Category Archive: விழா

எம்.ஏ.சுசீலாவுக்கு விழா
எம்.ஏ.சுசீலா என் பத்தாண்டுகால  நண்பர். மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழாசிரியையாக இருந்து பணி ஓய்வுபெற்று டெல்லிக்குச் சென்று வாழ ஆரம்பித்த பின்னரே அவர் எனக்கு அறிமுகமானார். நீண்ட கடிதம் ஒன்று அனுப்பியிருந்தார். அதில் தெரிந்த வினாக்கள் அனைத்துக்கும் அடியிலிருந்தது செயலின்மையின் சலிப்பு என எனக்குத் தோன்றியது. முன்னரே சிறுகதைத் தொகுதிகள் வெளியிட்டிருந்தாலும் ஒருவகை குடும்பப் பொறுப்புகள் முடிந்ததன் வெறுமைக்கு ஆளாகியிருந்தார். நான் எழுதிய பதில்கடிதத்தால் ஊக்கம்பெற்று தீவிரமாக மொழியாக்கத்தில் ஈடுபடத் தொடங்கியதாக சொன்னார். அதையொட்டியே எனக்கும் அவருக்கும் கடிதத் தொடர்பு  நீடித்தது. …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/107783

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 21 -ராஜா
  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, உங்களை பற்றியும் உங்கள் படைப்புகள் பற்றியும் நன்கறிந்தாலும் உங்கள் இணையதளத்துக்குள் மற்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்துக்குள் நான் சமீபத்தில்தான் நுழைந்தேன். விஷ்ணுபுரம் விருது விழா அழைப்பிதழ் கண்டு ஒரு வித தயக்கத்துடன்தான் கோவை வந்தேன். வந்தவுடன்தான் அறிந்தேன் ‘சோற்றுக்கடன்’ என்பது ஒரு சிறுகதை மட்டுமல்ல என்று. கெத்தேல் சாஹிப் உயிருடன்தான் இருக்கிறார் என்று. பசிக்கு மட்டுமல்ல, செவிக்கும், சிந்தைக்கும், வயிற்றுக்கும் விஷ்ணுபுரம் வட்டம் கெத்தேல் சாஹிப் கரம் போன்று உணவை அள்ளி …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/94194

என் கல்யாண்ஜி
வணக்கம். வண்ணதாசன் ஆவணப்படத்தின் இரண்டு இடங்களில் அழகான சில கணங்கள் வருகின்றன. அவற்றைத் திரும்பத்திரும்ப பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவற்றை GIF படங்களாக இணைத்துள்ளேன். சன் கீர்த்திக்கு என் எல்லையில்லா அன்பும் நன்றியும். நன்றி. வே. ஸ்ரீநிவாச கோபாலன்    
Permanent link to this article: https://www.jeyamohan.in/94147

வண்ணதாசன் ஆவணப்படம்
வண்ணதாசனைப்பற்றி செல்வேந்திரன் எடுத்த ஆவணப்படம். வண்ணதாசனைப்பற்றி முழுமைப்படுத்தப்பட்ட முதல் ஆவணப்படம் இது      வண்ணதாசன் விழா அனைத்து இணைப்புக்களும்               ஆ
Permanent link to this article: https://www.jeyamohan.in/94047

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 20
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, விஷ்ணுபுரத்தின் வாசகர்கள் அனைவருக்கும் ஒரு தனித்துவமான பயனுண்டு. அவர்களது, ஓராண்டு பசியும் ஒரே விழாவில் தீர்க்கப்படுவதோடு, அடுத்த ஓராண்டிற்கான பசியும் அழகாய், அர்த்த புஷ்டியுடன் தூண்டிவிடப்படுவதுமே அது. விஷ்ணுபுரம் விருது விழா 2017 முடிந்து சொந்த ஊருக்கு மீள்வதற்கு, கோவை பேருந்து நிலையத்திற்கு செல்லும் போது – ஆப்பிள் கடைக்காரர், ஆட்டோ ஓட்டுநர், பேருந்திற்காக காத்திருக்கும் யாரோ ஒரு அக்கா, குடித்துவிட்டு மல்லாந்திருக்கும் ஒருவர் என – எந்த ஒரு முகத்தைப் பார்த்தாலும், …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/94131

