Category Archive: விவாதம்

ஈர்ப்பு – கதைவடிவமும் பார்வையும்

ஈர்ப்பு ஈர்ப்பு- கடிதங்கள் அன்புடன் ஆசிரியருக்கு இந்த விவாதத்தை நானும் கவனிக்கிறேன். இக்கதை இரண்டு விதமான எதிர்வினைகளை உருவாக்கியிருக்கிறது. சிறந்த வாசகர்கள் என்று நான் எண்ணும் பலர் இக்கதையை அதன் வடிவத்திற்கென்றே புதிய முயற்சி நல்ல கதை என்றெல்லாம் சொல்கின்றனர். இந்த வடிவம் காரணமாகவே இது சிறுகதை போலவே இல்லை. ஏதோ காழ்ப்பு நிறைந்த புலம்பலைத் தொகுத்தது போல உள்ளது என்றும் விமர்சிக்கின்றனர். அப்படி விமர்சிக்கிறவர்களிலும் நான் அறிந்த நல்ல வாசகர்கள் உண்டு.எப்படி இருந்தாலும் கதை மீதான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113249

நாவல் விவாத அரங்கு, சென்னை

  ஊட்டி குருநித்யா நினைவுக் கருத்தரங்கில் விஷால்ராஜா நவீன நாவல் குறித்து ஓர் அரங்கை நடத்துவதாக இருந்தார். வேறு அரங்குகள் சற்று நீண்டு சென்றமையால் அவ்வரங்கு நடைபெறவில்லை. ஆகவே அதை சென்னையில் குமரகுருபரன் –விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவன்று அதே அரங்கில் மாலை மூன்று மணிமுதல் ஐந்தரை வரை நடத்தலாமென முடிவெடுத்தோம்   விஷால்ராஜா முதலுரை வழங்குவார். சுனீல்கிருஷ்ணன், சிவமணியன் ஆகியோர் எதிர்வினையாற்றுவார்கள். சிறுவிவாதம் நிகழும். இலக்கிய ஆர்வலர் மூன்று மணிமுதல் இரு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவேண்டும் என …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109831

வைரமுத்து

வைரமுத்து,ஆண்டாள் எனக்கு வரும் கடிதங்களில் பலர் வைரமுத்து குறித்து வசைபாடி எழுதித்தள்ளுகிறார்கள். முகநூலில் பகிரப்படும் வைரமுத்து குறித்த வசைகளை எனக்கு வெட்டி அனுப்புகிறார்கள். நான் வைரமுத்து ஞானபீடம் பெற எடுத்துக்கொண்ட முயற்சிகளைக்குறித்து எழுதியமையால் இந்த வசைகளுடன் இணைந்துகொள்வேன் என நினைக்கிறார்கள். தெள்ளத்தெளிவாகவே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், நான் எழுதியது இலக்கியவிவகாரம். இதில் மதவெறியர்கள், அரசியல்வெறியர்கள், சாதிவெறியர்களுக்கு இடமில்லை. இவர்கள் இன்று வைரமுத்துவைப்பற்றி எழுதியிருப்பவை கீழ்மை நிறைந்தவை. எந்த நிதானமுள்ள இந்துவும், இந்தியனும்  நாணத்தக்கவை. வைரமுத்து கூறிய கருத்து கண்டிக்கப்படவேண்டியதென்றால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105728

வெண்முரசு விமர்சன அரங்கு சென்னை -பதிவு

1

  இன்று  [17-1-2016] நடந்த வெண்முரசு விமர்சனக்கூட்டத்தில்  27 பேர் கலந்துகொண்டோம். ஜானகிராமன் அவர்கள் தன்னால் வர இயலாது என்று சென்ற திங்கள்கிழமையன்றே தெரிவித்தார். உடனடியாக ஒரு மாற்று பேச்சாளரை தேட வேண்டிய நிலைமையாயிற்று. அருணாசலம் கைகொடுத்தார். ஒருநாள் டைம் கொடுங்கள் என்று கேட்டார். ‘சிறியன சிந்தியாதான்’என்கிற தலைப்பில் அவர் துரியோதனை பற்றிப் பேசுவதாக தெரிவித்தார். கட்டுரையை தயாராக்கிக் கையோடு கொண்டு வந்திருந்தார். மேற்கோள்கள் கொடுத்து அருமையாக பேசினார் அந்த கட்டுரையை நிகழ் காவியத்தில் பதிவேற்றி லிங்க் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83544

விவாதங்களைப் பதிவுசெய்தல்

  அன்புள்ள ஜெ புத்தாண்டு வாழ்த்துக்கள்! சொல்புதிது குழுமத்தில் இருக்கும் அனைவருக்கும் எனது வந்தனங்கள். தங்கள் தளத்தை இயன்ற அளவு நேரம் கிட்டும் பொழுதெல்லாம் வாசித்துவருகிறேன் மேற்படிப்பிற்கு இடையில். கம்பனும் குழந்தையும் பற்றிய பதிவு மிக முக்கியமானது. அதனை வாசித்தேன். கம்பராமாயணம் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாயிற்று. எனது 80 வயது பாட்டியும் அதனை படித்து மகிழ்ச்சியடைந்தார்கள். இரண்டாண்டுகளுக்கு முன் விஷ்ணுபுரம் விருது விழாவில் நான் அடைந்த வாசிப்பு திறப்புகள், நண்பர்கள் அதிகம். இவ்வாண்டு விருது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83079

