Category Archive: வெண்முரசு தொடர்பானவை

வெண்முரசு புதுவை கூடுகை

      அன்புள்ள நண்பர்களே , வணக்கம் .   நிகழ்காவியமான  “வெண்முரசின்  19 வது   கலந்துரையாடல் ” செப்டம்பர்   மாதம்   20-09-2018  வியாழக்கிழமை  அன்று  நடைபெற   இருக்கிறது .  அதில்  பங்குகொள்ள  வெண்முரசு வாசகர்களையும் , வெண்முரசு  குறித்து  அறிய  ஆர்வம்  உடையவர்களையும்  அன்புடன்   அழைக்கிறோம்..     இம்மாதக் கூடுகையின் பேசுப்பகுதி   வெண்முரசு நூல் 2 மழைப்பாடல்   பகுதி 16:  இருள்வேழம்     78 முதல் 81 வரையுள்ள  பகுதிகளைக் குறித்து  ,நண்பர் மணிமாறன் அவர்கள்  உரையாற்றுவார்.     நாள்: 20-09-2018 வியாழக்கிழமை  மாலை 6 மணி முதல் 8.30 வரை.   இடம்:   கிருபாநிதி அரிகிருஷ்ணன்,     “ஸ்ரீ நாராயணபரம்”, முதல்மாடி, எண் 27, வெள்ளாழர் வீதி, புதுச்சேரி 605001 தொடர்புக்கு :   9943951908 ; 9843010306. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113365

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’

  வெண்முரசின் பதினைந்தாவது நாவல் எழுதழல். வழக்கமாக ஒரு நீண்ட இடைவேளையும் சலிப்பும் பின்னர் ஒருபயணமும் அதன் விளைவாக ஓர் எழுச்சியும் என்றுதான் முறையே அடுத்தநாவல் நிகழும். இம்முறை நீர்க்கோலம் முடிந்த மறுநாளே எழுதத் தொடங்கிவிட்டேன். எழுதிக்கொண்டிருக்கிறேன். வாசிப்பவர்களுக்கு ஓர் இடைவேளை வேண்டுமே என்பதற்காக வரும் செப்டெம்பர் 15 முதல் தொடங்கலாமென்றிருக்கிறேன். இது பாண்டவர்களின் உரிமைக்காக கிருஷ்ணன் நிகழ்த்தும் தூதையும் அதன் தோல்வியில் போர் எழுவதையும் சொல்லும் நாவல். முதற்கனல் இப்போது தழலாக எழுகிறது. ஜெ

Permanent link to this article: https://www.jeyamohan.in/101825

வெண்முரசு புதுவை கூடுகை – 5

அன்புள்ள நண்பர்களுக்கு. வணக்கம். நிகழ்காவியமான “வெண்முரசு கலந்துரையாடல்” புதுவையில் சென்ற பிப்ரவரி 2017 முதல், மாதந்தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புதுவை கூடுகை மூன்றாம் வியாழக்கிழமைகளில் நிகழ்வது வழமை. இம்முறை திரு. பாவண்ணன் அவர்கள் புதுவைக்கு வருகைதரும் சந்தர்ப்பத்தை நழுவவிடாது, வெண்முரசு கலந்துரையாடலை 26 ஜூன் 2017 திங்கட்கிழமை காலை 10:30 மணிக்கு தொடங்கவிருப்பதை மகிழ்ச்சியாக தெரிவித்துக்கொள்கின்றோம். 26 ஜூன் மாதத்தில் கூடவிருக்கிற ஐந்தாவது கூடுகை, ஒரு சிறப்புமிக்க கூடுகையாக நிகழவிருக்கின்றது. இலக்கிய உலகின் ஆளுமைகளில் ஒருவரான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/99455

வெண்முரசு( சென்னை )கலந்துரையாடல்

  அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்,   இந்த மாத வெண்முரசு( சென்னை )கலந்துரையாடல் வருகிற ஞாயிறு மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடைபெற உள்ளது   இதில் நண்பர் காளி பிரசாத் அவர்கள் ”இந்திர நீலம்” நாவல் குறித்து உரையாடுவார் வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..   நேரம்:- வரும் ஞாயிறு (14/5/2017) மாலை 5:00 மணிமுதல் 08:00 மணி வரை     தொடர்புக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/98392

வெண்முரசு கலந்துரையாடல் : சென்னை – ஜூலை 2016

இந்த மாத சென்னை கூட்டம் பன்னிரு படைக்களத்தை பற்றியதாக இருக்கும். சுதா ஸ்ரீநிவாசன் “சுனந்தை முதல் கிருஷ்ணை வரை” என்கிற தலைப்பில் உரையாற்றுவார். அதற்கடுத்து மணிமாறன் (பாண்டிச்சேரி)  அவர்கள் தன் உரையை நிகழ்த்துவார். வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.. நேரம்:- வரும் ஞாயிறு (17-07-2016) மாலை 4:00 மணிமுதல் 08:00 மணி வரை இடம்:- SATHYANANDHA YOGA CENTRE, 15/11, SOUTH PERUMAL KOIL, 1ST STREET, VADAPALANI (NEAR …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88965

