Category Archive: வாழ்த்து

சுனில் கிருஷ்ணனுக்கு யுவபுரஸ்கார் விருது

கேந்திர சாகித்ய அக்காதமி 2018 ஆம் ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருது நண்பர் சுனில் கிருஷ்ணனின் அம்புப்படுக்கை சிறுகதைத் தொகுதிக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழின் முக்கியமான எழுத்தாளராக சுனில் உருவாகி வருகிறார். விமர்சனத்துறையிலும் தீவிரமாக இயங்கி வருகிறார். காரைக்குடியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவரான சுனில் கிருஷ்ணன் காந்தியக் கொள்கைகளில் ஈடுபாடுள்ளவர். காந்தி டுடே என்ற இணையதளத்தையும் நடத்தி வருகிறார் சுனில் கிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள் ***   சுனில் மின்னஞ்சல் [email protected] காந்தி டுடே இணையதளம் சுநீல் கிருஷ்ணன் சுனீல்கிருஷ்ணனின் அம்புப்படுக்கை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110462

தேவதச்சனுக்கு விருது

கவிஞர் தேவதச்சன் அவர்களுக்கு தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ் நூல் விற்பனை மேம்பாட்டுக்குழுமத்தின் இந்த ஆண்டின் சிறந்த கவிதை நூலிற்கான விருது வழங்கப்படுகிறது.   அவருடைய மர்மநபர்[உயிர்மை] நூலுக்கு இந்தப்பரிசு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டைஒய் எம் சி. ஏ மைதானத்தில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் இன்று [ 31- 7-2017] மாலை விருது விழா   தேவதச்சனுக்கு வாழ்த்துக்கள்

Permanent link to this article: https://www.jeyamohan.in/101000

அசோகமித்திரனுக்கும் ஷோபா சக்திக்கும் விருது

  கனடா இலக்கியத்தோட்ட விருது  கண்டிவீரன் என்னும் தொகுதிக்காக ஷோபா சக்திக்கும் அபுனைவு பிரிவில் குறுக்குவெட்டுக்கள் என்னும் தொகுப்புக்காக அசோகமித்திரனுக்கும் வழங்கபட்டுள்ளன ஷோபா சக்தியும் அசோகமித்திரனும் தமிழ் இலக்கிய உலகின் இரு பெரும் படைப்பாளிகள். இருவருக்கும் என் வணக்கமும் வாழ்த்தும்   ஜெ  

Permanent link to this article: https://www.jeyamohan.in/88399

குமரகுருபரனுக்கு விருது

  கனடாவில் இருந்து அளிக்கப்படும் இலக்கியத்தோட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. குமரகுருபரன் எழுதிய மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கமுடியாது என்ற தொகுதிக்காக கவிதைக்கான விருதைப்பெற்றிருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள்  

Permanent link to this article: https://www.jeyamohan.in/88394

நவீன விருட்சம் நூறாவது இதழ்

  சில சிற்றிதழ்களை நான் மறக்கமுடியாது. ஒன்று, கொல்லிப்பாவை. அதில்தான் என்னுடைய கைதி என்ற சிறியகவிதை பிரசுரமாகியது. சிற்றிதழில் வெளியான என் முதல் படைப்பு அது. இன்னொன்று முன்றில். ஆரம்பகாலப்படைப்புகள் சில அதில் வெளிவந்தன.  அவை இன்று எனக்கு முக்கியமானவை அல்ல ஆனால் அன்று க.நா.சு பெயருடன் என் பெயர் அச்சிடப்பட்டு வெளிவந்ததை ஒரு பெரிய கௌரவமாக கொண்டாடினேன். ஞானி நடத்திய நிகழ், பொன்விஜயனின் புதியநம்பிக்கை ஆகிய இதழ்களில் என் படைப்புகள் அன்று வெளிவந்தன. சுப்ரபாரதி மணியனின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84943

ராஜாவுக்கு விருது

  எல்லா மின்னஞ்சல்களையும் வாசிக்காமல் இருக்கும் திமிரின் விலையாக ஒரு நல்ல நிகழ்ச்சியைத் தவறவிட்டேன். கேரள அரசின் சுற்றுலாத்துறை வழங்கும் பெருமதிப்பிற்குரிய விருதாகிய நிஷாகந்தி புரஸ்காரம் இவ்வருடம் இளையராஜாவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. கேரளமுதல்வர் உம்மன்சாண்டி விருதை வழங்கி ராஜாவைக் கௌரவித்தார் ராஜா தமிழ்நாட்டில் பெருமதிப்புக்குரியவராக மக்களிடையே இருந்தாலும் அரசுசார்ந்து அவர் பெரிதாக மதிக்கப்பட்டதில்லை. இங்கே எந்தக்கலைஞரும் அப்படி அரசாலோ அரசுப்பொறுப்பில் இருப்பவர்களாலோ மதிக்கப்பட்டதில்லை என்பதே உண்மை. மிகப்பிந்திக்கிடைத்த பத்மபூஷண் மட்டுமே அவர் பெருமைகொள்ளத்தக்க விருது எனலாம். கேரள அரசு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83672

