வெண்முரசு

வெண்முரசு

தீயின் எடை- முன்பதிவு

குருஷேத்ரக் களத்தில் இருண்டவை அனைத்தும் பெய்தொழியும் இறுதி நிகழும் நாவல் இது. போரின் முடிவில் அனைத்தையும் எரித்தபடி எழுகிறது பேரனல். அது விரித்த சாம்பலைக் கரைந்து ஒழுகியபடி பொழிகிறது பெருமழை. மண் தன்னைத்...

வியாசபாரதமும் வெண்முரசும்

  மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, பன்னிரு படைக்களம் படித்துக் கொண்டிருந்தேன்... ஜராசந்தன் வதம் முடிய படித்த போது, எவ்வளவு தகவல்களை இவர் தருகிறார்... இவ்வளவில் பாதி தகவலாவது கங்குலியின் பதிப்பில் திரட்ட முடியுமா என்று திரும்பவும்...

நீலச்சிலை

  ஜெ, வெண்முரசு நாவல்கள் அனைத்தையும் வாங்கியவன் நான். ஒரு நாவலுக்கு படங்கள் அவசியமில்லை என்பது என்னுடைய கருத்து. மேலும் உங்கள் நாவல்கள் என்பவை மொழிவழியாக உருவாக்கும் படங்கள். அவைகளை வண்ணங்களின் படங்கள் இல்லாமலாக்கிவிடும் என்ற...

நிறைவில்…

‘மூவாமுதலா உலகம்’ என  சீவகசிந்தாமணி தொடங்குகிறது.  வளராத, முதலென இல்லாத உலகம். நான் விண்ணை தொடக்கமற்றது என எண்ணுகிறேன். முடிவற்றது என்பதைவிட அது நெஞ்சை உறையவைக்கும் ஒரு கருத்து. ஆகவே இத்தலைப்பு, முதலாவிண். பாண்டவர்களின்...

வெண்முரசு நிறைவு

2013 டிசம்பர் 25 அன்று எழுதத் தொடங்கி 2014 ஜனவரி 1 ஆம் தேதிமுதல் வெளியான வெண்முரசு இன்று, 2020 ஜூலை 16 அன்று, முடிவடைகிறது. இதை ஜூன் 26 அன்று எழுதி...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-16

தென்னிலத்தில் இருந்து மீள்கையில் சீர்ஷன் ஆஸ்திகமுனிவரின் நாகர்நிலத்துக்கு சென்றான். வேசரதேசத்தில், கருநீல நதியோடும் கிருஷ்ணை நதிக்கரையில், புஷ்கரவனத்தில் அமைந்திருந்த நாகர்குலத்து அன்னை மானசாதேவியின் ஆலயத்தையும், அருகே அன்னைக்கு ஜரத்காரு முனிவரில் பிறந்த மைந்தன்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15

தென்குமரிக் கடலுக்குள் ஆழத்தில் இருந்து எழுந்து ஒளிகொண்டு நின்றிருந்த மகேந்திரமலையின் முடிமேல், ஒரு காலூன்றி ஓங்குதவம் செய்த கன்னியின் அடிச்சுவட்டில் அமர்ந்து, அஸ்வக குலத்து சபரியின் மைந்தனான சீர்ஷன் எனும் சூதன் கிருஷ்ண...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-14

ஜனமேஜயனின் வேள்விப்பந்தலில் சூததேவராகிய உக்ரசிரவஸ் தன் ஏடுகளை படித்து முடித்து மூடி வைத்து அவற்றின் மேல் வலக்கையின் சுட்டுவிரல்தொட்டு அமர்ந்து ஊழ்கத்தில் ஆழ்ந்தார். வேள்விப்பந்தலில் முற்றமைதி நிலவியது. வேள்விச்சுடர் எரிந்துகொண்டிருந்தது. வியாசர் தன் அமைதியை...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13

குகையின் இருள் மேலும் செறிந்து பருவடிவென, பசை என, படலம் என, உடலை உந்தி பின் தள்ளும் விசையென மாறியது. ஒவ்வொருவரும் அவ்விருளை எதிர்த்து போரிடுபவர்கள்போல கைகளை முன்னால் நீட்டி, முழு விசையால்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12

அவைக்கூடுகை முடிந்ததுமே எந்த முறைமையையும் பேணாமல், எவரிடமும் ஒரு சொல்லாலோ விழியசைவாலோகூட விடைகொள்ளாமல், அவையிலிருந்தே யுதிஷ்டிரனும் இளையோரும் திரௌபதியும் நகர்நீங்கினர். அரண்மனையில் எவரும் துயர்கொள்ளவில்லை. எவரும் வழியனுப்பவில்லை. உடன் செல்லவும் எவருமில்லை. அந்நிலமே...