Category Archive: விளக்கம்

மன்னிக்கவும்

அன்புள்ள நண்பர்களுக்கு,   இன்று மாலை நிகழ்வதாக இருந்த காணொளி உரையாடல் நிகழவில்லை. தொழில்நுட்பச் சிக்கல். இணையத்தில் திரள் அதிகமாகிவிட்டது என்றார்கள். என் கணிப்பொறியின் ஓசையும் சரியில்லை என்றனர். என்ன காரணம் என்று தெரியவில்லை. இத்தகைய அதிநவீன செயல்பாடுகளுக்குரிய புதிய, நவீன கணிப்பொறிகளும் கேட்புகருவிகளும் என்னிடம் இல்லை என்பதும் காரணமாக இருக்கலாம். இது எனக்கு சரிவராது. தேவையற்ற எரிச்சல்தான் மிஞ்சும்.   சிலருடைய பொழுதை சற்றுநேரம் வீணாக்க நேர்ந்தமைக்கு வருந்துகிறேன். சுவரோவியம் வரையும் கலைஞனைப் பற்றிய எளிய, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130567

அறிவுரைத்தல் பற்றி மீண்டும்

எழுத்தாளன் வாழ்க்கை பற்றி அறிவுரைக்கலாமா? எழுத்தாளன் வாழ்க்கை பற்றிஅறிவுரைக்கலாமா? -2   அன்புள்ள ஆசிரியருக்கு   வணக்கம், நான் உங்கள் தொடர் வாசகன். தங்கள் வலைத்தளத்தில் நீங்கள் எழுதிய  எழுத்தாளன் வாழ்க்கை பற்றிஅறிவுரைக்கலாமா? கட்டுரையை படித்த பின் அதிர்ச்சி அடைந்து உறைந்துள்ளேன்   இன்று ஒருவன் “நான் முற்றிலும் தனிமனிதன்”,  என்று சொல்வான் என்றால் அவன் ஒருவகை மனக்குறுகல் கொண்டவன், ஒரு நோயாளி என்றே பொருள்.   இவ்வரிகள் பயமுறுத்துகின்றன. வாசகர்கள் யாரவது ஆலோசனை கேட்பார்கள் என்றிருந்தேன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129663

இந்துமதத்தைக் காப்பது…

ஒருதெய்வ வழிபாடு அன்பு ஜெ, சில நாட்களுக்கு முன்பு எனது அரேபிய நண்பர்களுடன் பேசும்போது பேச்சுவாக்கில் ஜப்பான், ஜெர்மன் போன்ற  தேசங்களுக்கும் இந்தியாவுக்கும் உள்ள பிரச்சினை மக்கள் தொகைதான். ஒன்று நிறைய இருப்பதினால் மற்றொன்று இல்லாததினால் என்று சொல்லிக் கொண்டிருந்தோம்.  அப்போது ஒரு அரேபிய நண்பன் உடன் சொன்னான் “இப்போது இஸ்லாமியர்” ஆப்ரிக்கா மற்றும் சிரியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு இடம்பெயர்கிறார்கள். கூடிய விரைவில் அங்கும் மக்கள் தொகை பெருகி இஸ்லாமியர்களால் நிரம்பும் என்றான். இத்தகைய “இஸ்லாமிய உலக” கனவு அன்று மட்டும் அல்ல மேலும் பல சந்தர்ப்பங்களில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117063

அ.மார்க்ஸ் பற்றி…

அன்புள்ள ஜெ , நீங்கள் “உரையாடும் காந்தி” நூலுக்கு  அ .மார்க்ஸ் அவர்களுக்கு  காணிக்கை அளித்ததை அறிந்து மிக்க மகிழ்ச்சியுற்றேன் .  ஏனெனில்  நான் உங்கள்  இருவரோட  வாசகன் .உங்கள் இருவர் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு . நான் உங்களின் “நவீன தமிழிலக்கிய அறிமுகம்” நூல் மூலமாக தான் இலக்கிய வாசிப்புக்குள் நுழைந்தேன் .உங்களோட கட்டுரைகளை   இணையத்தளத்தில் தொடர்ந்து வாசித்து வருகிறேன் . சமீபத்தில் நடந்த விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்து கொண்டேன். அ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116850

பத்மஸ்ரீ – விவாதங்களின் முடிவில்

பத்மஸ்ரீ விருது தொடர்பாக கிட்டத்தட்ட ஆயிரம் கடிதங்கள். கடிதங்கள் எழுதிய அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி. அக்கறையுடன் ஆலோசனை சொன்னவர்கள், வருந்தியவர்கள், வாழ்த்தியவர்கள் அனைவரையும் புரிந்துகொள்கிறேன். சென்ற சிலநாட்களாக செல்பேசியை எடுக்கவில்லை. மின்னஞ்சல்களுக்கு பதிலும் போடவில்லை. ஒவ்வொருநாளும் ஆயிரம் அழைப்புகள் வரை வந்தன. தேசிய, வட்டார செய்தியூடகங்களின் தெரிந்த , தெரியாத நிருபர்கள் அழைத்துக்கொண்டே இருந்தனர். அழைத்து பதில்பெறாது சினம் கொண்ட நண்பர்களிடம் பொறுத்தருளக் கோருகிறேன். எனக்காக சிபாரிசு செய்தவர்கள் தமிழின் மூன்று முதன்மை ஆளுமைகள். அவர்களிடம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83865

இந்தக்கதைகள்- சில விளக்கங்கள்

புதியவர்களின் கதைகள் என்றபேரில் வெளிவந்த முதல்வரிசைக் கதைகள் நற்றிணை பதிப்பகத்தாரால் நூலாக வெளியிடப்படுகின்றன. இது இரண்டாவது வரிசை. இதுவும் நூலாக வெளிவரும். ஏன் இக்கதைவரிசை? இக்கதைகளை அறிமுகம் செய்வதற்கான முக்கியமான காரணம் ஒன்றுதான். இன்று, தமிழில் எந்தப் பெரும்பத்திரிகையும் சிறுகதைகளை கவனம் கொடுத்து தேர்ந்தெடுப்பதோ வெளியிடுவதோ இல்லை. சிறுகதைகள் வார இதழில் வெளிவந்தாலும் கவனிப்பு பெறுவதில்லை. நீங்கள் கடைசியாக விகடனில் அல்லது கல்கியில் வெளிவந்த எந்தச்சிறுகதையை வாசித்தீர்கள் அல்லது உங்களிடம் எவரேனும் வாசித்ததாகச் சொன்னார்கள் என நினைவுபடுத்திப்பாருங்கள், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41134