Category Archive: இந்திரநீலம்

இந்திரநீலம் நாவல் செம்பதிப்பு முன்பதிவு

வெண்முரசு நாவல் வரிசையின் ஏழாவது நாவல் இந்திரநீலம், கெட்டி அட்டை , அதிக GSM கொண்ட தாள் , சிறப்பான பைண்டிங் கொண்ட நூல்கட்டு . (இந்த நாவலில் ஓவியங்கள் இல்லை) முன்பதிவில் வாங்குபவர்களுக்கு ஜெயமோகனின் கையெழுத்துடன் நூல் அனுப்பப்படும், நூலை முன்பதிவு செய்ய இங்கே  இப்புத்தகம் உங்களுக்கு பிப்ரவரி முதல் வாரத்தில் அனுப்பி வைக்கப்படும். முன்பதிவு செய்ய கடைசி நாள் – ஜனவரி 25, 2016. முன்பதிவு செய்பவர்கள் கவனத்துக்கு: *முன் பதிவு செய்பவர்களுக்கு தபால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/82550/

திருசூழ் பெருநிலை

வெண்முரசு நாவல் வரிசையில் நீலம் ராதை தன் நிகரற்ற அர்ப்பணிப்பால் கிருஷ்ணனை உருவாக்கி எடுப்பதைக் காட்டியது. இந்திரநீலம் கிருஷ்ணன் தன் காதலால் சத்யபாமை, ருக்மிணி, ஜாம்பவதி, நக்னஜித்தி, மித்ரவிந்தை, லட்சுமணை,பத்ரை ,காளிந்தி என்னும் எட்டு நாயகியரையும் உருவாக்கி எடுப்பதன் கதை. உலகளந்தவனின் உள்ளத்தில் நீங்காது அமர்ந்த எட்டு திருமகள்கள் அவர்கள். நீங்காதவர்கள் பிரியவோ மீண்டும் இணையவோ முடியாது. ஆகவே இதெல்லாம் ஓர் இனிய விளையாட்டு மட்டுமே. அவர்களின் கன்னிமை ஏக்கமும், காதலின் துயரமும், ஆழத்துத் தனிமையும், காமத்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81405/

இந்திரநீலம் நிறைவு

இந்திரநீலம் எழுதத் தொடங்கும்போது இருந்த திட்டத்தை வழக்கம்போல மீறி அதற்குரிய வடிவை தானாகவே அடைந்து முடிந்தது. என்னைப்பொறுத்தவரை இப்படி தன்னிச்சையாக எழுந்து முடிகையிலேயே கச்சிதமான வடிவம் அமைகிறது. எண்ணிக்கோத்து எழுதும்போது எப்போதுமே ஏராளமான சரடுகள் முடிவடையாது நின்றிருக்கும். அப்படைப்பு முழுமையடைவதே இல்லை. எழுத்தில் தர்க்கம் என்பது எத்தனை வலுவற்ற கருவி என்பதை மீண்டும் மீண்டும் கண்டுகொண்டிருக்கிறேன். இலக்கியம் என்பது கனவு. கனவின் துல்லியத்தையும் முழுமையையும் எவராலும் உருவாக்கிக்கொள்ள முடியாது இந்நாவல் பெண்களின் கதை என்ற எண்ணம் இருந்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78235/

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 92

பகுதி பதின்மூன்று : ஆழியின்விழி – 5 துவாரகையின் ஏவலர் காலை முதலே மரக்கலத்தில் பரிசுப்பொருட்களை ஏற்றிக்கொண்டிருந்தனர். ஐந்து நற்சுழிகளும் அமைந்த சோனகநாட்டு வெண்புரவிகள் நூற்றெட்டு முதலில் ஏற்றப்பட்டன. யவன தச்சர்களால் அமைக்கப்பட்ட பதினெட்டு வெள்ளித்தேர்கள். நூறு வெண்கலப் பேழைகளில் அடுக்கப்பட்ட நீலப்பளிங்குப் புட்டிகளில் யவனர் மட்டுமே வடிக்கத் தெரிந்த நன்மதுத்தேறல். அந்த மதுவளவுக்கே மதிப்புள்ளவை அந்தப்புட்டிகள். நூறு மரப்பேழைகளில் பீதர்நாட்டு பட்டுத்துணிகள். சோனகர்களின் மலர்மணச்சாறு நிரப்பப்பட்டு உருக்கி மூடப்பட்ட பித்தளைச் சிமிழ்கள் கொண்ட பன்னிரு பேழைகள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78233/

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 91

பகுதி பதின்மூன்று : ஆழியின்விழி – 4 இளைய யாதவரின் குரலை திருஷ்டத்யும்னன் விழிகளால் என கேட்டு அமர்ந்திருந்தான். அவரது குரல் அரசியரையும் சொல்லற மயக்கியது என்று தோன்றியது. உடலசைவுகள் எழவில்லை. திரைச்சீலைகளை அசைத்த கடற்காற்றில் எழுந்து பறந்த அக்குரல் அறையின் அனைத்து இடங்களிலிருந்தும் கேட்டுக்கொண்டிருப்பதுபோல் தோன்றியது. யமுனைக்கரையில் நிறுத்திச் சென்ற படகை அடைந்தோம். ஓசையின்றிப்பெருகிய யமுனையின் கரிய நீரில் தலைகீழாகத்தெரிந்த நிழல் மேல் ஏறிக் கொண்டோம். பல்லாயிரம் கோடி மீன்விழிகள் செறிந்த பரப்பில் உச்சிவெயிலில் மிதந்தோம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78227/

