Category Archive: பிரயாகை

பிரயாகை

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 92

பகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை – 5 நள்ளிரவில் மூன்றாம் சாமத்தின் தொடக்கத்துக்காக பெருமுரசு ஒலித்தது. மிதுனராசிக்கு இடம்பெயர்ந்த வியாழன் ஊதப்பட்ட அனல்துண்டு போல சந்திரன் சூடிய மணிமுடியில் ஒட்டியிருந்து ஒளிவிட்டது. காலடியில் ரோகிணி ஊசி முனை போல சுடர்ந்து அமர்ந்திருந்தாள். சந்திர வட்டம் முகிலில் முழுமையாக மறைந்து பின்னர் மறுபக்கம் வெளிப்பட படபடத்தபடி காகம் ஒன்று மரத்தில் இருந்து எழுந்து வானில் சுழன்று பின் அமைந்தது. காம்பில்யத்தின் தெற்குக்கோட்டை வாயிலின் அருகே பெருவீதியின் மும்முனையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70068

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 91

பகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை – 4 பாஞ்சாலத்தின் பேரமைச்சர் கருணர் கங்கையின் மறுகரையில் முந்தையநாள் இரவே தன் அகம்படியினருடன் சென்று தங்கியிருந்தார். காலையில் விடிவெள்ளி எழுந்ததுமே கிளம்பி ரிஷபவனம் என்று அழைக்கப்பட்ட சிறிய சோலைக்குள் அமைந்திருந்த துர்வாசரின் கானில்லத்தை அடைந்தார். மரப்பட்டைகளாலும் கங்கைக்கரைக் களிமண்ணாலும் கட்டப்பட்டு ஈச்சஓலையாலும் புல்லாலும் கூரையிடப்பட்ட பன்னிரண்டு சிறிய குடில்கள் பிறைவடிவில் அங்கே அமைந்திருந்தன. காலைக்காற்றில் அவற்றில் கட்டப்பட்டிருந்த கொடிகள் பறவைச்சிறகடிப்பு போல படபடத்தன. குடில்களின் நடுவே இருந்த முற்றத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69979

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 90

பகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை – 3 விதுரர் தன் அணிப்படையினருடனும் அகம்படியினருடனும் காம்பில்யத்தை அடைந்தபோது அந்தியாகி விட்டிருந்தது. ஆகவே காம்பில்யத்திற்கு சற்று அப்பால் கங்கைக் கரையிலேயே படகுகளை கரைசேர்த்து இரவு தங்கினார்கள். நீண்டபயணத்தால் களைத்துவிட்டிருந்த படகோட்டிகள் படகுகளைக் கட்டியதுமே ஆங்காங்கே படுத்து துயிலத் தொடங்கினர். இரவுக்காவல் வீரர்கள் மட்டும் நீண்ட வேல்களும் வாள்களுமாக படகுகளின் அமரங்களில் காவலிருக்க விண்மீன்கள் முழுதாக எழுவதற்குள்ளாகவே அனைவரும் துயின்று விட்டிருந்தனர். விதுரர் தன் பெரும்படகின் மூன்றாம் அடுக்கின் கூரைமேல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69855

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 89

பகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை – 2 விதுரர் இடைநாழியில் நடக்கையில் கனகன் பின்னால் வந்து “அரசர் சினம் கொண்டிருக்கிறார்” என்றான். விதுரர் என்ன என்பது போல திரும்பி நோக்க “தாங்கள் அவரை மூன்றுநாட்களாக சந்திக்கவில்லை என்பதே முதன்மையானது” என்றபின் ஒருகணம் தயங்க விதுரர் தலையசைத்தார். கனகன் “நேற்றுமுன்னாள் இரவில் அவரே ஒற்றர்தலைவர் சத்யசேனரை அழைத்து பேசியிருக்கிறார்” என்றார். விதுரர் நின்று “என்ன?” என்றார். கனகன் “என்ன சொன்னார் என்பது தெரியவில்லை. ஆனால் நேற்றுகாலை சத்யசேனரின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69783

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 88

பகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை – 1 புலரியின் முதல் முரசொலி கேட்டு எழுந்தபோது விதுரர் அதுவரைக்கும் இரவு முழுக்க தனக்குள் முரசொலி கேட்டுக்கொண்டிருந்ததைப்போல் உணர்ந்தார். எழுந்து மஞ்சத்திலேயே சப்பணமிட்டு அமர்ந்து கைகளை சின் முத்திரை பிடித்து வைத்துக்கொண்டு கண்களை மூடி எண்ணங்களின் ஒழுக்கை நோக்கி அமர்ந்திருந்தார். முரசொலி அப்போதும் கேட்டுக்கொண்டிருந்தது. வரும் வரும் வரும் என அது சொல்வதுபோல. உடைந்து சிதறிப்பெருகும் எண்ணங்கள். அவை மீளமீள ஒன்றையே சென்று தொட்டுக்கொண்டிருந்தன. அவர் தன்னை கலைத்துக்கொண்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69715

