Category Archive: விருது

போகன் சங்கருக்கும், சங்கர் கணேஷுக்கும் கண்ணதாசன் விருது

எழுத்தாளர் போகன் சங்கருக்கும் இசையமைப்பாளர் சங்கர் கணேஷுக்கும்  2020 ஆம் ஆண்டுக்கான கண்ணதாசன் விருது வழங்கப்பட்டுள்ளது. கவிஞர் கண்ணதாசன் நினைவாக கோவையில் இருந்து வழங்கப்படும் இவ்விருது ஒரு திரைக்கலைஞருக்கும் ஓர் இலக்கியவாதிக்கும் வழங்கப்படுகிறது.   இவ்வாண்டுக்கான கலை விருதைப் பெறும் சங்கர் கணேஷ் என் விருப்பத்திற்குரியவர். ஆச்சரியமென்னவென்றால் நேற்று மாலைதான் நான் குழந்தைகளுடன் அமர்ந்து சங்கர் கணேஷ் இசையமைத்த பாடல்களை தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டிருந்தேன்.எனக்குப் பிடித்தமான பல பாடல்கள் அவருடையவை. நான் என் பள்ளிப்பருவத்தில் கேட்ட ‘செந்தாமரையே செந்தேனிதழே’ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130196

விஷ்ணுபுரம் – கடிதம்

  என் அன்பிற்கினிய ஜெ,     புத்தகம் என் போதைப் பொருள். பள்ளி காலங்களில் motivation புத்தகம், விவேகானந்தர், பாரதி, ஓசோ, சுகி சிவம், தென்கச்சி கோ.சா கதைகள், தியானம், பைபிள், தத்துவார்த்த சிந்தனைகள் போன்றவற்றில் ஆரம்பித்து…. கல்லூரியில் பெரும்பாலும் சுயசரிதையில் தேடல் தொடர்ந்தது. குறிப்பாக பகத்சிங், போஸ், பெரியார், பிடல், சே, செங்கிஸ்கான், திராவிட இயக்க வரலாறு… இத்யாதி இத்யைகள் என் தொடர்ந்தேன்… வரலாற்றின் வாயிலில், சுயசரிதைகள் வழி பல தலைவர்களின் வாழ்கை நிகழ்வுகளில், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128326

பத்ம விருதாளர்கள்

இந்த ஆண்டுக்கான பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டும் மிக முக்கியமான பலர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். ஊடகங்களால் உலகுக்குக் காட்டப்படாதவர்களே பலர் அவர்களில் உள்ளனர்.   தமிழகத்தில் பத்மவிருது பெற்ற கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் காந்திய சூழலில் அறியப்பட்டவர். அமர்சேவா அமைப்பை நடத்திவரும் ராமகிருஷ்ணன் அவர்களும் ஓரளவு புகழ்பெற்றவர். ஆனால் தமிழகத்திற்கு வெளியே பத்ம விருது பெற்ற பலர் அறியப்படாதவர்கள். அவர்களில் காடுகளைப்பற்றிய அறிவின் களஞ்சியமான பழங்குடி அன்னையும் உண்டு.   பொதுவாக இவர்கள் பற்றிய கவனம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129590

விழா கடிதம் – ரவிச்சந்திரன்

விஷ்ணுபுரம் விழா 2019 உரைகள் அன்புள்ள ஜெ. விஷ்ணுபுரம் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஒரு சிறு பிசகு கூட இல்லை. அத்தனை பேரும் ஏதோ ஒருவகையில் தனிப்பட்ட முறையில் கவனிக்கப்பட்டார்கள். நான் ஒரு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளன். இப்படி ஒரு பெரிய விழாவை ஒருங்கிணைத்து இந்த அளவில் நடத்துவது பெரிய பணி. இதைச்செய்வதைப்பற்றி எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம். தொழில்விஷயங்களில் ஏற்பாடுசெய்யும் அரங்குகளில்கூட அடிக்கடி சிக்கல்கள் வருகின்றன. ஆனால் இலக்கிய விஷயங்களை இப்படி அற்புதமாக ஒருங்கிணைத்த உங்கள் டீம் பாராட்டுக்குரியது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129224

விழா – வ.சௌந்தரராஜன்

அபி -ஆவணப்படம் விஷ்ணுபுரம் விழா 2019 உரைகள் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம். சென்ற வருடம் விஷ்ணுபுரம் விழாவிற்கு வந்துவிட்டு எழுதிய கடிதத்தில், அடுத்த வருடம் முதல் அமர்விற்கே தாமதம் இல்லாமல் வருவேன் என்றும், எழுத்தாளர்களின் படைப்புகளை வாசித்துவிட்டு வருவேன் என்றும், Quiz செந்தில் கேள்விக்கு ஒரு பதிலாவது சொல்லுவேன் என்றும் உறுதிமொழிகள் பல எடுத்துக்கொண்டேன். முதல் உறுதிமொழி இலகுவானது, நிறைவேற்றி ஆகிவிட்டது. இரண்டாவது உறுதிமொழி ஐந்துக்கு இரண்டு பழுதில்லை என்ற வகையில் கொஞ்சம் வீட்டுப்பாடம் செய்துவிட்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129276

