Category Archive: வாசகர் கடிதம்

சிவம் ,அனலுக்குமேல் -கடிதங்கள்

 சிவம் [சிறுகதை] அன்புள்ள ஜெ, நலம்தானே? புனைவுக்களியாட்டில் எனக்கு பெரிய அழுத்தத்தை அளித்த கதை சிவம். எனக்கு சடங்குகளில் எந்த நம்பிக்கையும் இருந்ததில்லை. நான் சைவன் என்றாலும்கூட. என் அப்பா இறந்தபோது அம்மா காசியில் சடங்கு செய்யவேண்டும் என்று சொன்னார். நான் செய்யவில்லை. எனக்கு இஷ்டமில்லை என்று சொன்னேன். அம்மாவும் மறைந்துவிட்டார்கள் ஆனால் எட்டு வருடம் கழித்து வேறொரு விஷயமாக காசி செல்லவேண்டியிருந்தது. காசியில் கங்கை கரையில் நின்றிருந்தேன். என்னுடன் வந்தவர்கள் கீழே சடங்குகளைச் செய்துகொண்டிருந்தார்கள். நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/132028/

வாசகர்களின் கேள்வியின் தரம்

அன்புள்ள ஜெமோ, தினமும் காலையின் முதல் அகவல், தங்களின் பதிவுகளை வாசிப்பதுதான். தினசரி தங்கள் வாசகர்களின் கேள்வியும் தங்களின் பதிலும் படித்துவந்துள்ளேன். பலவருடமாக பதில் எழுதும் உங்களுக்கு காலம் மாற மாற வாசகர்களின் கேள்வியின் தரம் எவ்வாறாக உள்ளது? தங்களின் அவதானிப்பை தெறிந்துகொள்ள விருப்பம். மிக்க நன்றி. பேரன்புடன் ரகுநாத் பெங்களூரு *** அன்புள்ள ரகு, கேள்விகள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. அதற்கு முதன்மையான தூண்டுதல் நான் மறுமொழி அளிக்கிறேன் என்பது. ஒவ்வொரு தலைமுறையிலும் ஒருசிலரே அதைச் செய்திருக்கின்றனர். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130012/

நிழல்காகம்,ஆகாயம்- கடிதங்கள்

நிழல்காகம்[சிறுகதை] அன்புள்ள ஜெ நிழற்காகம் கதையை வாசித்தேன். அந்தக்கதையை நான் மிகமிக தனிப்பட்ட முறையிலேதான் வாசித்தேன். என் வாசிப்பு சரியாக இருக்கும என்று தெரியவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு நான் ஓர் அலுவலகத்தில் வேலைபார்த்தேன். குடும்பச்சூழ்நிலை மிகமோசம். உடம்புசரியில்லாத அம்மா, தம்பிகள். என் வேலைதான் ஆதாரம். அதை தெரிந்துகொண்டு ஒருவன் என்னை வற்புறுத்தினான். பலசிக்கல்களில் மாட்டவிட்டான். கடைசியில் நான் வளைந்துகொடுக்கவேண்டியிருந்தது. இல்லாவிட்டால் பட்டினி கிடந்திருப்பேன். ஆனால் அதைவிட உலகம் தெரியவில்லை. தைரியம் இல்லை. நான் அவனுடைய சூழ்ச்சியால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131966/

கூடு, காக்காய்ப்பொன் – கடிதங்கள்

காக்காய்ப்பொன் [சிறுகதை] அன்புள்ள ஜெ காக்காய்ப்பொன் கதையை வாசித்தேன். என் தியான வகுப்பில் நண்பர்களுக்கு அந்தக்கதையைச் சொன்னேன். பொதுவாக துறவு, ஆன்மீக வாழ்க்கை பற்றிய கதைகள் நிறையவே உண்டு. அவை எல்லாமே மூன்று வகை. ஒன்று முதிர்ச்சி இல்லாமல் துறவுக்குப் போனதைப்பற்றியும் அதிலிருந்து மீண்டதைப்பற்றியும். புதுமைப்பித்தனின் சித்தி அப்படிப்பட்ட ஒரு கதை இரண்டாம் வகை கதைகள் துறவில் ஒரு சின்ன தவறு செய்தாலும் அனைத்துமே இல்லாமலாவதைப் பற்றி. டால்ஸ்டாயின் ஃபாதர் செர்கியஸ் அப்படிப்பட்ட கதை. மூன்றாம்வகை கதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131977/