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 19- பேசபட்டவை… கிருஷ்ணன்
  இது போன்ற கூடுகைகளின் நோக்கமே முக்கிய அல்லது சில மாறுபட்ட சிந்தனைகளை கவனப்படுத்த அல்லது உருவாக்க முடியுமா என்பது தான். கடந்த காலங்களில் மலையாளக் கவி டி.பி.ராஜீவன் கவிதைகளில் இருந்து படிமத்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டியதன் அரசியல் அவசியம் பற்றிப் பேசினார், அது ஊட்டி முகாம் வரை நீடித்தது. சென்ற ஆண்டு கே.என்.செந்தில் தற்காலத்திய நெருக்கடி என்பது ‘கருணையின்மை’ தான் என்றார், அது அப்போதே சிந்திக்க வைத்தது, இப்படி விஷ்ணுபுரம் கூடுகைகளுக்கு சில தவிர்க்க …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/94078

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள்- 18
அன்புள்ள ஜெ, விழாவைப்பற்றி எழுத வேண்டும் என எண்ணியிருந்தேன். ஒரு இனிய அயர்ச்சி. கணங்களில் அமிழ்ந்திருக்கவே மனம் விரும்பியது. நான் ஆ.மாதவன் விழாவில் பங்குகொள்ளவில்லை. பிற அனைத்து விழாக்களிலும் பங்கேற்று இருக்கிறேன். சென்ற காலங்களின் நினைவுகள், நண்பர்கள், கொண்டாட்டங்கள் என்னை அலைகழித்தபடி இருந்தன. எல்லோரையும் நினைத்துக்கொண்டேன். விழா பதிவுகள் குவிந்து கிடக்கின்றன. என்னையும் ஒரு நண்பர் ‘அண்ணா’ என்று விளித்து கடிதம் எழுதியபோது தான் துணுக்குற்றேன். பாரதி, சங்கர கிருஷ்ணா மற்றும் இன்னபிறர்களை கண்டபோது எனக்கு பின்னே …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/94075

விஷ்ணுபுரம் விருது விழா, ஒருங்கிணைதலின் கொண்டாட்டம்
சென்ற விஷ்ணுபுரம் விருதுகள் குறித்த நினைவுகளை மீட்டிக்கொண்டிருந்தேன். இம்முறை விஷ்ணுபுரம் விருதுக்கு வண்ணதாசன் தேர்வு செய்யப்படுவது சென்ற மார்ச் மாதத்திலேயே நண்பர்கள் கூடி முடிவெடுத்த விஷயம். நான் ஐரோப்பியப் பயணம் முடிந்து வந்ததுமே வண்ணதாசனை அழைத்து அவருக்கு விருது அளிக்க இருப்பதாகவும் அதை ஏற்று அவர் எங்களை கௌரவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன். வண்ணதாசன் அவருக்கே உரித்தான தயக்கத்துடனும் பணிவுடனும் ஏற்புத்தெரிவித்தார். விருது அறிவிப்பை செப்டம்பர்- அக்டோபர் வாக்கில் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/93901

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 17
  அன்புள்ள ஜெ வுக்கு , 23 டிசம்பர் பொழுது கழியவேயில்லை. எப்போது 24 பகல் விடியும் ஆதர்ச எழுத்தாளர்களை எப்படி சந்திக்கப்போகிறோம் என்ற பரபரப்புடனேயே பொழுது விடிந்தது. காலையில் முதல் நிகழ்விலேயே நாஞ்சில் அய்யாவின் கம்பனின் தமிழாடல்களையும் பாரதியின் யுகத்தமிழையும் அவர்தம் சொல்லால் காது நிறைத்தேன். பாரதிமணி அய்யாவின் அனுபவங்கள் இயல்பான அவர்தம் உரையாடலால் அரங்கு களைகட்டியது. நான் மது உண்டவனில்லை. அவரின் ராயல் ஸ்காட்ச் டச்சில்! அது உண்ட மயக்கம் கொண்டேன். இனி விழா …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/94029

விஷ்ணுபுரம் விருதுவிழா உரை காணொளிகள்
பவா செல்லத்துரையின் உரை இணைப்பு   நாஸர் உரை     கு சிவராமன்   வண்ணதாசன் உரை ஜெயமோகன் உரை வண்ணதாசன் ஆவணப்படம் – சுருக்கப்பட்ட வடிவம் வண்ணதாசன் ஆவணப்படம் – முழு வடிவம்
Permanent link to this article: https://www.jeyamohan.in/94014

Older posts «