வெண்முரசு முதலாவிண்

முதலாவிண்

கல்பொருசிறுநுரை, முதலாவிண்- முன்பதிவு

கல்பொருசிறுநுரை – செம்பதிப்பு மற்றும் முதலாவிண் – செம்பதிப்பு வெண்முரசு நாவல் வரிசையின் இறுதி நாவல்களான இவ்விரண்டு நாவல்களையும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திலிருந்து வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம். கல்பொருசிறுநுரை 848 பக்கங்கள் கொண்ட நாவல், விலை ரூ 1300/-. முதலாவிண் 160 பக்கங்கள் கொண்ட நாவல்,...

நிறைவில்…

‘மூவாமுதலா உலகம்’ என  சீவகசிந்தாமணி தொடங்குகிறது.  வளராத, முதலென இல்லாத உலகம். நான் விண்ணை தொடக்கமற்றது என எண்ணுகிறேன். முடிவற்றது என்பதைவிட அது நெஞ்சை உறையவைக்கும் ஒரு கருத்து. ஆகவே இத்தலைப்பு, முதலாவிண். பாண்டவர்களின்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-16

தென்னிலத்தில் இருந்து மீள்கையில் சீர்ஷன் ஆஸ்திகமுனிவரின் நாகர்நிலத்துக்கு சென்றான். வேசரதேசத்தில், கருநீல நதியோடும் கிருஷ்ணை நதிக்கரையில், புஷ்கரவனத்தில் அமைந்திருந்த நாகர்குலத்து அன்னை மானசாதேவியின் ஆலயத்தையும், அருகே அன்னைக்கு ஜரத்காரு முனிவரில் பிறந்த மைந்தன்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15

தென்குமரிக் கடலுக்குள் ஆழத்தில் இருந்து எழுந்து ஒளிகொண்டு நின்றிருந்த மகேந்திரமலையின் முடிமேல், ஒரு காலூன்றி ஓங்குதவம் செய்த கன்னியின் அடிச்சுவட்டில் அமர்ந்து, அஸ்வக குலத்து சபரியின் மைந்தனான சீர்ஷன் எனும் சூதன் கிருஷ்ண...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-14

ஜனமேஜயனின் வேள்விப்பந்தலில் சூததேவராகிய உக்ரசிரவஸ் தன் ஏடுகளை படித்து முடித்து மூடி வைத்து அவற்றின் மேல் வலக்கையின் சுட்டுவிரல்தொட்டு அமர்ந்து ஊழ்கத்தில் ஆழ்ந்தார். வேள்விப்பந்தலில் முற்றமைதி நிலவியது. வேள்விச்சுடர் எரிந்துகொண்டிருந்தது. வியாசர் தன் அமைதியை...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13

குகையின் இருள் மேலும் செறிந்து பருவடிவென, பசை என, படலம் என, உடலை உந்தி பின் தள்ளும் விசையென மாறியது. ஒவ்வொருவரும் அவ்விருளை எதிர்த்து போரிடுபவர்கள்போல கைகளை முன்னால் நீட்டி, முழு விசையால்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12

அவைக்கூடுகை முடிந்ததுமே எந்த முறைமையையும் பேணாமல், எவரிடமும் ஒரு சொல்லாலோ விழியசைவாலோகூட விடைகொள்ளாமல், அவையிலிருந்தே யுதிஷ்டிரனும் இளையோரும் திரௌபதியும் நகர்நீங்கினர். அரண்மனையில் எவரும் துயர்கொள்ளவில்லை. எவரும் வழியனுப்பவில்லை. உடன் செல்லவும் எவருமில்லை. அந்நிலமே...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11

அஸ்தினபுரியின் அவைக்கூடத்தில் அமர்ந்திருந்தவர்கள் பொறுமையிழந்தவர்களாக உடலை அசைத்துக்கொண்டிருந்தனர். ஏவலர்களிடமும் அந்தப் பொறுமையின்மை இருந்தது. சம்வகை அவையை நோக்கியபடி நின்றாள். யுயுத்ஸு அங்கிலாதவன் போலிருந்தான். இளையோர் நால்வரும் நிலம்நோக்கி உடல் அசைவிலாது உறைந்திருக்க அமர்ந்திருந்தனர். யுதிஷ்டிரன்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10

முரசுகளும் கொம்புகளும் முழங்கி ஓய்ந்தன. அவைநடைமுறைகளை அறிவிக்கும்பொருட்டு பட்டுத்தலைப்பாகையும் மேலாடையும் அணிந்த இளம்நிமித்திகன் அறிவிப்பு மேடையில் ஏறினான். வெள்ளிக்கோலை இருபுறமும் சுழற்றி தலைவணங்கி, உரத்த குரலில் அவன் அஸ்தினபுரியின் குடிவரிசையை கூறினான். “பிறவா...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9

அஸ்தினபுரியின் அவை கூடத்தொடங்கியிருப்பதை முரசுகள் அறிவித்தன. பெருவணிகர்கள் சிறு குழுவாக அரசமுற்றத்தில் தேரிலிருந்து இறங்கி, காவலருக்கு தங்கள் முத்திரைக் கணையாழிகளைக் காட்டி ஒப்புதல் பெற்று, அவைக்கு சென்றனர். வெவ்வேறு வணிகர்குடிகளும் வேளாண்குடிகளும் ஆயர்குடிகளும்...