வெண்முரசு நீர்க்கோலம்

நீர்க்கோலம்

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 20

19. புறமெழுதல் சகதேவன் தங்கியிருந்த சிறுகுடில் விராடநகரியின் தென்மேற்கு மூலையில் இருந்த பிருங்கவனம் என்னும் சோலைக்குள் அமைந்திருந்தது. நகருக்குள் வரும் தவத்தார் தங்குவதற்கான இடமாக அது நீண்ட காலமாக உருவாகி வந்திருந்தது. நகரிலிருந்து எந்த...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 67

66. அரவுக்காடு திரும்பிப் பார்க்கவேண்டுமென்ற விழைவு உள்ளிருந்து ஊறி எழுந்து உடலெங்கும் மெல்லிய அதிர்வாக, விரல்களில் துடிப்பாக, கால்களில் எடையாக நளனை ஆட்கொண்டது. ஒவ்வொரு அடிக்கும் தன்னைப் பற்றி பின்னிழுக்கும் கண் அறியாத பலநூறு கைகளை பிடுங்கிப்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 31

30. முதற்களம் “தாங்கள் அறிந்திருப்பீர்கள், நெடுநாட்களுக்கு முன் இங்கு நளமாமன்னருக்கும் அவரது தம்பிக்குமான பூசல் ஓர் உணவுக்களத்தில்தான் வெடித்தது. எந்தப் பூசலும் பின்திரும்ப முடியாத ஒரு புள்ளியில் உச்சம்கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்லும். அப்புள்ளி...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 87

86. அனலும் குருதியும் இரவும்பகலும் படைகள் விரைவழியாத சீர்நடையுடன் சென்றுகொண்டிருந்தன. வழியில் மூன்றுமுறை சிற்றோய்வுக்கும் கால்மாற்றுதலுக்கும் மட்டும் பொழுதளிக்கப்பட்டது. புரவிகளுக்கு கடுமையான மது அளிக்கப்பட்டு அவை தலைதளர்ந்து விழிசரித்தபோது கால்களை கட்டி வீழ்த்தி தசைகளை...

‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-10

 9. ஊசலின் தாளம் அரசவையில் புலவர்களுடன் அமர்ந்து நூலாய்கையில், அவைப்பணிகள் முடித்து நீராட்டறைக்குச் சென்று உடலை சேடியரிடம் அளித்துவிட்டு அமர்ந்திருக்கையில், அணிபுனைந்து மஞ்சத்தறைக்கு செல்லும்போது, அவ்வப்போது அவன் எண்ணமே வந்து கொண்டிருந்தது. ஏதோ ஒரு கணத்தில்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 52

51. குருதிக்கடல் சம்பவன் விழித்தெழுந்தபோது எங்கிருக்கிறான் என்பதை அறியாது ஒருகணம் திகைத்தான். புரண்டு கையூன்றியதும் அருகே ஒழிந்த ஈச்சம்பாயைக் கண்டு அனைத்தையும் உணர்ந்து எழுந்து நின்றான். “மேகரே… மேகரே” என்று அழைத்தான். மேகன் அஸ்வகனுடன்...

நீர்க்கோலம்

    ’நீர்கோல வாழ்வை நச்சி நெடிதுநாள் வளர்த்துப் பின்னை போர்க்கோலஞ் செய்துவிட்டார்க்கு உயிர்கொடாது அங்கு போகேன்’ என்ற கம்பராமாயண வரியிலிருந்து இந்த நாவலுக்கான தலைப்பை அடைந்தேன். நீர்க்கோலம் என உருமாறிக்கொண்டே இருக்கும் மானுடர்களின் கதை...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 21

20. பொய்ப்புரவி சகதேவனுக்குப்பின் ஏழு நாட்கள் கடந்து நகுலன் விராடநகரியை சென்றடைந்தான். அரண்மனையின் குதிரைக்கொட்டிலில் தோலாடையும் கையில் சவுக்குமாக வந்து அவன் பணிந்து நின்றபோது தொலைவிலிருந்து அவனைக் கண்ட புரவிகள் திரும்பி நோக்கின. இரு...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 68

67. வாழும்நஞ்சு தமயந்தியின் உடலிலிருந்து நாகநஞ்சு முற்றிலும் அகல பதினான்கு நாட்களாயின. பாஸ்கரரின் தவச்சாலையின் பின்பக்கம் சிறிய தனிக்குடிலில் மரப்பட்டைப் பலகையில் விரிக்கப்பட்ட கமுகுப்பாளைப் பாயில் அவள் கிடந்தாள். பாஸ்கரரின் மாணவர் பரர் அருகிருந்த...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 32

31. நிழற்கொடி பறவைத்தூது வழியாக கலிங்கத்தில் நிகழ்ந்ததென்ன என்று அன்றே தமயந்தி அறிந்தாள். என்ன சூழ்ச்சி என்று அவளால் கணிக்கக் கூடவில்லை. பேரரசி என்றாலும் அவள் சூழ்ச்சியறியாதவளாக இருந்தாள். களம்நின்று எதிர்கொள்ள எவராலும் இயலாத...