Category Archive: வாசிப்பு

இன்றைய வாசிப்பு

படிப்பறைப் படங்கள் புதிய வாசிப்பறை வலி வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் வெவ்வேறு இடமிருக்கவேண்டும் என்பது என் செல்லக்கொள்கை. ‘பெட் தியரி’. வாசிக்கும் இடத்தில் எழுதும் உளநிலை வருவதில்லை. எழுதும் இடத்தில் வாசிப்பதற்கும். வாசிக்கும் இடத்தை வேறெதற்கும் பயன்படுத்தக்கூடாது. வசதியான இடம், அழகான இடம், ‘இங்கே அமர்ந்து வாசிக்கலாமே’ என்று தோன்றும்படியான இடம், கடந்துபோகும்போதெல்லாம் வாசிக்கவேண்டும் என எண்ணச்செய்யும் இடம் தேவை.   ஆனால் வீட்டில் அதிக இடமில்லை.எல்லா இடத்திலும் புத்தகங்கள் படுக்கைகள் இன்னபிற. வீட்டை பெரிதாக்குவதில் பொருளில்லை என் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129617/

அழகியபெரியவன் கதைகள் – காளிப்பிரசாத்

  (1)   மிகச்சரியாக பதினோரு வருடங்கள் முன்பு விகடனில் வெளியான ‘வாகனம் பூக்கும் சாலை’ என்ற சிறுகதைதான் அழகியபெரியவன் எழுதி நான் வாசித்த முதல் சிறுகதை. அதற்கு விகடன் தளத்தில் பின்னூட்டமிட்டதும் நினைவிருக்கிறது. அதன்பின் இணையதளங்களில் அவரது கட்டுரைகளை வாசித்து வந்தாலும், கேணி கூட்டம் போன்ற மேடைகளில் அவரது உரைகளை கேட்டிருந்தாலும்  மீண்டும் முழுமையாக அவரது படைப்புகளை வாசிக்கும் வாய்ப்பு சென்ற வருடம்தான் வாய்த்தது. சென்ற வருட துவக்கத்தில் தமிழினி வெளியீடாக வந்திருந்த ‘கொங்குதேர் வாழ்க்கை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129628/

காந்தி வாசித்த நூல்கள்

  அன்புள்ள ஜெ   காந்தி வாசித்த நூல்களின் பட்டியல். நிறையவே வாசித்திருக்கிறார் என தெரிகிறது. மதநூல்களுக்குச் சமானமாகவே வானியல்நூல்களும் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது http://www.gandhi-manibhavan.org/eduresources/bks_read_by_g.htm   மணிபவன் என்னும் இந்தத் தளம் மிக உதவிகரமானது   கிருஷ்ணன் ஈரோடு    

Permanent link to this article: https://www.jeyamohan.in/127874/

ஒரு வாசகனின் வழி- சக்திவேல்

அன்பு ஜெயமோகன்,   வாசிப்புக்குள் எப்போது நுழைந்தேன் என்பதை இக்கணம் யோசித்தால், ஏழாம் வகுப்புதான் நினைவுக்கு வருகிறது. அப்போது எனக்கு பாபு என்பவர் தமிழாசிரியராக இருந்தார். வகுப்பறையில் பாடம் எடுக்க மாட்டார்; பெரும்பாலும் மரத்தடிகள்தான். திருக்குறளை அவர் உரத்த குரலில் சொல்லிக் கொண்டிருக்க, அதைக்கேட்டு மயங்கி இருந்திருக்கிறேன். சில தனிப்பாடல்களை சுவைகுன்றாமல் அவர் பாணியில் சிலாகிப்பார்; அப்பாடல்களில் உள்ள பல சொற்களைச் சுட்டி அதன் அழகை விவரிப்பார். தமிழ்ச்சொற்களின் மீது இன்ம்புரியா காதல் கொண்டிருந்த என்னை, அவர் இன்னும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127629/

இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும்

காற்றூளிக்கும் ஒவ்வாத கணக்கன் ராமலிங்கன் பாடலா அருட்பாவாகும்? பளா பளா நன்று நன்று. ஒரு மகிமையுமில்லா வடலூர் கணக்கன் பாடலா அருட்பாவாகும்? போலிச் சைவர்களே புகண்மின் புகண்மின்… ‘   [இராமலிங்கம் பாடலாபாச தர்ப்பணம்]   *** ‘ ‘எனையார் கெலிப்பார்கள் என்றிரையு மூடா நினையோர் பொருட்டாய் நினையோம் – பனையேறும் பாம்பொத்த பாபிப்பயலே குரக்கிறைவா நாம்பொத்த நின்னாலென்னாகுமடா – வேம்பொத்த பாதகனாம் ராமலிங்கன் பட்டியன் அன்றோதான் வாதுசெல்லும் சண்டியே வாய்மூடாய் ‘ ‘   [திரிகோணமலை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2362/

