Category Archive: விஷ்ணுபுரம் விருது

விழா- கடிதங்கள்- விக்ரம், சந்திரசேகரன்

  அன்புள்ள ஜெயமோகன் அண்ணா, விஷ்ணுபுரம் பத்தாம் ஆண்டின் விருதுவிழா ஒரு வாசகனாக மனநிறைவு அளித்தது இசை, யுவன் சந்திரசேகர், கே.என். செந்தில், வெண்பாகீதாயன், அமிர்தம் சூரியா, சுரேஷ்குமார இந்திரஜித், ரவிசுப்பிரமணியம், ஜானவி பருவா, பெருந்தேவி, சங்கரப்பிள்ளை, அபி என அமர்வுகள் அனைத்தும். நன்றாக இருந்தது. ஆவணப்படம் நன்றாக இருந்தது. சினிமா தாக்கம், சங்கீத ரசனை, இந்துஸ்தானி இசை, கர்நாடக இசைக்கலைஞர்கள், எழுத்தில் மேற்கு உலகின் தாக்கம், எளிய மக்களின் துயர், அமானுஷ்யம், பழந்தமிழ் இலக்கியத்துடனான உறவு, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129069

விழா கடிதங்கள், ரங்கராஜன்,செல்வக்குமார்

அன்புள்ள ஜெ நலம்தானே? விஷ்ணுபுரம் விருதுவிழாவிற்கு வந்துவிட்டு திரும்பி அந்த மீட்டலிலேயே இருந்துகொண்டிருக்கிறேன். என்னைப்போன்ற வாசகர்களுக்கெல்லாம் இத்தகைய திருவிழாக்கள் பெரிய அனுபவம். திரைப்படவிழாவுக்கு நான் வழக்கமாகச் செல்வதுண்டு. ஆண்டு முழுக்க சினிமா பார்க்கிறோம். ஆனால் ஒரு சினிமாவிழாவின் கொண்டாட்டமே வேறு. அப்போது மனம் தளும்பிக்கொண்டிருக்கிறது. சினிமா பற்றி மட்டுமே சிந்தனைசெய்துகொண்டிருக்கிறோம். அதேபோலத்தான் இந்த விழாவும். இந்த விழாவிலே ஏராளமானவர்கள் கலந்துகொள்வதற்கான காரணம் இந்தப்போதைதான். நிறைய வாசிக்கிறோம். ஆனால் அதைப்பற்றிப் பேச ஆளில்லை. அதைப்பற்றி இங்கே எங்கேயும் பேச்சில்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129081

ஆவணப்படம் – கடிதங்கள்

அபி -ஆவணப்படம் அன்புள்ள ஜெ கே.பி.வினோத் இயக்கிய ஆவணப்படத்தைப் பார்த்தேன். அந்தரநடை என்னும் தலைப்பில் தொடங்கி அபியை மிக நெருக்கமாக பின் தொடர்ந்திருக்கிறது ஆவணப்படம். பொதுவாக ஆவணப்படங்கள் எழுத்தாளரை ஒரு மனிதனாகவே கணக்கில் எடுத்துக்கொள்ளும். அந்த மனிதனின் ஆசாபாசங்கள், அவனுடைய தனிப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றையே அவை அதிகமாகப்பேசும். கே.பி.வினோதின் இந்த ஆவணப்படம் அபியை கவிஞராக மட்டுமே கருத்தில் கொள்கிறது. அவரை கவிதை வழியாக மட்டுமே அணுகிச் செல்கிறது. கவிதையை அபியைக்கொண்டே புரிந்துகொள்ள முயல்கிறது. அது மிகச்சிறந்த முயற்சி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129083

விழா கடிதம்- காளிப்பிரசாத்,சிவக்குமார்

அன்புள்ள சார், ஆவணப்படம் ஒளிபரப்பாகி முடிந்தவுடன் விழா மேடையை மூடியிருந்த திரைச்சீலையைத் திறந்தனர். ஆ! என்ற வியப்பொலி நான் அமர்ந்திருந்த வரிசையின் பின்னாலிலிருந்து எழுந்தது. மேடை அமைப்பு ஒரு பிரமிப்பை உண்டாக்கியிருந்தது. பக்கத் தடுப்புகள் பொன்னிறமாய் மின்ன இந்திர நீலமாய் ஜொலித்தது விழா மேடை. முதலிருநாள் அமர்வுகளுக்கான மேடையுமே ஒரு வண்ணக்கடலாக இருந்தது. வெற்றிக்கோப்பை கேப்டன் க்விஸ் செந்திலுக்குத்தான். ஆட்டநாயகன் விருதை விஜயசூரியனுக்கு அளித்து விடலாம் அமர்வுகள் மூலம் ஒரு வாசகனாக சுரேஷ்குமார் இந்திரஜித், பெருந்தேவி, கேஜி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129068