பரவா

“இன்னொரு காரணம் கிறித்தவ நூல் மரபு எகிப்திய பாரோக்களைப்பற்றி அளித்த சித்திரம். யூதர்கள் பாரோ மன்னர்களின் கீழ் அடிமைகளாக இருந்தார்கள், அங்கிருந்து கடவுளருளால் தப்பினார்கள் என்பது அவர்களின் குலக்கதை. அது பைபிளின் பகுதியாக இருப்பதனால் எல்லா கிறித்தவர்களிடமும் எகிப்து பற்றிய கொடூரமான ஒற்றைப்படைச் சித்திரம் உருவாகியிருந்தது.” இதுப் போன்ற தருணத்தில் தான் ஆசான் சறுக்கி விடுகிறார். எல்லா கிறித்தவர்களும் ‘Ten Commandments’ பார்த்து விட்டு வரலாற்றைத் தெரிந்துக் கொள்வதில்லை. மேற்கத்திய ஆய்வாளர்களும் பல்கலைக் கழகங்களும் ஆப்பிரிக்க கலாசாரத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80972

தஞ்சை பிரகாஷ் -கடிதம்

அன்புள்ள திரு மங்கையர்க்கரசி அவர்களுக்கு, தஞ்சை பிரகாஷ் பற்றி நான் எழுதிய விமர்சனக்குறிப்பைத்தான் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். ஆனால் அதிலுள்ளவை அல்ல நீங்கள் சொல்பவை. தஞ்சைப்பிரகாஷ் அவரது இளமைப்பருவ நோயைப்பற்றியும் அது இயற்கைசிகிழ்ச்சைமுறைப்படி குணமானதைப்பற்றியும் அதன் பின் சிலநாள் அச்சிகிழ்ச்சைமுறையின் உதாரணமாக அவர் சுட்டப்பட்டது பற்றியும் என்னிடம் பல நண்பர்கள் நடுவே நேரில் சொன்னதை மட்டுமே எழுதியிருக்கிறேன். அவரே அவற்றை குறிப்பிட்டும் இருக்கிறார். அவை அவரே சொன்னவை என்பதனாலேயே உங்கள் சொற்களை விட எனக்கு நம்பகமானவை. அவரது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80602

விருதுமறுப்பு – கடிதங்கள்

அன்பின் ஜெயமோகன், உங்கள் எழுத்துகளை தொடர்ச்சியாக வாசித்து வந்தாலும் இது தான் நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம். நான் தொழில் முறை எழுத்தாளன் இல்லை என்பதால் கோர்வையாக எழுத இயலாது. மொழியும் தட்டையாக தான் இருக்கும். பொறுத்தருள்க. நெருங்கிய நண்பர்கள் அனைவரும் தங்களின் இந்து மத அரசியல் சாய்வு காரணமாக முழுக்க நிராகரிப்பார்கள், அவர்களிடம் நான் சொல்வது, ‘இலக்கியம் மனிதனை பண்படுத்தும். ‘யானை டாக்டரை’ படித்தபின் எவ்வளவு பெரிய குடிகாரனாக இருந்தாலும் காட்டில் பாட்டிலை உடைத்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79765

சென்னை வெண்முரசு விவாதங்கள்

1

சென்னை வெண்முரசு வாசகர் குழுமத்தில் வாசித்து விவாதிக்கப்பட்ட கட்டுரை. வெண்முரசில் குலங்களின் நாயகர்கள் இது சென்னை வெண்முரசு விவாதக்குழுமத்திற்கென உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் வலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. இக்கட்டுரையும் பிற கட்டுரைகளும் அந்தத்தளத்தில் உள்ளன

Permanent link to this article: https://www.jeyamohan.in/79624

கல்கி, பு.பி.- அஸ்வத்

கல்கி போன்ற எழுத்தாளர்களின் இடத்தைத் தாங்கள் அங்கீகரிக்கும் போதிலும் அவரைப் பற்றி யாராவது கேட்கும் போது நீங்கள் அடையும் எரிச்சல் எனக்கு சற்று அதீதமாய்ப் படுகிறது. அவர் போன்ற எழுத்தாளர்கள் அடுக்கி வைத்த செங்கல்லின் மீது ஏறி நின்று கொண்டு தானே நம் போன்றவர்கள் கட்டிடம் எழுப்பிக் கொண்டிருக்கிறோம்.உங்களின் அலர்ஜியை எனக்கு சுந்தர ராமசாமியின் ‘சிவகாமி சபதத்தை முடித்து விட்டாளா?’வுடன்தான் (ஜெ ஜெ சில குறிப்புகள்) ஒப்பிடத் தோன்றுகிறது. இன்னொன்று எழுத்தையும் மீறிய எழுத்தாளனின் மனம் எப்படியாவது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77200

Older posts «