Category Archive: வெண்முரசு தொடர்பானவை

கோவை -வெண்முரசு வாசகர்கள் கலந்துரையாடல்

நண்பர்களே , இந்த   மாத கோவை ” வெண்முரசு  வாசகர்கள் கலந்துரையாடல் ” 03- 04- 2016 ( ஞாயிற்றுக் கிழமை) அன்று நடைபெறும் . காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை. ‘வெய்யோன் ‘ நாவலை முன்வைத்து கலந்துரையாடல் நடைபெறும். வெண்முரசு வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். முகவரி மற்றும் தொடர்பு எண்Suriyan Solutions 93/1, 6th street extension ,100 Feet road , near Kalyan jeweler, Ganthipuram, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86122

மரபை மறுஆக்கம்செய்தல்

திரைப்படங்களில் பணியாற்றுபவன் என்ற வகையில் எனக்கு ஓர் அவதானிப்பு உள்ளது. தொண்ணூறுகளில் வரைகலை [graphics] முறை சினிமாவின் முக்கியமான கவர்ச்சியாக ஆனபோது திரையில் எதையும் காட்டலாமென்ற நிலை வந்தது. அதுவரை நாடகத்தனமாக செட் போட்டு எடுக்கப்பட்டுவந்த பல காட்சிகளை திரையில் உருவாக்க முடிந்தது விளைவாக மிகைக்கற்பனை [fantasy] சினிமாவில் பெருகியது. அறிவியல்புனைகதைகள் ,காமிக்ஸ்கதைகள் போன்ற புதிய புராணங்கள் அதிகமாகச் சொல்லப்பட்டன. சமூகக்கதைகளுக்கு ஒருவகை பண்பாட்டு எல்லை உள்ளது. மிகு கற்பனைக்கதைகளின் கனவுத்தன்மை மானுடகுலத்துடன் உரையாடுவது. மேலும் சினிமா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85782

சென்னை வெண்முரசு கலந்துரையாடல் பதிவு

  சென்னை  மார்ச் 2016 மாதத்துக்கான வெண்முரசு கலந்துரையாடல் நிகழ்வில் நடந்தவற்றை காளிப்பிரசாத் இக்கட்டுரையில் தொகுத்து வழங்கியிருக்கிறார்   சென்னை வெண்முரசு விவாதம் – மார்ச் 2016  

Permanent link to this article: https://www.jeyamohan.in/85750

சிறியன சிந்தியாதான்

  நான் படித்த, பார்த்த மகாபாரதங்களில் எல்லாம் துரியோதனன் ஒரு வில்லன். முழுக்க முழுக்க எதிர்மறைக் குணங்கள் மட்டுமே நிறைந்த ஒருவன். வெண்முரசின் மொழியில் சொன்னால் இருளின் தெய்வங்களால் ஆசிர்வதிக்கப்பட்டவன். ஆனால் வெண்முரசு காட்டும் துரியோதனன் முற்றிலும் வேறானவன். அவன் எதிர்மறை நாயகனே இல்லை. நல்லவன், அன்பானவன், பெருந்தன்மையானவன், சற்றே அதீதமான ஆணவம்(ego) கொண்டவன், பேரரசன். அவன் பிறக்கையில் அவனைப் பற்றி எதிர்மறை எண்ணங்களே மிகுந்துள்ளன.   அருணாச்சலம் மகராஜன்  வெண்முரசு விவாதத்தளத்தில் எழுதிய கட்டுரை

Permanent link to this article: https://www.jeyamohan.in/85735

’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’

    அன்புள்ள நண்பர்களுக்கு, வெண்முரசின் பத்தாவது நாவலை உடனே தொடங்கிவிடமுடியுமெனத் தோன்றுகிறது. ஏனென்றால் அது இயல்பாகவே வெய்யோனின் கதைநீட்சி கொண்டிருக்கிறது. பெண் முன் ஆண் விழுந்த அவைக்களம் முதல் ஆண்களின் அவையில் பெண் எழும் அவைக்களம் வரையிலான ஒரு கதை என ஒரு முன்வரைவு மனதில் இருக்கிறது. ஆனால் அது எந்தவகையில் மேலே செல்லப்போகிறது என்பதை எழுதிப்பார்த்தால் மட்டுமே தெரியும். ஒரு இருபதுநாட்கள் ஓய்வெடுத்துவிட்டு மார்ச் 26 அன்று மீண்டும் தொடங்கலாமென நினைக்கிறேன். நாவலுக்குப் பெயர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85443