வெய்யோன் செம்பதிப்பு முன்பதிவு

  வெய்யோன் – வெண்முரசு நாவல் வரிசையில் ஒன்பதாவது நாவல்.கர்ணனைப்பற்றிய நாவல் இது. 848 பக்கங்கள் கொண்ட நாவல் இது. 40 வண்ணப் படங்களும் இந்நாவலில் உள்ளன. செவ்வியல் என்பது அனைத்துவகையான புனைவுவகைகளுக்கும் உள்ளே இடமளிப்பது. அதன் இயல்பே தொகுப்புத்தன்மைதான். அதற்குள் ஒருமையையும் ஒத்திசைவையும் அது அடையமுயல்கிறது. அதன் மையத்தரிசனத்தால் அதை நோக்கிச் செல்கிறது. வெய்யோன் இயல்பாகவே பரசுராமனின் கதையிலிருந்து தொடங்கி கர்ணனைக் கண்டடைகிறது. அன்னையென்றும் காதலி என்றும் துணைவி என்றும் பெண்மையால் அலைக்கழிக்கப்படும் கர்ணனின் சித்திரமாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88859

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’

  வெண்முரசு வரிசையின் அடுத்த நாவலுக்கான மனநிலை மெல்ல இன்றுதான் தொடங்கியிருக்கிறது. இங்கிலாந்தில் கான்வால் என்னும் பகுதியில் இருந்து இன்றுதான் திரும்பி வந்தேன். இன்று ஓய்வு. நாளை நாகர்கோயில் திரும்புகிறேன்   ஒன்றும் தோன்றவில்லை. ஒரு வகையான நிலையழிதல் மட்டுமே. ஒருவழியாக சொல்நிரை தொடங்கி வருவதற்குள் ஒரு கொந்தளிப்பு நிகழ்ந்து முடிந்துவிடுமென நினைக்கிறேன். இன்று தலைப்பு மட்டும்தான். ‘சொல்வளர்காடு’   வேதங்களுக்கான உரைகளே  பிராம்மணங்களும் ஆரண்யகங்களும். அவை வேதங்கள் அடுத்தகட்டம் நோக்கி நகர்ந்து வேதாந்தமாகக் கனியும் காலகட்டத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88712

வெய்யோனொளியில்…

கர்ணனைப்பற்றிய நாவல் இது.வெண்முரசு நாவல்களை நான் செவ்வியலின் வெவ்வேறு வடிவங்களாகவே உள்ளூர உருவகித்திருக்கிறேன். செவ்வியல் என்பது அனைத்துவகையான புனைவுவகைகளுக்கும் உள்ளே இடமளிப்பது. அதன் இயல்பே தொகுப்புத்தன்மைதான். அதற்குள் ஒருமையையும் ஒத்திசைவையும் அது அடையமுயல்கிறது. அதன் மையத்தரிசனத்தால் அதை நோக்கிச் செல்கிறது. வெய்யோன் இயல்பாகவே பரசுராமனின் கதையிலிருந்து தொடங்கியது எனக்கே புதிய திறப்பாக அமைந்தது. அன்னையென்றும் காதலி என்றும் துணைவி என்றும் பெண்மையால் அலைக்கழிக்கப்படும் கர்ணனின் சித்திரமாக அது விரிந்தது. பெருந்தன்மையால் தோற்றுக்கொண்டே செல்பவன் வென்று நின்றிருக்கும் பேரறத்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88601

கோவை – வெண்முரசு கலந்துரையாடல்

  வெண்முரசின் மொழியனுபவம், கவித்துவம், கூட்டு வாசிப்பு வரும் ஞாயிறு 03-07-2016 அன்று காலை 11 மணிமுதல் 1 மணி வரை வெண்முரசு கலந்துரையாடல் நடைபெறும். பங்கேற்பவர்கள் வெண்முரசின் இதுவரை வந்த பத்து புத்தகங்களில் இருந்து (நீலம் நீங்கலாக) பிடித்த பத்திகளை மூன்று பக்கங்களுக்கு மிகாமல் வாசிக்கலாம். இக்கூட்டு வாசிப்பு முடிந்ததும் அதன் மொழியனுபவம் கவித்துவம் குறித்த உரையாடல் நடைபெறும். வெண்முரசு வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். முகவரி மற்றும் தொடர்பு எண் Suriyan Solutions 93/1, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88681

பன்னிரு படைக்களம் முடிவு

  அன்புள்ள நண்பர்களுக்கு, வெண்முரசு தொடரின் பத்தாம் நாவலான பன்னிரு படைக்களம் நேற்றுடன் முடிந்தது. வழக்கம்போல உச்சகட்ட உளஅழுத்தத்தில் எழுதிய ஆக்கம். ஒருபக்கம் என்னை அதற்கு முற்றாக அளித்திருந்தேன். மறுபக்கம் ஊர் ஊராக அலைந்தேன். உழைத்தேன். உறவுகளில் திளைத்தேன். தனித்திருந்து அனைத்தையும் வியந்தேன். வானூர்தி நிலையங்களில், ரயிலிடங்களில், நாளொன்றுக்கு பதினைந்தாயிரம் வாடகை கொண்ட விடுதியறைகளில், நூற்றைம்பது ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்த கூட்டுவிடுதியின் கட்டில்களில், முச்சந்திச் சாலையோரத்தில்  எங்கெல்லாமோ வைத்து எழுதப்பட்டவை இவை. தமிழகத்தில் கேரளத்தில் ஆந்திரத்தில் கர்நாடகத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88411

Older posts «