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 87

பகுதி பதினாறு : மாயக்கிளிகள் – 7 சற்றுநேரம் கழித்துத்தான் என்ன நிகழ்ந்தது என்று வைதிகர்களின் அவை புரிந்துகொண்டது. எங்கிருந்தோ “வென்றான் பிராமணன்” என்று ஒரு தனிக்குரல் பீறிட்டது. இளம் வைதிகர்கள் எழுந்து கைகளைத் தூக்கி உரக்கக் கூச்சலிட்டு நடனமிட்டனர். அலையலையாக மேலாடைகளைத் தூக்கி வீசினர். யாரோ “அவர்கள் வைதிகர்கள் அல்ல. அவர்கள் பாண்டவர்கள்” என்று கூவியதை எவரும் செவிகொள்ளவில்லை. அப்பால் குடிகளவையிலும் பெருங்கூச்சலும் கொண்டாட்டமும் திகழ்ந்தது. எதுவோ ஒன்று அனைவரையும் கொண்டாட வைத்தது.எளியோன் ஒருவன் வல்லமை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69641

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 86

பகுதி பதினாறு : மாயக்கிளிகள் – 6 வில்சூடும் போட்டி முடிந்துவிட்டது என்ற எண்ணம் அவையில் பெரும்பாலானவர்களுக்கு உருவாகிவிட்டிருந்தது என்பது பல இடங்களிலும் எழுந்த கலைந்த ஒலிகளில் இருந்து தெரிந்தது. ஏராளமானவர்கள் தாம்பூலம் போடத் தொடங்கியதை அர்ஜுனன் கண்டான். ஆனால் பாண்டவர்கள் வந்திருக்கிறார்கள் என்ற செய்தியை பாதிக்கும் மேற்பட்டவர்கள் அறிந்திருந்தனர். அங்கே வரும்போது அவர்களிடம் எதிர்பார்ப்பும் இருந்தது. பாண்டவர்கள் இறப்பில் இருந்து மீண்டு பாஞ்சாலியை வெல்ல வந்துள்ளார்கள் என்பது ஒரு கதையாகவே அவர்களிடமிருந்தது. அதுவரை அர்ஜுனன் வரவில்லை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69611

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 85

பகுதி பதினாறு : மாயக்கிளிகள் – 5 மேலும் இரு மன்னர்கள் தோற்று விலகியபின் எவரும் எழவில்லை. கிந்தூரத்தை சேவகர்கள் எடுத்து மீண்டும் அதன் பீடத்தில் வைத்துவிட்டு விலகிச்சென்றனர். மண்ணை அறைந்து அமைந்த மாபெரும் சவுக்கு போல அது அங்கே கிடந்தது. அவையினர் அனைவரும் கர்ணனை நோக்கிக்கொண்டிருக்க அவன் அப்பார்வைகளை முழுதுணர்ந்து முற்றிலும் விலக்கி நிமிர்ந்த தலையுடன் கனவில் என மூடிய விழிகளுடன் அமர்ந்திருந்தான். அர்ஜுனன் திரும்பி திரௌபதியை பார்த்தான். அவளும் அதேபோல எதையும் நோக்காமல் எங்கோ அகம்நிலைக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69590

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 84

பகுதி பதினாறு : மாயக்கிளிகள் – 4 அரங்கின் மறுமுனையில் அரசவீதி நோக்கி திறக்கும் பெருவாயிலுக்கு அப்பால் மக்களின் திரள்குரலும் முரசுகளின் ஓசையும் கலந்து எழுந்த முழக்கம் கேட்டு அனைவரும் திரும்பி நோக்கினர். கோட்டைமுகப்பின் பெருமுரசு கொம்புகள் இணைய முழங்கத் தொடங்கியது. அருகே இருந்த வைதிகர் அர்ஜுனனை நோக்கி “இளவரசி பட்டத்துயானைமேல் நகர்வலம் வருகிறார்கள். அரண்மனை முகப்பை அடைந்துவிட்டார்கள் என்று தோன்றுகிறது” என்றார். தருமன் திரும்பிப்பார்த்து “நகர்வலமா?” என்றான். “ஆம், இன்றுதானே இந்நகர் மக்கள் அவளை இறுதியாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69551

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 83

பகுதி பதினாறு : மாயக்கிளிகள் – 3 பாஞ்சால அரசி பிருஷதி இரவெல்லாம் துயிலவில்லை. ஐந்து அன்னையரின் ஆலயங்களிலும் வழிபட்டு மீண்டதுமே திரௌபதி தன் மஞ்சத்தறைக்குச் சென்று நீராடி ஆடைமாற்றி துயில்கொள்ளலானாள். பிருஷதியைக் காத்து யவனத்துப் பொலன்வணிகரும் பீதர்நாட்டு அணிவணிகரும் கலிங்கக் கூறைவணிகரும் காத்திருந்தனர். நாலைந்துமாதங்களாகவே அவள் பொன்னும் மணியும் துணியுமாக வாங்கிக்கொண்டிருந்தாலும் மணமங்கல நாள் நெருங்க நெருங்க அவை போதவில்லை என்ற பதற்றத்தையே அடைந்தாள். அவள் தவறவிட்ட சில எங்கோ உள்ளன என்று எண்ணினாள். மேலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69538

Older posts «