வெண்முரசு தீயின் எடை

தீயின் எடை

தீயின் எடை- முன்பதிவு

குருஷேத்ரக் களத்தில் இருண்டவை அனைத்தும் பெய்தொழியும் இறுதி நிகழும் நாவல் இது. போரின் முடிவில் அனைத்தையும் எரித்தபடி எழுகிறது பேரனல். அது விரித்த சாம்பலைக் கரைந்து ஒழுகியபடி பொழிகிறது பெருமழை. மண் தன்னைத்...

எடையின்மையின் பெரும்பசி

குருஷேத்ரக் களத்தில் இருண்டவை அனைத்தும் பெய்தொழியும் இறுதி நிகழும் நாவல் இது. போரின் முடிவில் அனைத்தையும் எரித்தபடி எழுகிறது பேரனல். அது விரித்த சாம்பலை கரைந்து ஒழுகியபடி பொழிகிறது பெருமழை. மண் தன்னை...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-57

அஸ்தினபுரியின் மேற்கே அமைந்திருந்த குறுங்காட்டில் விழிகளை முற்றிலும் இல்லாமலாக்கிய கூரிருளுக்குள் அஸ்வத்தாமன் முன்னால் செல்ல கிருபரும் கிருதவர்மனும் தொடர்ந்து சென்றனர். அஸ்வத்தாமன் செவிகளையும் தோலையும் விழிகளாக ஆக்கிக்கொண்டான். அவன் செல்லும் வழியை மட்டுமே...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56

ஏவற்பெண்டு படிகளுக்கு மேலே தோன்றியதும் நகுலன் எண்ணம் கலைந்தான். அவள் ஒவ்வொரு படியாக இறங்க இறங்க அவன் எளிதாகியபடியே வந்தான். அவள் கீழிறங்கி வந்து தலைவணங்கி “அழைக்கிறார்கள்” என்றாள். அவன் மேலே செல்லத்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55

நகுலன் கைவிடுபடைப் பொறிகளிலிருந்து அம்புகள் எழுந்து பொழிவதை பறவைகளின் ஒலியிலிருந்தே உணர்ந்துகொண்டான். “பின்வாங்குக... முடிந்தவரை பின்வாங்குக!” என ஆணையிட்டபடி திரும்பி காட்டுக்குள் விலகி ஓடினான். கைவிடுபடைப் பொறிகளின் அமைப்பே அண்மையிலிருந்து சேய்மை நோக்கி...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54

கோட்டையின் காவல்மாடங்களில் வெறிப்புடன் செயலற்று ஆங்காங்கே அமர்ந்திருந்த பெண்டிர் நடுவே சம்வகை மட்டும் ஊக்கம் மிகுந்தவளாக அலைந்துகொண்டிருந்தாள். கைவிடுபடைகளின் மேலேறி ஆராய்ந்துகொண்டிருந்த அவளைக் கண்டு முதுமகள் ஒருத்தி வாய்மேல் கைவைத்து நகைத்து “முட்களின்மேல்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-53

அஸ்தினபுரியின் கோட்டைக்குமேல் சம்வகை காவலர்தலைவியாக அமர்ந்திருந்தாள். அஸ்தினபுரியின் யானைக்கொட்டிலில் அவளுடைய அன்னையும் தந்தையும் பணிபுரிந்தனர். அவள் தந்தை யானைப்பாகனாக இருந்தார். பின்னர் யானைகளை பயிற்றுபவராக ஆனார். அவளை இளங்குழந்தையாகவே யானைக்கொட்டிலுக்கு கொண்டுசெல்வதுண்டு. ஒரே...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-52

முன்னால் சென்ற கொடிவீரன் நின்று கையசைக்க நகுலனின் சிறிய படை தயங்கியது. புரவிகள் ஒன்றுடன் ஒன்று முட்டாதபடி அணிவகுத்திருந்தமையால் அவை ஒன்றின் நடுவே இன்னொன்று புகுந்துகொண்டு நீண்டிருந்த படை செறிவுகொண்டு சுருங்கியது. கொடிவீரனைத்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-51

திரௌபதி துயிலில் மயங்கிவிட்டிருந்தாள். மெல்லிய காலடிகளுடன் குந்தி உள்ளே வந்து நின்றபோது சேடி முடிநீவுவதை நிறுத்திவிட்டாள். அதை உணர்ந்து அவள் விழிப்புகொண்டு குந்தியை நோக்கியபின் வணங்கியபடி எழுந்தாள். “அமர்க!” என்று அவள் கைகாட்டிவிட்டு...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-50

கதவு மெல்ல தட்டப்பட்டு “அரசி” என ஏவல்பெண்டு அழைத்தாள். திரௌபதி கண்களைத் திறந்தபோது உள்ளம் நடுக்குகொண்டது. அச்சமின்றி விழித்துக்கொள்ள முடியாதவளாக எப்போது ஆனேன்? அவள் எழுந்து அமர்ந்து குழலை கைகளால் நீவி பின்னுக்குச்...