Category Archive: விழா

விழா கடிதங்கள்: ஷாகுல், கதிர்

ஜெயமோகன் அவர்களுக்கு மீண்டும் ஒரு இலக்கிய திருவிழா கொண்டாட்டம் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது ஆம் கே.ஜி சங்கரப்பிள்ளை அவர்கள் மேடையில் சொன்னபோதுதான் நானும் உணர்ந்தேன் இது பெரும் திருவிழா என்று , இருநாட்கள் விஷ்ணுபுரம் இலக்கிய விழாவில்  வேலை நாளான வெள்ளிக்கிழமை 250 பேருக்கு மேல் கலந்து கொண்டது ஆச்சர்யம். இரண்டாம் நாள் சனிக்கிழமை கூட்டம் இன்னும் அதிகமாயிற்று அனைவருக்கும் மொத்தம் 6 வேளைக்கு மேல் உணவும் இரு நாட்கள் தங்குமிடமும் (சிலர் மூன்று நாள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129168

விழா கடிதங்கள், சிவகுருநாதன், கண்ணன்

அன்புள்ள ஜெ, இப்போதைய பொருளாதார சுழலில் பணி நெருக்கடி மற்றும் சம்பளம் இல்லா விடுப்பு எடுத்து விழாவுக்கு செல்ல வேண்டுமா என்ற கேள்வி வெளி மனதை துளைத்ததையும் மீறி உள்மன ஆசையே வென்ற நிலையில்தான் விழாவில் கலந்துகொள்ள விண்ணப்பித்தேன். தங்குமிட அனுமதி பெற்ற சந்தோஷத்தில் விழாவுக்கு முந்தைய நாளான டிசம்பர் 27 காலை 8:30 மணிக்கு தாமதமாக கன்னியாகுமரி புதிய வாசகர் (நான் கலந்து கொள்வது இவ்வருடத்துடன் 5வது விழா என்பதால்) டேவிட்டுடன் அரங்கினுள் நுழைந்தேன். அப்போதே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129164

மூன்று ஊர்கள், மூன்று விழாக்கள்

கிட்டத்தட்ட சுற்றுப்பயண விவரத்தை வெளியிடவேண்டிய கட்டாயம் உருவாகும் நிலை. எனக்குத்தெரிந்து நவீன எழுத்தாளர்களில் நாஞ்சில்நாடன் மட்டுமே இந்த அளவுக்கு ஆடிக்காற்றில் அலைக்கழிபவர். அவர் வீட்டுக்குள் பெட்டியுடன் நுழைகையில் ஆச்சி அடுத்த பெட்டியை அடுக்கி தயாராக வைத்திருப்பார் என்று கேள்வி. சமீபத்தில் ஆஸ்திரேலியாவிலிருந்து இறங்கி மறுநாளே பாரீஸ் சென்றிருக்கிறார். உலகம்சுற்றும் [கிட்டத்தட்ட] வாலிபர். நான் கொஞ்சம் கவனமாக இருப்பவன். ஆனாலும் என்ன ஏது என்று புரியாமல் தேதிகளை கொடுத்துவிட்டேன். காரணம் தேதிகளை கொடுத்தபோது இதெல்லாம் அடுத்த ஆண்டுதானே என்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129114

பத்து ஆசிரியர்கள் 7- சுசித்ரா

உங்களைப்பற்றி..(கல்வி/ பணி/ குடும்பம்) பெயர் சுசித்ரா. அப்பா பெயர் எம். ராமச்சந்திரன், வங்கியில் வேலையாக இருந்தார். அம்மா ஜானகி, பள்ளி ஆசிரியை. தற்போது இருவரும் ஓய்வுபெற்றுவிட்டார்கள். அப்பா, அம்மா இருவரும் பூர்வீகமாக மதுரை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். நான் பிறந்தது சென்னையில் என்றாலும் ஒன்பதாம் வகுப்பு முதல் பள்ளிப்படிப்பையும் கல்லூரி படிப்பையும் மேற்கொண்டது மதுரையில். 2009-ல் எஞ்சினியரிங் படிப்பு முடித்ததும் முழு உதவித்தொகையுடன் அமெரிக்கா பிட்ஸ்பர்கில் கார்னெகி மெல்லன் பல்கலைக்கழகத்தில் உயிரியல் துறையில் ஆய்வுமேற்கொள்ள வாய்ப்புக்கிடைத்தது. 2014-ல் முனைவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129139

விழா பதிவு: கொள்ளு நதீம்

அன்பின் ஜெ. அவர்களுக்கு. வணக்கம். விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்து கொள்ள வியாழன் இரவே வந்து சேர்ந்தேன். வெள்ளிக்கிழமை காலை கோவை ரயில்வே ஜங்கஷனில் அரங்கசாமி இரண்டு பேர்களுடன் அபியை வரவேற்க புரொட்டொகால்படி குறித்த நேரத்திற்கு சற்று முன்பே வந்திருந்தார். சேலம் கலைக்கல்லூரியில் அபி பணியாற்றியபோது அவரிடம் படித்த (பிரம்மராஜன், சிவக்குமார் போன்றவர்களில்) உத்தமபாளையம் சீனிவாசனும் ஒருவர். கூட்டுறவுத்துறையில் ஆடிட்டராக இருந்து ஓய்வு பெற்ற சீனிவாசன் அபியை 55 ஆண்டுகளாக பின் தொடர்ந்து வருபவர். ”அந்தர நடை” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129144

