Category Archive: வெண்முகில் நகரம்

வெண்முகில் நகரம்

வெண்முரசு நாவல் வரிசையில் வெண்முகில்நகரம் கிழக்கு பதிப்பகத்தால் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. 1200 ரூ விலையுள்ளது இந்நூல். பாஞ்சாலிக்கும் ஐவருக்குமான உறவையும் அவ்வுறவிலிருந்து கிளைக்கும் அதிகாரப்போட்டியையும் சித்தரிக்கிறது கேசவமணி வெண்முகில் நகரத்திற்கு எழுதிய குறிப்பு

Permanent link to this article: https://www.jeyamohan.in/80312/

வெண்முகில் நகரம்: முன்னுரை

இந்திரப்பிரஸ்தம் விண்நிறைந்த முகில்நிரையை ஆளும் இந்திரன் பெயரால் அமைந்த நகரம். மகாபாரதப் பின்னணியைக் கொண்டு நான் எழுதிவரும் வெண்முரசு நாவல் வரிசையின் ஆறாவது படைப்பு இது. இந்திரப்பிரஸ்தம் உருவாவதற்கான பின்புலத்தை விரிந்த புனைவுவெளியாக இது காட்டுகிறது. இதன் மையம் பாஞ்சாலிதான். ஐந்து குலங்களின் கொழுந்து அவள். ஐவரும் அவளை மணந்து அறியும் ஐந்து முகங்களெனத் தொடங்கும் இந்நாவல் அவள் அஸ்தினபுரியின் அரசியென ஆகி இந்திரப்பிரஸ்தத்தை அமைக்க ஆணையிடும் இடம் வரை வருகிறது. மகாபாரதத்தின் மாபெரும் பூசலின் ஒவ்வொரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77804/

வெண்முகில் நகரம் முன்பதிவு இன்றுடன் முடிவு

வெண்முகில்நகரம் செம்பதிப்புக்கான முன்பதிவு இன்றுடன் முடிகிறது. இது கெட்டி அட்டை பதிப்பு. ஓவியங்கள் இல்லை. கிழக்கு பதிப்பகத்தின் தளத்துக்குச் சென்று பதிவுசெய்துகொள்ளலாம் கிழக்கு தளம் வெண்முகில்நகரம் முன்பதிவு வெண்முரசு வரிசை நூல்களை வாங்க: முதற்கனல் (செம்பதிப்பு) மழைப்பாடல் (செம்பதிப்பு) வண்ணக்கடல் (செம்பதிப்பு) நீலம் – விரைவில் வெளியாகும். பிரயாகை (செம்பதிப்பு) முதற்கனல் (நார்மல் பதிப்பு) மழைப்பாடல் (நார்மல் பதிப்பு) வண்ணக்கடல் (நார்மல் பதிப்பு) நீலம் – விரைவில் வெளியாகும். பிரயாகை (நார்மல் பதிப்பு) வெண்முகில் நகரம் (நார்மல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77745/

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 91

பகுதி 17 : வண்ணப்பெருவாயில் – 10 சுதுத்ரியின் கரைக்கு பூரிசிரவஸ் வந்துசேர்ந்தபோது மாலை சிவக்கத் தொடங்கியிருந்தது. அவனுடைய புரவி நன்கு களைத்திருந்தது. கோடையில் நீர் மேலும் பெருகுவது சிந்துவின் தங்கைகளின் இயல்பு என்பதனால் நீர்விளிம்பு மேலேறி வண்டிப்பாதை நேராகவே நீரில் சென்று மூழ்கி மறைந்தது. கரையோரத்து மரங்களெல்லாம் நீருக்குள் இறங்கி நின்றிருக்க நீருக்குள் ஒரு தலைகீழ்க்காடு தெரிந்தது. மழைக்கால நீர்ப்பெருக்கின் கலங்கலும் குப்பைகளும் சுழிப்புகளும் இன்றி மலையுச்சிப் பனி உருகி வந்த நீர் தெளிந்து வானுருகி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74526/

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 90

பகுதி 17 : வண்ணப்பெருவாயில் – 9 திரௌபதி குனிந்து மூன்றுமுறை அஸ்தினபுரியின் மண்ணை வணங்கி அதன் ஒரு துளியை எடுத்து நெற்றி வகிட்டில் அணிந்துகொண்டதும் இசை அடங்கியது. சூதர்களும் அணிப்பரத்தையரும் சேடியரும் மங்கலைகளும் பின்வாங்கி தேர்களை நோக்கி சென்றனர். அப்பால் தேர்கள் அணிவகுப்பதற்கான ஆணை ஒலித்தது. சௌனகர் வணங்கியபடி சென்று திரௌபதியை அணுகி “அஸ்தினபுரி தங்கள் பாதங்களை அன்னை என ஏற்று மகிழ்கிறது இளவரசி. இந்த நாள் இந்நகரின் வரலாற்றில் அழியாநினைவாக நீடிக்கும். பாஞ்சால ஐங்குலங்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74509/