இ. மயூரநாதனுக்கு இயல் விருது – 2015

  இவ்வருடத்திற்கான இயல் விருது தமிழ் விக்கிப்பீடியா பக்கத்தை உருவாக்கி ஒருங்கிணைக்கும் மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அறிவு என்பதே உலகளாவிய ஒற்றைப்பேரியக்கம் என்ற அளவில் இணையத்தால் இன்று ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. விக்கிப்பீடியா அதில் ஆற்றும் பங்கு மிகப்பெரியது. தமிழில் அதன் பங்களிப்பை முன்னெடுக்கும் மயூரநாதன் அவர்களின் பங்களிப்பு போற்றுதலுக்குரியது திரு மயூரநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்     இயல் அமைப்பின் செய்தி கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வருடா வருடம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது ( …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/82804

ஆ. மாதவனுக்கு சாகித்ய அக்காதமி விருது

  மூத்த எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு இவ்வருடத்திற்கான சாகித்ய அக்காதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் இயல்புவாத எழுத்தின் முன்னோடிகளில் ஒருவர் ஆ. மாதவன். புகைப்படத்துல்லியத்துடன் புறவய உலகைச்சித்தரிக்கும் அழகியல் இது. மானுட அகத்தின் தீமையை ஊசிமுனைக்கூர்மையுடன் தொட்டு காட்டும் படைப்புகள் அவருடையவை. ஆ.மாதவன் கடைத்தெருவின் கலைஞன். திருவனந்தபுரம் சாலைத்தெருவின் வாழ்க்கையைப்பற்றி மட்டுமே அவர் எழுதினார். பிச்சைக்காரர் முதல் பெருவணிகர் வரை அனைவருமே ஒருவரை ஒருவர் எத்திப்பிழைக்கும் அந்தத்தெரு அவருக்கு இவ்வுலகின் குறியீடாகவே விரிந்தது ஒருபடைப்பின் படைப்புகளில் மூன்றில் ஒன்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81927

அப்துல் ரகுமான் – பவள விழா

வானம்பாடி இயக்கத்தின் முதன்மைக் கவிஞர்களில் ஒருவரான அப்துல் ரகுமான் அவர்களுக்கு இன்றும் நாளையுமாக சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் பவளவிழா கொண்டாடப்படுகிறது. கவிக்கோ கருவூலம் என்னும் நூலும் வெளியிடப்படுகிறது. அதற்கான அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றேன் கவிஞர் என்பதுடன் அரசியல் பிரமுகர் என்னும் அடையாளமும் கொண்டிருப்பதனால் மிகப்பெரிய விழாவாக இது ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மு.கருணாநிதி உட்பட முக்கியமான அரசியல்வாதிகளும் மனுஷ்யபுத்திரன் போன்ற இலக்கியவாதிகளும் பங்குகொள்கிறார்கள் . நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துக்கள். தமிழ்ப்புதுக்கவிதை இயக்கம் ஒன்றுக்கும் மேற்பட்ட முன்னுதாரணங்களைக் கொண்டு உருவானது. முன்னோடிகளாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80118

நெ.து.சுந்தரவடிவேலு நினைவு விருது- எஸ்.ராமகிருஷ்ணனுக்கு

தமிழகக் கல்வி வளர்ச்சிக்கு உண்மையிலேயே பெரும்பாடுபட்டவர் நெ.து.சுந்தரவடிவேலு. அவரது கனவையும் உழைப்பையும்தான் காமராஜர் தன் ஆயுதமாகக் கொண்டிருந்தார். ஏதேதோ அரசியல்தலைவர்களின் , சாதித்தலைவர்களின், மதப்பரப்புநர்களின் பெயர்களைச் சொல்லி அவரில்லேன்னா நான்லாம் மாடும் மேச்சிட்டிருந்திருப்பேன் என்று சொல்லும் தமிழ்மக்களில் பெரும்பாலானவர்கள் அறியாத பெயர் அவருடையது. தமிழகக் கல்வித்துறைச் செயலர் என்னும் உயர்பதவியில் இருந்த சுந்தரவடிவேலு ஐரோப்பாவின் சர்ச் ஸ்கூல் , கம்யூனிடி ஸ்கூல் போன்ற அமைப்புகளை நேரில் சென்று ஆராய்ந்து அந்த பாணியில் தமிழகத்தில் உருவாக்கிய பஞ்சாயத்துப் பள்ளிகளால்தான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79771

Older posts «