Category Archive: நீலம்

நீலம்- மொழி மட்டும்

ஆசிரியருக்கு வணக்கம். நீண்ட நாட்களுக்குப்பின் எழுதுகிறேன். நீலம் வாசிக்கத் தொடங்கி ஒரு கட்டத்திற்குமேல் முடியாமல் நிறுத்திவிட்டேன். வாசிக்கத் தொடங்கியபொழுது ஒவ்வொரு சொல்லாய் எழுந்து வந்து என் கைப்பிடித்து தனி ஒரு உலகிற்கு அழைத்துச் சென்றன.. அங்கு ராதையைக் கண்டேன் .. பித்து.. கண்ணனின் தாயைக் கண்டேன் .. பித்து.. கம்சனைக் கண்டேன் .. பித்து .. மீண்டும் ராதை.. பித்து.. பித்து.. பித்து நிலை.. ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் அவ்வுலகில் இருக்க முடியவில்லை.. எந்தச் சொற்களால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87886/

நீலச்சிலை

  ஜெ, வெண்முரசு நாவல்கள் அனைத்தையும் வாங்கியவன் நான். ஒரு நாவலுக்கு படங்கள் அவசியமில்லை என்பது என்னுடைய கருத்து. மேலும் உங்கள் நாவல்கள் என்பவை மொழிவழியாக உருவாக்கும் படங்கள். அவைகளை வண்ணங்களின் படங்கள் இல்லாமலாக்கிவிடும் என்ற அச்சம் எனக்கு ஏற்பட்டிருந்தது. ஆனால் நீலம் நாவலை மட்டும் கடைக்குச் சென்று செம்பதிப்பாக வாங்கினேன். அதன்பின் வெவ்வேறு நண்பர்களுக்காக இரு நூல்கள் வாங்கினேன். என்னைப்பொறுத்தவரை உங்கள் நாவல்களில் மட்டும் அல்ல தமிழிலேயே கூட நீலம்தான் முதன்மையான நாவல். நாவல் என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83851/

நீலம்

அன்புள்ள ஜெயமோகன் நீலம் (சாதாரண பதிப்பு) வந்துவிட்டது. அதை http://www.nhm.in/shop/9789384149246.html இந்த சுட்டியில் வாங்கலாம். நீலம் செம்பதிப்பு இன்னும் சில நாள்களில் வந்துவிடும். வந்ததும் சொல்கிறேன். அன்புடன் பிரசன்னா

Permanent link to this article: https://www.jeyamohan.in/80223/

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 38

பகுதி பன்னிரண்டு: 2. கொடி இடைசுற்றி சுழல்கையில் பாவாடை இதழ்விரித்து மலராவதைக் கண்டு ராதை சிரித்துக்கொண்டாள். காலைமுதலே சுழன்று சுழன்று பின் அமர்ந்து கொண்டிருந்தாள். கைவிரித்து “என் மலர்! உலகிலேயே பெரிய மலர்!” என்று கூவினாள். “தலைசுழலுமடி… எழமுடியாமல் படுப்பாய். விழவுகாண முடியாமலாவாய்” என்றாள் நீர்க்குடம் தளும்ப நடந்து சென்ற கீர்த்திதை. “பெரிய மலர்…” என்று ராதை துள்ளி கைகளை விரித்துக்  காட்டினாள். புன்னகையுடன் கீர்த்திதை உள்ளே சென்றாள். அடுமனையின் மரச்சாளரம் வழியாக அவளறியாமல் எட்டிப் பார்த்தாள். வெண்மணல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62376/

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 37

பகுதி பன்னிரண்டு: 1. முடி இடையில் மஞ்சள்பட்டு சுற்றி இருகாலிலும் சலங்கை கட்டி தலையில் செந்நிறப்பாகை சூடி தார்தொடுத்த பாரிஜாதம் அணிந்து குறுமுழவை மீட்டும் கரங்களுடன் மங்கலச்சூதன் மன்றில் வந்து நின்றான். முழவொலி கேட்டு முன்றிலெங்கும் பரந்த மக்கள் வந்து சூழ்ந்தனர். ஒருவரை ஒருவர் ஒலியமையச் சொல்லிக் கூவினர். அமைதி எழுந்ததும் சூதன் அவைவணங்கி கைதூக்கினான். “வான்புரக்கும் தெய்வங்கள் வாழ்க! வளம் நிறைக்கும் மூதன்னையர் வாழ்க! காவல் தேவர்கள் நம்மைச் சூழ்க! காடும் கழனியும் செழிக்கட்டும். ஆநிரைகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62337/