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 89

பகுதி 17 : வண்ணப்பெருவாயில் – 8 பூரிசிரவஸ் இரவு முழுக்க துயில்கொள்ளவில்லை. முந்தையநாள் மாலையிலேயே நகரெங்கும் விழாவுக்கான ஒருக்கங்கள் தொடங்கிவிட்டிருந்தன. நகரின் அனைத்து சந்திப்புமுனைகளிலும் யானைமேல் ஏற்றப்பட்ட முரசுடன் கொம்பூதிகள் துணைக்க நிமித்திகர்கள் வந்து நின்று மறுநாள் திரௌபதி நகர்புகுவதையும் அதை அரசப்பெருவிழாவாக கொண்டாட பேரரசர் ஆணையிட்டிருப்பதையும் அறிவித்தனர். முதலில் அச்செய்தி மக்களை குழப்பியது. ஆண்கள் அதன் அரசியல் உட்பொருளைப்பற்றி கூடிக்கூடி நின்று பேசிக்கொண்டிருந்தனர். பெண்கள் உடனே திரௌபதியைப்பற்றி பேசத்தொடங்கினர். ஆனால் விழவுக்கான ஒருக்கங்கள் தொடங்கியதும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74466/

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 88

பகுதி 17 : வண்ணப்பெருவாயில் – 7 திருதராஷ்டிரரின் அறையை நெருங்கியபோது மெல்ல துரியோதனன் நடைதளர்ந்தான். “யாதவனே, உண்மையில் எனக்கு அச்சமாகவே இருக்கிறது” என்றான். “அஞ்சவேண்டாம், நான் இருக்கிறேன்” என்றான் கிருஷ்ணன். “அவரை கணிப்பது மிகவும் கடினம் யாதவனே” என்றான் யுதிஷ்டிரன். “நானும் அதனாலேயே அஞ்சுகிறேன்.” கிருஷ்ணன் ”நாம் சென்றுகொண்டிருப்பது இக்குடியின் மூத்தவரை சந்திப்பதற்காக…” என்றான். பூரிசிரவஸ் “அவர் இளவரசர்களை தாக்கினாரென்றால் நாமனைவரும் இணைந்தாலும் அவரை தடுக்க முடியாது” என்றான். “அஞ்சவேண்டாம். நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். நான் மட்டுமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74424/

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 87

பகுதி 17 : வண்ணப்பெருவாயில் – 6 தேர்கள் புஷ்பகோஷ்டத்தின் முகப்பு முற்றத்தில் வந்து நிற்பதுவரை பூரிசிரவஸ் தவித்துக்கொண்டே இருந்தான். கூடத்தில் அமர்ந்திருக்கையில், பாண்டவர்கள் ஒவ்வொருவராக வந்தபோதும், எழுந்து வரவேற்று முகமன் சொல்லும்போதும், அவர்கள் சித்தமாகி வந்ததும் தருமனுடன் தேரில் ஏறிக்கொண்டபோதும் அவன் உள்ளே அந்த சிறிய சந்திப்பின் ஒவ்வொரு சொல்லும் மீண்டும் மீண்டும் சுழன்றுகொண்டிருந்தது. முகத்தைச்சுற்றி பறக்கும் ஈக்களை துரத்துபவன் போல அவன் அவற்றை அகற்ற முயன்றான். விலகி மீண்டும் அணுகின. வியப்பாக இருந்தது. அந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74416/

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 86

பகுதி 17 : வண்ணப்பெருவாயில் – 5 பூரிசிரவஸ் உள்ளே நுழைந்தபோது துரியோதனன் அருகே கர்ணன் பீடத்தில் அமர்ந்திருக்க கீழே துச்சாதனன் படுத்திருந்தான். பூரிசிரவஸ் ஒருகணம் திகைத்து நோக்க “ஒன்றுமில்லை, இளையோனால் நெடுநேரம் அமரமுடியவில்லை” என்றான் துரியோதனன். துச்சாதனன் புன்னகைசெய்தான். துரியோதனன் கையசைக்க பூரிசிரவஸ் அமர்ந்ததும் “அவர்கள் நேற்று வந்துவிட்டனர்” என்றான். அவன் சொல்வதென்ன என்று புரிந்து பூரிசிரவஸ் மேலே எதிர்பார்த்து அமர்ந்திருந்தான். “தருமனும் அர்ஜுனனும் சகதேவனும் மதுராவிலிருந்து கிளம்பி மாலையிலேயே வந்தனர். பின்னிரவில் பீமனும் நகுலனும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74393/

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 85

பகுதி 17 : வண்ணப்பெருவாயில் – 4 அவை புகுந்த கிருஷ்ணன் கைகூப்பியபடி சென்று பீஷ்மரை அணுகி அவரது கால்களில் எட்டுறுப்பும் நிலம்தொட விழுந்து வணங்கினான். அவன் அருகே வருவதை அறியாதவர் போல அமர்ந்திருந்தவர் அவன் கால்களில் விழுந்ததும் துடித்து எழுந்துகொண்டார். அவரது நீண்ட கைகள் பதறின. “என்ன, என்ன இது?” என்று உதடுகள் அதிர சொல்லி “நான் என்ன வாழ்த்துவது? நீ…” என்றார். “வாழ்த்துங்கள் பிதாமகரே” என்றார் விதுரர். “மண்ணுலகம் உன்னுடையது… அதை பேணுக” என்றார் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74378/

Older posts «