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 90

பகுதி பதின்மூன்று : ஆழியின்விழி – 3 கடல்மாளிகையின் இடைநாழியின் மறுஎல்லையில் அகன்ற கற்படிகள் மேலேறிச்சென்றன. அவற்றின் வெண்பளிங்குக் கைப்பிடிகள் யவன நாட்டு நுண்ணிய சிற்பங்கள் செறிந்திருந்தன. சாத்யகி ஒவ்வொன்றையாக தொட்டுக்கொண்டு வந்தான். முப்பிரி வேலேந்திய கடல் தெய்வங்கள, மின்னலை ஏந்திய வானக தெய்வங்கள். ஒவ்வொரு சிற்பமும் பிறிதொன்றுடன் பின்னி ஒன்றாகி ஒற்றைப் பரப்பென மாறி நின்றது. “வானமென்பது இடைவெளியின்றி பின்னிப் பரவிய தெய்வங்களின் விழி என யவனர் எண்ணுகிறார்கள்” என்றான் சாத்யகி. “விண்மீன்களைப்போல எத்தனை விழிகூர்கிறோமோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78201/

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 89

பகுதி பதின்மூன்று : ஆழியின்விழி – 2 கடல் மாளிகை கரையிலிருந்து முந்திரிக்கொடி போல வளைந்து சென்ற பாதையின் மறு எல்லையில் முழுத்த கரிய கனியென எழுந்த பெரும்பாறை மேல் அமைந்திருந்தது. நெடுங்காலம் கடலுக்குள் அலை தழுவ தனித்து நின்றிருந்த ஆழத்து மலை ஒன்றின் கூரிய முகடு அது. அதனருகே இருந்த சிறிய கடற்பாறைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து கற்தூண்கள் நாட்டி கற்பாளங்கள் ஏற்றி கட்டப்பட்டிருந்த தேர்ப்பாதை கரையுடன் இணைந்து சுழன்று மேலேறி வந்து அரண்மனையின் பெருமுற்றத்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78160/

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 88

பகுதி பதின்மூன்று : ஆழியின்விழி – 1 சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் புரவிகளில் ஏறி துவாரகையின் வணிகத் தெருவுக்கு வந்து புகைச்சுருள் என வானிலேறிய சுழற்பாதையினூடாக மேலேறினர். நகரம் எப்போதும் போல அசைவுகளும் ஓசைகளும் வண்ணங்களுமாக கொந்தளித்துக் கொண்டிருந்தது. இருபக்கமும் திறந்திருந்த கடைகளின் முன் குவிக்கப்பட்டிருந்த உலர்மீனும் புகையூனும் தேனிலிட்ட கனிகளும் மணத்தன. அதனூடாக இன்கள்ளின் மணத்தை அறிந்த திருஷ்டத்யும்னன் திரும்பி சாத்யகியிடம் “யாதவரே, சற்று கள்ளருந்தி செல்வோம். இக்கணத்தை கொண்டாடுவோம்” என்றான். சாத்யகியின் கண்களில் ஒரு கணம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78115/

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 87

பகுதி பன்னிரண்டு : இமையாநீலம் – 12 இன்றென் அருகில் இரு. இங்கு நீ மட்டுமென இரு. இனியேதுமில்லையென்றாகு. இவையனைத்தும் என மேவு. கடந்துறை. கரந்துள யாவையும் என நிறை. நீ இது. நீயே அது. நீயே இங்கு நின்று உன்னை நோக்கி விழிதிகைத்திருக்கிறாய். உன் சொற்கள் இறுதியொளியுடன் மறைந்த ஊமைத்தொடுவானில் செவ்வொளிக் கதிர்களுடன் தோன்றுகிறாய். நீலவட்டம் தகதகக்க ஏழ்புரவித்தேரில் எழுந்தருள்கிறாய். உன் கண்ணொளியால் புடவி சமைக்கிறாய். நீ நிறைத்த மதுக்கிண்ணத்தை எடுத்து நீயே அருந்துகிறாய். இங்குள …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78078/

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 86

பகுதி பன்னிரண்டு : இமையாநீலம் – 11 மித்திரவிந்தை சிற்றெறும்புகளின் நீள்நிரையை நோக்கிக் கொண்டிருந்தாள். உருசிறுத்து அணுவென்றாகி அவற்றுடன் சென்றாள். ஓசையற்றவை என அவள் எண்ணியிருந்த அவை ஒரு கணமும் ஓயாது உரையாடுபவை என்றறிந்தாள். சென்றவை, வருபவை, ஊடே நின்றதிரும் நிகழ்பவை என அவற்றுக்கும் காலக்களியாட்டு என்பதுண்டு என்றறிந்தாள். மூன்று நிரைகளாக அவை சென்று இறங்கி மறைந்த புற்றின் சிறுவாயிலருகே தயங்கி நின்றாள். அவளை பின்நின்று அணுகிய எறும்புப் பெண்ணொருத்தி “இளவரசி உள்ளே வருக!” என்றாள். “மீள்வேனா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78060/

Older posts «