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 36

பகுதி பதினொன்று: 4. அழிதல் [தொடர்ச்சி]  உடல்தழுவி உளமழிந்து மலைச்சுனைக்கரையில் மலர்ந்தோம். பொன்மீது படிந்த நீலம். பகல்மேல் அமைந்தது இரவு. தத்தும் கால்கொண்டு நடந்தது நீலக்குருவி. சிறகடித்து மண்ணில் சுழன்றது. சிற்றுகிர்கள் படிந்த சதுப்பு. பெருமுரசத் தோலாக புவிப்பரப்பு ஓசையிட பெருநடையில் எழுந்தது பெண்புரவி. பொற்கொன்றைப் பூக்குலைமேல் அமர்ந்தது நீலமயில். மலையிழிந்த பெருநதி பேரொலி எழுப்பி கரம்நூறு பரப்பி கொப்பும் கிளையும் குமிழியும் மலரும் சேறும் நுரையுமாய் அலைபுரண்டு கடல் சேர்ந்தது. மண்செம்மை கடல்நீலத்தில் கலந்தது. துள்ளி முடிவில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62250/

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 35

பகுதி பதினொன்று: 4. அழிதல் காலையில் வந்து கையருகே அமர்ந்து குறுஞ்சிறகடித்து குரலெழுப்பியது நீலக்குருவி. வானம் உருகிச் சொட்டிய துளி. கருவிளை இதழை சிறகாக்கி காற்றில் எழுந்த பூவரசம். கருகுமணி வாய்திறந்து ‘கண்ணா! கண்ணா!’ என்றது. துயில் மலர்ந்து எழுந்தமர்ந்ததும் துடித்தெழுந்து ஆடைதேடின கைகள். அதுவரையில் யமுனையில் ஓர் இளமீனெனத் திளைத்திருந்தேன். ஆடைகொண்டு உடல்மூட அசைந்தால் அகல்வானோ சிறுநீலன் என்று அமைந்திருந்தேன். சிறகதிர, சிறு வாலதிர, கூர்முள் அலகதிர, எழுந்தமர்ந்து அதையேதான் சொன்னான். பொன்மேல் எழுந்த நீலம். புதுமலர் போன்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62163/

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 34

பகுதி பதினொன்று: 3. குமிழ்தல் இவையனைத்தையும் இவ்வுலகனைத்தையும் அள்ளி எடுத்து அணைத்திறுக்கி என் அனல் சேர்த்து அழிக்கும் விரைவுடன்தான் இல்லம் விட்டெழுந்தேன். நான் சென்ற வழியெங்கும் தென்றல் வெம்மைகொண்டது. என் உடல்தொட்ட தளிரிலைகள் துடித்துச் சுருண்டன. வளை வாயிலில் விழிவைத்துக் காத்திருந்த விஷநாகம் நான். பகலிறங்கி இரவெழுந்ததும் சொல்பிறந்த நாவென எழுந்தேன். வில்தொடுத்த அம்பென விரைந்தேன். நாகவிஷம் நாகத்தைத் தீண்டுமோ? தழல்வெம்மையில் தழல் துடித்தாடுமோ? நாகமே அதன் படமென்றாயிற்று. உட்கரந்த கால்களின் விரைவை உடல் கொளாது தவித்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62054/

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 33

பகுதி பதினொன்று: 2. குலைதல் நாணமற்றது மருதம். நானென்று தருக்கி நதிக்கரையில் நின்றிருக்கும் கீழ்மை கொண்டது. ஆலென்றும் அரசென்றும் குலம் சொல்லி ஏய்க்கும் குணம் கொண்டது. எத்தனை இழிவு நீரோடும் இடமெல்லாம் வேரோடிச்செல்லல். எத்தனை மடமை உண்ட நீரெல்லாம் உடல் நிறைந்தோட கிளை பரப்பி நிற்றல். அளி அளி என்று விரிந்த இலைகள். இன்னும் இன்னும் என எழுந்த செந்தளிர்கள். சிரிக்கும் நீரோடைகள் சொல்லிச் செல்வது அதன் கைமீறலை. காட்டுச்சுனைகளின் ஆழம் அறிவது அதன் கால் மீறலை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62037/

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 32

பகுதி பதினொன்று: 1. குவிதல் எவருமில்லை எவ்விழியும் இல்லை என்று எண்ணி நிறைந்தபின் மூடிய விரல் விரித்து முழுநிலவை வெளியே எடுத்தது வசந்த கால இரவு. ஆயிரம் சுனைகளில் பால்நிலவு எழுந்து ஆம்பலை தழுவியது. விருந்தாவனத்தின் ஒவ்வொரு கல்லும் வெண்ணொளி பட்டு கனிந்தன. உயிர்கொண்டு அதிர்ந்தன. உதிர்ந்து பரவிய இதயங்களாகித் துடித்தன. இலைகளின் கீழும் நிலவொளி அலைக்கும் முழுமை. எங்கும் நிறைந்தது இனியேதுமில்லை என்ற வெறுமை. வெண்ணிலவு விரிந்த வெளியில் எல்லா இலைகளும் தளிர்களாயின. தேன்சுவைக்கும் இளமைந்தர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61957/

Older posts «