விழா கடிதங்கள் -ராகவேந்திரன், சுரேஷ்குமார்

  அன்பு நிறை ஜெ,   இவ்வாண்டும் விஷ்ணுபுரம் விருது விழா சிறப்பாக நடைபெற்றது. அபியின் ஆளுமையை அனைத்துப் பேச்சாளர்களும் தம் தம் கோணத்தில் அணுகினார்கள்.   சங்கரப் பிள்ளை, ஒரு கவிஞனின் கொந்தளிப்புடன் அபி கவிதைகள் குறித்துப் பேசினார். ஏ கே ராமானுஜனின்  அக நிலக் காட்சி போல அபி ஒரு அகத் தெருக் காட்சியைப்  பாடியவர் ; தெருக்களின் துயரைப் பாடியவர் என்றது அழகு.  புறவய உலகில் இருந்து எழுதிய அகநிலைக் கவிஞராக அபியை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129231

விழா கடிதங்கள் – சங்கர், சிவராஜ்

அன்புள்ள ஜெ அவர்களுக்கு, வணக்கம். இம்முறை விஷ்ணுபுரம் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஜானவி பரூவாவின் மாயவி(த்)தைக் கதையை வாசித்தபின் அவரின் தொகுப்பைச் சென்னையில் தேடினேன். கிடைக்கவில்லை. ப்ரதி அமேசானில் இருக்கிறது. டெலிவரி சார்ஜ் என அவர்கள் போடும் தொகை புத்தகத்தின் விலையில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு இருப்பதால் மலைத்துக்கொண்டு வாங்கவில்லை. அவரின் மின்னஞ்சல் முகவரி தாருங்களேன். புத்தகத்தை வாங்கி படித்தபின் அவருடன் புத்தகங்களைப் பற்றி எண்ணங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். எனக்கு அந்தக் கதைப் பிடித்திருந்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129212

விழா கடிதங்கள்- நாராயணசாமி,மதி

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். விஷ்ணுபுரம் விழா, என்னைப் போன்ற சாதாரண வாசகனுக்கு வாசிப்பை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல பெரிய உந்துதலாக இருக்கிறது. உயர்வான (பழைய மற்றும் புதிய) எழுத்தாளர்களைக் கண்டடைந்து வாசிப்பதற்கு ஒரு திறப்பாக இருக்கின்றது. முதல் முறையாகக் கலந்து கொள்வதால், விழாவின் வடிவம் மற்றும் கலந்துரையாடல்கள் பற்றி முழுமையாக அறிந்திருக்கவில்லை. கலந்துரையாடல்கள் இன்னும் நெருக்கமாக அமையவும், அதன் வழியாக மேலும் நுண்மையான அனுபவங்களைப் பெறவும், சிறப்பு அழைப்பு எழுத்தாளர்களின் படைப்புகளை வாசித்து வந்திருக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129183

விழா கடிதங்கள்- அருள், சரவணக்குமார்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, இது என்னுடைய இரண்டாவது விஷ்ணுபுரம் விழா. உண்மையில் கடந்த இரண்டாண்டுகள் மட்டுமே தீவிரமாக வாசிக்கிறேன், இலக்கிய பரிச்சயம் ஏற்பட்டு 5 ஆண்டுகளுக்கும் குறைவு. கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் பெரும்மாற்றதை அடைந்துள்ளேன் என்பது இவ்விழா எனக்கு உணர்த்தியது. நான் என்னுள் ஒடுங்க நேர்ந்தவன், அதன் காரணங்களை இன்று வினவ தொடங்கியுள்ளேன். நான் நண்பர்களை அமைத்து கொண்டதும் என்னை விரித்து கொண்டதும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்த கடந்த வருட அரங்குகளில் தான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129181

விழா கடிதங்கள்- விஜயபாரதி, அன்பரசன்

அன்புள்ள ஆசிரியருக்கு, இது நான் பங்கேற்கும் இரண்டாவது விஷ்ணுபுரம் விருது விழா. இந்த ஒரு வருட காலத்தைத் திரும்பிப் பார்க்கும்போது இலக்கியப் பரிச்சயம் உள்ள நண்பர்கள் வட்டமும் வாசிப்பும் பன்மடங்கு அதிகரித்துள்ளன என உணர்கிறேன். உடற்பயிற்சி வகைமைகளில் அதிதீவிர பயிற்சி (High Intensity Interval Training) என்றொன்று உண்டு. 10 நிமிடத்திற்குள், ஓய்வு இடைவெளி அதிகமில்லாமல் உடலின் மொத்த பாகங்களையும் பயிற்சிக்கு உட்படுத்தும் நுட்பம் கொண்டது. ஒரே இடர், திடீரென ஆரம்பிப்பவர்களுக்கு உடல்வலி குறைய 3 நாட்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129177

Older posts «