விழா- கடிதங்கள்- விக்ரம், சந்திரசேகரன்

  அன்புள்ள ஜெயமோகன் அண்ணா, விஷ்ணுபுரம் பத்தாம் ஆண்டின் விருதுவிழா ஒரு வாசகனாக மனநிறைவு அளித்தது இசை, யுவன் சந்திரசேகர், கே.என். செந்தில், வெண்பாகீதாயன், அமிர்தம் சூரியா, சுரேஷ்குமார இந்திரஜித், ரவிசுப்பிரமணியம், ஜானவி பருவா, பெருந்தேவி, சங்கரப்பிள்ளை, அபி என அமர்வுகள் அனைத்தும். நன்றாக இருந்தது. ஆவணப்படம் நன்றாக இருந்தது. சினிமா தாக்கம், சங்கீத ரசனை, இந்துஸ்தானி இசை, கர்நாடக இசைக்கலைஞர்கள், எழுத்தில் மேற்கு உலகின் தாக்கம், எளிய மக்களின் துயர், அமானுஷ்யம், பழந்தமிழ் இலக்கியத்துடனான உறவு, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129069

விழா கடிதங்கள், ரங்கராஜன்,செல்வக்குமார்

அன்புள்ள ஜெ நலம்தானே? விஷ்ணுபுரம் விருதுவிழாவிற்கு வந்துவிட்டு திரும்பி அந்த மீட்டலிலேயே இருந்துகொண்டிருக்கிறேன். என்னைப்போன்ற வாசகர்களுக்கெல்லாம் இத்தகைய திருவிழாக்கள் பெரிய அனுபவம். திரைப்படவிழாவுக்கு நான் வழக்கமாகச் செல்வதுண்டு. ஆண்டு முழுக்க சினிமா பார்க்கிறோம். ஆனால் ஒரு சினிமாவிழாவின் கொண்டாட்டமே வேறு. அப்போது மனம் தளும்பிக்கொண்டிருக்கிறது. சினிமா பற்றி மட்டுமே சிந்தனைசெய்துகொண்டிருக்கிறோம். அதேபோலத்தான் இந்த விழாவும். இந்த விழாவிலே ஏராளமானவர்கள் கலந்துகொள்வதற்கான காரணம் இந்தப்போதைதான். நிறைய வாசிக்கிறோம். ஆனால் அதைப்பற்றிப் பேச ஆளில்லை. அதைப்பற்றி இங்கே எங்கேயும் பேச்சில்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129081

ஆவணப்படம் – கடிதங்கள்

அபி -ஆவணப்படம் அன்புள்ள ஜெ கே.பி.வினோத் இயக்கிய ஆவணப்படத்தைப் பார்த்தேன். அந்தரநடை என்னும் தலைப்பில் தொடங்கி அபியை மிக நெருக்கமாக பின் தொடர்ந்திருக்கிறது ஆவணப்படம். பொதுவாக ஆவணப்படங்கள் எழுத்தாளரை ஒரு மனிதனாகவே கணக்கில் எடுத்துக்கொள்ளும். அந்த மனிதனின் ஆசாபாசங்கள், அவனுடைய தனிப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றையே அவை அதிகமாகப்பேசும். கே.பி.வினோதின் இந்த ஆவணப்படம் அபியை கவிஞராக மட்டுமே கருத்தில் கொள்கிறது. அவரை கவிதை வழியாக மட்டுமே அணுகிச் செல்கிறது. கவிதையை அபியைக்கொண்டே புரிந்துகொள்ள முயல்கிறது. அது மிகச்சிறந்த முயற்சி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129083

விழா கடிதம்- காளிப்பிரசாத்,சிவக்குமார்

அன்புள்ள சார், ஆவணப்படம் ஒளிபரப்பாகி முடிந்தவுடன் விழா மேடையை மூடியிருந்த திரைச்சீலையைத் திறந்தனர். ஆ! என்ற வியப்பொலி நான் அமர்ந்திருந்த வரிசையின் பின்னாலிலிருந்து எழுந்தது. மேடை அமைப்பு ஒரு பிரமிப்பை உண்டாக்கியிருந்தது. பக்கத் தடுப்புகள் பொன்னிறமாய் மின்ன இந்திர நீலமாய் ஜொலித்தது விழா மேடை. முதலிருநாள் அமர்வுகளுக்கான மேடையுமே ஒரு வண்ணக்கடலாக இருந்தது. வெற்றிக்கோப்பை கேப்டன் க்விஸ் செந்திலுக்குத்தான். ஆட்டநாயகன் விருதை விஜயசூரியனுக்கு அளித்து விடலாம் அமர்வுகள் மூலம் ஒரு வாசகனாக சுரேஷ்குமார் இந்திரஜித், பெருந்தேவி, கேஜி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129068

மீள்கை

விஷ்ணுபுரம் விழா எப்போதுமே ஒரு தனிமையை அளிக்கிறது. நண்பர்கள் புடைசூழ இருந்து பேசி, சிரித்து, களித்து மெல்ல உருவாகும் தனிமை அது. முதலில் உருவாவது ஒருவகையான சங்கடம். நான் இவ்விழாவில் என்னை முன்வைப்பதில்லை. எவ்வகையிலும் என் படைப்புக்கள் பேசப்படுவதே இல்லை. ஆயினும் ஒரு பெருமிதம் உருவாவதை தவிர்க்கமுடியாது. அப்பெருமிதம் ஒருநாள் நீடிக்கும். விழா மறுநாள் காலை உலகையே வென்றுவிட்டது போலிருக்கும். நண்பர்களும் நிறைவுடன் மிதப்புடன் இருப்பார்கள். அன்று மாலைக்குள் அது குறையத்தொடங்கும். குறைந்தாகவேண்டும். இவை என்னுடையவை அல்ல, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129022

Older posts «

» Newer posts