வெய்யோன், எண்ணை, மரபு

வெண்முரசு நாவல்வரிசையின் ஒன்பதாவது நாவலான வெய்யோன் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. எண்ணியவற்றை எண்ணாதவை வென்றுசெல்லும் புனைவுப்பெருக்கு இந்நாவலிலும் நிகழ்ந்ததை நிறைவுடன் எண்ணிக்கொள்கிறேன். பிறாநாவல்கள் எவற்றையும் விட உளவலியும் துயரமும் அளிப்பதாக இருந்தது வெய்யோன். கர்ணனுடன் என்னை அடையாளம் கண்டுகொண்டமையால் அவன் அடைந்த துயரனைத்தையும் நானும் அடைந்தேன். என்னைச்சூழ்ந்திருக்கும் நட்பும் உறவும் என் உணர்வுநிலைகளால் துன்பப்பட்டிருந்தால் மன்னிக்கும்படி கோருகிறேன் இந்நாவல் எழுதும்போது ஒன்றைக் கவனித்தேன். சம்பந்தமில்லாத விஷயம்தான், ஆனாலும் பதிவுசெய்யவேண்டுமெனத் தோன்றியது. நாவல் அளிக்கும் கொந்தளிப்புகளால் தலைசூடாவதும் துயில்மறப்பதும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85293

கோவை , வெண்முரசு வாசகர்கள் கலந்துரையாடல்

  நண்பர்களே , பிப்ரவரி மாத கோவை ” வெண்முரசு வாசகர்கள் கலந்துரையாடல் ” 28- 02- 2016 ( ஞாயிற்று கிழமை) அன்று நடைபெறும் . காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை. சென்ற மாத கலந்துரையாடல் ” வெண்முரசின் உவமானங்கள் ” முழுமை பெறாததால் இந்த மாதமும் தொடரும் .. அதன் பின் ராதாகிருஷ்ணன் ‘நீலம்’ நாவல் குறித்து தன் கட்டுரையை படிப்பார், அது பற்றிய விவாதம் நடைபெறும் . …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85037

வெண்முரசு – காலமும் வாசிப்பும்

என்றுமுள்ள இன்றைப் படித்த பின்பு இதை எழுதத் தோன்றியது. நீங்கள் குறிப்பிடும் “சூழலும் புனைவும் மற்றும் புனைவின் பொது வெளி” இரண்டும் வெண்முரசில் அமைந்த விதம் பற்றிய என் எண்ணங்கள் இவை. இரண்டிற்கும் ஒவ்வொரு மாதிரியை மட்டுமே குறிப்பிடுகின்றேன். இன்னமும் எழுதிக் கொண்டே போகலாம். வெய்யோன் அத்தியாயம் 48 இல் கர்ணனின் அகப் பயணம் முழுவதையும் ஒரு திடுக்கிடலோடுதான் படித்தேன் (செஞ்செப்பு மூடிதூக்கி செங்குருதி விழுதள்ளிப்பூசி நீவிவிட்ட வஞ்சக்கருங்குழல், அதன் திசைவிரைவில் ஒருதுளி நான்.உருகி முடியிறங்கி பெருகி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84486

வெண்முரசு கலந்துரையாடல், சென்னை

  வெண் முரசு கலந்துரையாடல் { சென்னை} வருகிற 21/02/16 {ஞாயிற்றுகிழமை } அன்று சென்னை வெண் முரசு கலந்துரையாடல் நடைபெறும். வெண் முரசின் ஓவியங்கள் என்கிற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற இருப்பதால் , வரும் நண்பர்கள் தங்களுக்கு பிடித்த ஓவியங்களையும் , அதன் மீதான பார்வையையும் முன் வைத்து கலந்துரையாடலாம், என்பது திட்டம் சௌந்தர் SOUNDAR.G Satyananda Yoga -Chennai 11/15, south perumal Koil 1st Street Near hotel saravana bhavan & …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84469

என்றுமுள்ள இன்று

 ஒரு நிரந்தரக்கேள்வி வெண்முரசின் வாசகர்களாக வரும் இளையதலைமுறையினரில் ஒருசாராரிடம் எப்போதுமுள்ள கேள்வி ஒன்றுண்டு.  ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் இக்கேள்வி என்னைநோக்கி வந்துகொண்டே இருக்கும். இவர்களில் பலர் தொடக்கநிலை இலக்கிய அறிமுகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.சமகால அரசியல் மற்றும் சமூகப்பிரச்சினைகளை மையமாகக் கொண்ட புனைகதைகளை வாசித்திருப்பார்கள். அவற்றின் சமகாலத்தன்மையே அவற்றுடன் இவர்கள் கொள்ளும் தொடர்புக்கான உடனடிக்காரணமாக இருந்திருக்கும்.அவ்வாறு புனைவெழுத்தின் உடனடிக்கடமைகளில் ஒன்று சமகாலத்தை விமர்சனம் செய்தல் என்று புரிந்துகொண்டிருப்பார்கள். அத்துடன் உள்ளூர ஒரு பெரிய பிரிவினை இருக்கும். சமகாலம் என்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83957

Older posts «

» Newer posts