மீள்கை

விஷ்ணுபுரம் விழா எப்போதுமே ஒரு தனிமையை அளிக்கிறது. நண்பர்கள் புடைசூழ இருந்து பேசி, சிரித்து, களித்து மெல்ல உருவாகும் தனிமை அது. முதலில் உருவாவது ஒருவகையான சங்கடம். நான் இவ்விழாவில் என்னை முன்வைப்பதில்லை. எவ்வகையிலும் என் படைப்புக்கள் பேசப்படுவதே இல்லை. ஆயினும் ஒரு பெருமிதம் உருவாவதை தவிர்க்கமுடியாது. அப்பெருமிதம் ஒருநாள் நீடிக்கும். விழா மறுநாள் காலை உலகையே வென்றுவிட்டது போலிருக்கும். நண்பர்களும் நிறைவுடன் மிதப்புடன் இருப்பார்கள். அன்று மாலைக்குள் அது குறையத்தொடங்கும். குறைந்தாகவேண்டும். இவை என்னுடையவை அல்ல, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129022

விழா கடிதம் – நினேஷ்குமார்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, முதன் முறையாக இந்த வருடம்தான் விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்து கொள்கிறேன். வெள்ளிக்கிழமை காலை விழா அரங்கம் வந்தடைந்த பொழுது மீனாம்பிகை தங்கும் அறைக்கு வழிகாட்டினார்கள். அதற்குப்பின் இந்த இரண்டு நாட்களும் தங்கும் அறை சம்பந்தமாக செய்த அனைத்து தொந்தரவுகளை பொருட்படுத்தாமல் அவர்கள் வீட்டு விசேஷத்திற்கு வந்த விருந்தினர்களை போல் கவனித்துகொண்டார்கள். அருமையான உணவு, தங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகள், தெளிவான விழா ஒருங்கிணைப்பு செய்த விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கு நன்றிகள். நானும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129057

விழா 2019

விஷ்ணுபுரம் விழா 2019 உரைகள் விஷ்ணுபுரம் விழாவுக்கு இம்முறை நேராக மலேசியாவிலிருந்து வந்துசேர்ந்தேன். விழா ஏற்பாடுகள் எதையும் என்னிடம் தெரிவிக்கவேண்டாம் என சொல்லியிருந்தேன். தெரிவிப்பதில் பெரிய பயன் ஏதுமில்லை என்பது ஒரு காரணம். நான் அவற்றில் சொல்ல ஏதுமில்லை. அமைப்பாளர்கள் செந்தில், ராம்குமார், விஜய்சூரியன், மீனாம்பிகை, செல்வேந்திரன், ஸ்ரீனிவாசன் போன்றவர்கள் அமைப்பாளர்களாகவே பல்லாண்டுகளாக பணியாற்றுபவர்கள். ஆகவே நாகர்கோயிலில் ரயிலில் ஏறிப்படுத்தபோதுதான் விஷ்ணுபுரம் விருது பற்றி நினைத்துக்கொண்டேன். அதுவரை மலேசியாவில் நான் ஆற்றிய உரைகளைச் சார்ந்தே என் உள்ளம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129021

விழா- கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்! வணக்கம்.விருது விழாவுக்கு வந்திராத அது பற்றி அறிந்திராத ஒருவரை நினைவில் கொண்டு என் விழா நினைவுகளை எழுதியிருக்கிறேன். அதன் சுட்டி:https://wp.me/patmC2-9r நன்றி. சாந்தமூர்த்தி, மன்னார்குடி. *** பெருமதிப்புக்குரிய ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். விஷ்ணுபுரம் விழாவில் இந்த முறை கலந்து கொண்டதும் உங்களை சந்தித்ததும் சென்ற ஆண்டில் மிக மறக்க முடியாத நிகழ்வாக எனக்கு அமைந்தது. முக்கியமாக உங்களை நேரில் முதல் முறையாக சந்தித்ததும், (பார்த்தது என்று தான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129047

விழா கடிதம்- பாலாஜி பிருத்விராஜ்,ஜெகதீஷ்

வணக்கம்.. நான் முதன் முறையாக விஷ்ணுபுரம் விழாவிற்கு இவ்வருடம் 2019 வந்திருந்தேன்.மிகச் சிறப்பாக நடைபெற்றது பெருந்திருவிழா. அரங்கில் செலவிட்ட எனது கணங்கள் அனைத்திலும் பிரமிப்பில் திளைத்துக்கொண்டிருந்தேன். பல்வேறு எழுத்தார்கள், வாசகர்கள் என ஒரு பேரறிவுக் கூட்டம் அங்கு நிறைந்திருந்தது. கவிஞர் அபிக்கு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நினைவுகளை விஷ்ணுபுரம் அளித்திருக்கிறது. விழா ஒருங்கிணைப்பு மிக அருமையாக செய்திருந்தார்கள் அவர்களுக்கு நன்றி.இரண்டாம் நாள் அங்கு வருவதற்கு உண்மையில் பணம் இல்லை பக்கத்து வீட்டில் நூறு ரூபாய் கடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129008

அபி -ஆவணப்படம்

அபி ஆவணப்படம் விஷ்ணுபுரம் விழாவில் 2019 டிசம்பர் 28 அன்று வெளியிடப்பட்ட து     ஒளிப்பதிவு – பிரகாஷ் அருண் படத்தொகுப்பு – குமரேசன் படத்தொகுப்பு மேற்பார்வை – மனோகரன் ஒலிப்பதிவு – சுஜீத் ஹைதர் ஒலிப்பதிவுகூடம் – ஆக்டேவ்ஸ் வரைச்சித்திரம் – ஹாசிஃப் கான்

Permanent link to this article: https://www.jeyamohan.in/129002

Older posts «

» Newer posts