வெண்முரசு களிற்றியானை நிரை

களிற்றியானை நிரை

களிற்றியானை நிரை – செம்பதிப்பு – முன்பதிவு

களிற்றியானை நிரை – செம்பதிப்பு – வெண்முரசு நாவல் வரிசையில் இருபத்து நான்காவது நாவல் விஷ்ணுபுரம் பதிப்பகத்திலிருந்து வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம். 816 பக்கங்கள் கொண்ட நாவல், விலை ரூ 1200/-. (இப்பதிப்பில்...

மீண்டெழுவன

ஆறாம் வகுப்பு படிக்கையிலேயே அன்றெல்லாம் இலக்கணம் அறிமுகமாகிவிடும். நானோ அன்று பழைய முறைப்படி ஆசிரியர் இல்லம்சென்று தமிழ்படித்தேன். அன்று அறிமுகமான சொல் களிற்றியானைநிரை. அதை பித்தன் என சொல்லி அலைந்தது உண்டு. பின்னர் பத்மநாபபுரம்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை –80

பகுதி ஒன்பது : கலியன்னை ஆதன் முதற்புலரியிலேயே விழித்துக்கொண்டான். அவன் ஒரு கனவு கண்டான். விழித்தும் அக்கனவிலேயே இருந்தான். மீண்டும் அதிலேயே மூழ்கினான். அதில் அவன் ஒரு செம்மண்சாலையினூடாக நடந்து சிற்றூர் ஒன்றை நோக்கித்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 79

பகுதி எட்டு : அழியாக்கனல்-3 தீக்ஷணன் வெளியே நெரிந்த கூட்டத்தில் இறங்கியதுமே அவனை அது அள்ளிச் சென்றது. அவன் தன்னை மறந்து அதில் ஒழுகினான். அது எத்திசை நோக்கி செல்கிறது என அவனால் உணரமுடியவில்லை....

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 78

பகுதி எட்டு : அழியாக்கனல்-2 மீண்டும் அஸ்தினபுரியின் பெருந்தெருவை அடைந்தபோது முதலில் தீக்ஷணன் அமைதியடைந்தான். திரளுக்குள் தன்னை பொருத்திக்கொண்டான். அவன் கைகளும் கால்களும் கைகால் அலைகளில் இணைந்தன. தோள்கள் தோள்களுடன் பிணைந்தன. அவனுக்கான இடம்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 77

பகுதி எட்டு : அழியாக்கனல்-1 தீக்ஷணன் வீட்டுக்கு வந்தபோது இரவு பிந்திவிட்டிருந்தது. அவன் அன்னை வாயிற்படியிலேயே அமர்ந்திருந்தாள். அவன் அவளை தொலைவிலேயே பார்த்தான். மையச்சாலை ஒளியில் மூழ்கி சிவந்த நதி என அலைகொண்டிருந்தபோதிலும் அவன்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 76

பகுதி ஏழு : பெருசங்கம் – 8 சுதமன் உள்ளே நுழைந்தபோது நடுங்கிக்கொண்டிருந்தார். அவர் கைகள் கூப்பியிருந்தன. கால்கள் குழைந்தன. பதற்றத்தில் முதலில் உள்ளே என்ன திகழ்கிறதென்பதையே அவர் கண்கொள்ளவில்லை. பின்னர்தான் அந்த வேலிவட்டத்திற்குள்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 75

பகுதி ஏழு : பெருசங்கம் – 7 சுதமன் குருக்ஷேத்ரத்தை அணுகியபோது காலை வெயில் ஏறிவிட்டிருந்தது. அவர் கங்கையினூடாக படகில் சென்று யமுனைக்குள் நுழைந்து காலையில் படித்துறையில் இறங்கி அங்கிருந்த அஸ்தினபுரியின் காவல்மாடத்திலிருந்து விரைவுத்தேர்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 74

பகுதி ஏழு : பெருசங்கம் – 6 சார்வாகர் உரக்க நகைக்கத் தொடங்கிவிட்டிருந்தார். அவர் எதையோ நோக்கி நகைக்கிறார் என்று அங்கிருந்தோர் எண்ணினார்கள். அவர் நோக்கு எங்கும் பதியாமை கண்டு குழம்பி ஒருவரை ஒருவர்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 73

பகுதி ஏழு : பெருசங்கம் – 5 சுதமன் நகருக்குள் செல்ல விரும்பவில்லை. உப்பரிகையில் நின்று அவர் நகரை நோக்கிக்கொண்டிருக்கையில் ஓர் அச்சத்தை உணர்ந்தார். அவ்வச்சம் எதனாலென அவருக்கு தெரியவில்லை. உயரமான பாறையில் நின்று...