருகியபடியே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85287/

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 78

பகுதி பத்து   : நிழல்கவ்வும் ஒளி- 2 இந்திரப்பிரஸ்தத்தின் தெருக்களை புரவி நன்கறிந்திருந்தது. அவன் உள்ளத்தையும் கால்களினூடாக அது உணர்ந்து கொண்டிருந்தது. சீரான பெருநடையில் மையச்சாலையை அடைந்து சாலையோரங்களிலும் இல்லமுகப்புகளிலும் கடையின் ஓரங்களிலும் சதுக்கங்களிலும் நிரம்பி அலையடித்த மக்களின் தலைப்பெருக்குகளினூடாக வகுந்து சென்றது. எதிரே வந்த களிறுகளையும் மஞ்சல்களையும் தேர்களையும் பல்லக்குகளையும் இயல்பாக விலக்கி வளைந்தது. அந்நகரை நூல்முனை ஊசி என அது தைத்துக்கோப்பதாக தோன்றியது. நெடுநேரம் கழித்தே தான் எங்கிருக்கிறோம் என்பதை கர்ணன் உணர்ந்தான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85238/

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 77

பகுதி பத்து: நிழல் கவ்வும் ஒளி- 1 தேர் வரைக்கும் துரியோதனனை கர்ணன் தன் தோள்வல்லமையால் தூக்கிக்கொண்டு சென்றான். துரியோதனனின் குறடுகள் தரையில் உரசி இழுபட்டன. நோயுற்றவனைப்போல மெல்ல முனகிக்கொண்டிருந்தான். துச்சாதனன் இயல்படைந்து துரியோதனனின் மறுகையை பற்ற வந்தபோது அவனை கர்ணன் விழிகளால் விலக்கினான். அரண்மனைப்படிகளில் அவர்கள் இறங்கி தேர்முற்றத்துக்கு வந்தபோது துரியோதனன் யானைமூச்சென பெருமூச்சுவிட்டான். கர்ணன் தன் உயரத்தால் துரியோதனனை முழுமையாக தூக்கி நீட்டி தான் தூக்கிச்செல்வதுபோல் தோன்றாவண்ணம் தோளில் கை வளைத்து அழைத்துச் சென்றான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85213/

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 76

பகுதி ஒன்பது – மயனீர் மாளிகை –  13 இரு தாமிரக்கதவுகள் உள்ளங்கைக்குடுமிக்குழிகளில் உருளைகள் வழுக்கிச்சுழன்று ஓசையின்றி விரியத்திறக்க பேரமைச்சர் சௌனகரும் மறுபக்கம் அமைச்சர் சித்ரகரும் நின்று அனைவரையும் உண்டாட்டு அறைக்கு வரவேற்றனர். “வருக! பருவடிவ உணவு அனல்வடிவம் கொள்ளட்டும்! உண்பதை அமுதாக்கும் அழிவற்ற தேவர்கள் வந்து அவை நிறைக்கட்டும்!” என்று தருமன் கைகூப்பி சொன்னான். ஒவ்வொருவரையும் வரவேற்று தலைவணங்கி புன்னகைத்து ஓரிரு சொல் முகமன் சொல்லி வருகைப்படுத்தினான். “உண்டாட்டறையிலும் மஞ்சத்தறையிலும் பகைமைகள் இல்லை” என்றார் தமகோஷர். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85193/

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 75

பகுதி ஒன்பது : மயனீர் மாளிகை – 12 துரியோதனன் திகைத்து மாளிகையின் சுவர்களை நோக்கி “ஆசிரியரே” என்றான். திரும்பி கர்ணனிடம் “என்ன நிகழ்கிறது அங்கரே?” என்று கூவினான். கர்ணன் தன் விழிகளை வேற்றிருப்புகளென உணர்ந்தான். அவற்றை மூடித்திறந்து அக்காட்சியை கலைக்க முயன்றான். அவன் முன் தூண்களென சுவர்களென கூரையென திரைகளென விரிந்திருந்த பெருங்கூடம் விண்பெருங்கை ஒன்றால் தொடப்பட்ட நீர்பாவை என அலைவு கொண்டது. நிழல்வெளியென இழுபட்டது. ஒவ்வொன்றும் பருவென புறப்பரப்பு இறுகிக் காட்டிய செறிவை இழந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85112/

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 74

பகுதி ஒன்பது : மயனீர் மாளிகை – 11 துரியோதனனுடன் இந்திரப்பிரஸ்தத்தின் அரசப்பெருவீதிகளின் வில்வளைவுகளினூடாக சுழன்று மேலேறிச் சென்றுகொண்டிருந்த கர்ணன் கைகளைக் கட்டியபடி குழலும் மேலாடையும் பறக்க தேர்த்தட்டில் அசையாமல் நின்று நோக்கில்லா நோக்குடன் இருந்தான். அவனருகே மென்மயிர் உறையிட்ட பீடத்தில் கால் நீட்டி சாய்ந்து அமர்ந்திருந்த துரியோதனன் கால்குறடுகளால் தேர்த்தட்டை தட்டியபடி தனக்குள் இசைக்கீற்றொன்றை முனகிக்கொண்டு இந்திரப்பிரஸ்தத்தின் மாளிகை நிரையை நோக்கியபடி வந்தான். அரண்மனைக்கோட்டையின் வளைவில் அவர்களை காவலர்கள் தலைவணங்கி வரவேற்றனர். துரியோதனன் காவலர் தலைவனிடம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85064/

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 73

பகுதி ஒன்பது : மயனீர் மாளிகை – 10 மஞ்சத்தறையின் எடைமிக்க கதவு கிரீச்சிட்டு திறக்க, அழுந்தி ஒலித்த காலடிகளுடன் உள்ளே வந்த முனிவரை காய்ச்சல் படிந்த கண்களால் கர்ணன் நிமிர்ந்து நோக்கினான். மரவுரி உடுத்த கொழுத்த உடல், மார்பில் விழுந்த சாம்பல்கலந்த வெண்தாடி, இரு குருதிக் குமிழிகள் போல அசைந்த ஒளியற்ற விழிகள். மெல்ல அவனை நெருங்கி அருகே நின்று குனிந்து பார்வையற்ற கைகளால் அவன் மேல் துழாவினார். “யார்?” என்று அவன் கேட்டான். ஆனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84988/

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 72

பகுதி ஒன்பது : மயனீர் மாளிகை – 9 விழிகொண்ட நாள்முதல் பச்சை நிறமன்றி பிறிதொன்றை அறியாதவர்கள் காண்டவத்து தட்சநாகர்கள். அங்கு இருளும் ஒளியும் ஆகி நின்றது பசுமையே. அனலென்று அவர்கள் அறிந்ததெல்லாம் இலைமீறிவந்த கதிரொளியும் நீரில் எழுந்த அலையொளியும் தளிரில் எழுந்த உயிரொளியும் மலரில் எழுந்த வண்ணங்களும் மட்டுமே. தங்களைச்சூழ்ந்து செந்நிறப்பெருநாவுகள் எழுந்து காற்றில் விரிந்து படபடத்தாடியதைக் கண்டதும் இளநாகர் கைசுட்டி உவகைக்குரல் எழுப்பியபடி அதை நோக்கி ஓடத்தலைப்பட்டனர். அஞ்சிய அன்னையர் அவர்களை அள்ளியெடுத்து ஈரப்பசுமைக்குள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85047/

Older posts «