மாணவர்களுக்கான இலக்கிய வாசிப்பு

  அன்புள்ள ஜெயமோகன், நலமாயிருக்கிறீர்களா ?   நாகர்கோவில் பொறியியல் கல்லூரியில் இலக்கியம் குறித்து நீங்கள் ஆற்றிய உரையைக் கேட்டேன். ரகுராம் ராஜன் சொன்னதாக நீங்கள் சொன்ன செய்திகள் முற்றிலும் உண்மையே. யுவல் நோவா ஹராரியின் ’21 lessons for the 21st century’ நூலில் இவை குறித்த ஆழமான கட்டுரைகள் உள்ளன. சமீபத்தில் நிகழவிருக்கும், தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் பெருமாற்றங்களைச் சொல்லியிருப்பார்.   அந்த நூலில் அவர் கேட்கும் கேள்விகள் மிகவும் நுட்பமானவை. ஒருவனது வாழ்நாளில் 2-3 …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127486/

ருஷ்ய இலக்கியம் வாசிப்பதன் தடைகள்

அன்புள்ள ஜெ, நலமா? ரஷ்ய இலக்கியம் வாசித்தல் சார்ந்த சில கேள்விகளை முன்வைக்க நினைக்கிறேன். நீங்கள்,எஸ்.ரா,கமல் ஹஸன்,மிஸ்க்கின் போன்ற நான் மதிக்கும் பலர் சொல்லி, ரஷ்ய இலக்கியம் வாசிக்க, செவ்விலக்கிய நாவல்களாகிய – குற்றமும் தண்டனையும், தி Idiot , போரும் அமைதியும், புத்துயிர்ப்பு போன்ற நாவல்களை வாசிக்க கடந்த சில மாதங்களாக முயற்சி செய்தேன். கு.த மற்றும்  idiot இரண்டும் சொல்லி வைத்தார் போல 300 பக்கங்கள் தாண்டியதும் losing track  என்று சொல்வது நிகழ்ந்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127315/

ஒரே ஆசிரியரை வாசித்தல்

அன்புள்ள ஜெயமோகன், தங்களை தினமும் தவறாமல் வாசிப்பவர்களில் நானும் ஒருவன். சில வருடங்கள் முன், என் வாசிப்பு பாலகுமாரன் மற்றும் சுஜாதாவை கடக்க முடியாமல் (முயலாமல்),  அதே சமயம்  அவர்களின் போதாமையை உணர்ந்தவண்ணமும் தவித்தவேளை, என் நண்பன் ஒருவன் மூலம் உங்களை அறிய நேர்கையில், உங்களின் மேல் காரணமற்ற  வெறுப்பு, விலக்கத்துடன் தங்கள் படைப்புகளை தவிர்த்தேன். பின் ஒருநாள், விஷ்ணுபுரத்திற்குள் நுழைந்த பின் இன்றுவரை உங்கள் எழுத்துக்களை முடிந்தவரை பின் தொடர்கிறேன். இலக்கியம், ஆன்மீகம், வரலாறு, உலகியல், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127082/

செட்டி நாட்டு மருமகள் மான்மியம்

செட்டிநாட்டு மாமியார் மான்மியம்     செட்டிநாட்டு மாமியாருக்கு மருமகள் சொல்லும் பதில். இந்த இருதரப்புக்கும் நடுவே ஒரு வாயில்லாப்பூச்சி வாழ்ந்துகொண்டிருக்கிறது. அதற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். வேறென்ன?   செட்டிநாட்டு மருமகள் வாக்கு   கண்ணதாசன்   அவ கெடக்கா சூப்பனகை அவ மொகத்தே யாரு பாத்தா? அவுக மொகம் பாத்து அடியெடுத்து வச்சேன் நான் பத்து வராகன் பணங்கொடுத்தார் எங்களய்யா எத்தனைபேர் சீதனமா இவ்வளவு கண்டவுக? ராமாயணத்திலயும் ராமனுக்கு சீதைவந்தா சீதனமா இவ்வளவு சேத்துவச்சா கொண்டுவந்தா? கப்பலிலே ஏத்திவச்சா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8514/

செட்டி நாட்டு மாமியார் மான்மியம்

‘நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’ கண்ணதாசன் கவிதைகளில் என்னைக்கவர்ந்த கவிதைகளில் ஒன்று இது. இத்தகைய மரபுக்கவிதைகளில் நுண் அர்த்தங்களும் ஆழ்பிரதிகளும் இல்லை. நேரடியானவை. இவற்றில் உள்ள சரளமான மொழியோட்டமே முதன்மையான சுவை. இந்தக்கவிதையில் மண்ணின் அடையாளம் உள்ளது. கவிஞரின் அபாரமான நகைச்சுவை உணர்ச்சி உள்ளது. அந்த மாமியாரின் மாய்மாலமெல்லாம் சொற்களிலேயே வெளிப்படுகிறது. கவிமணியின் நாஞ்சில்நாட்டு மருமக்கள் வழி மான்மியத்தை முன்னுதாரணமாகக் கொண்டு கவிஞர் இதை எழுதியிருக்கிறார்   செட்டிநாட்டு மாமியார் வாக்கு கண்ணதாசன்   நல்லாத்தான் சொன்னாரு நாராயணச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8512/

Older posts «