இணைவு,தேனீ- கடிதங்கள்

தேனீ [சிறுகதை] அன்புள்ள ஜெ தேனீ கதையின் எளிமை என்னை ஆட்கொண்டது. அதிலுள்ள கவித்துவம் இயல்பாக உருவாகி வந்திருக்கிறது. தேனிக்கு தேனில்தான் பிறப்பு சாவு ரெண்டுமே. அதற்கு தேன் சேகரிப்பது தவிர ஒன்றுமே தெரியாது. அதைப்போன்ற ஒரு தேனீவாழ்க்கை கொண்டவர் ஆசாரி. ஏக்கமே தவமாகச் செய்தவர் என்ற வரி என்னை உருகவைத்துவிட்டது டி.விஜயகுமார் *** வணக்கம் ஜெ தேனீ கதையை வாசித்தேன். இசை, தேன், பொன் இது மூன்றும் காற்றில் மண்ணில் எனக் கனிந்து தித்திப்பின் வெவ்வேறு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131850/

நிழல்காகம், இணைவு – கடிதங்கள்

கூடு [சிறுகதை] அன்புள்ள ஜெ நலம்தானே? நானும் நலமே. கூடுகதைபற்றி நிறையவே எழுதிவிட்டர்கள். உண்மையில் இவ்வளவு எழுதப்பட்டபின் கதை நீர்த்துவிடுமா என்ற சந்தேகம் எனக்கு உண்டு. இந்தச் சந்தேகம் முன்பு அறம் வரிசை கதைகளை வாசித்தபோது எழுந்தது உண்டு. அந்தக்கதைகளைப்போல அத்தனை பேசப்பட்ட கதைகளே இல்லை. வெவ்வேறு வடிவில் அந்தக்கதைகள் தமிழில் உள்ளன. இந்த தலைமுறையில் மிக அதிகமாகப் படிக்கப்பட்ட கதைகள் அறம் கதைகள்தான். ’ ஆனால் ஏழெட்டு மாசம் முன்பு அந்தக்கதைகளை திரும்ப வாசித்த்போது மிகமிக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131972/

உலகெலாம், லாசர்- கடிதங்கள்

 உலகெலாம் [சிறுகதை] அன்புள்ள ஜெ, நலம்தானே? நானும் நலமே. உலகெலாம் என்னும் கதையை வாசிக்கும்போது அறிவியலின் ஆன்மிகமா என்ற எண்ணம் ஏற்பட்டது. அறிவியலையும் ஆன்மிகத்தையும் இணைப்பவர்கள் செய்யும் சில விஷயங்கள் உண்டு. அவர்கள் அறிவியல் ஆன்மிகத்தை endorse செய்கிறது என்று எழுதுவார்கள். அறிவியல் ஆன்மிகத்திற்குச் சான்று கிடையாது. அதன் வேலை அது அல்ல. ஆன்மிகம் வேறு ஒரு அறிதல். அது என்னவென்று எனக்கு ஒரு புரிதல் உள்ளது. நமக்கு அறியக்கிடைக்கும் ஒரு துளியில் நம்மை முழுசாக ஈடுபடுத்திகொண்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131814/

ராஜன்,தேனீ- கடிதங்கள்

தேனீ [சிறுகதை] அன்புள்ள ஜெ என் அப்பா திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளை அவர்களின் ரசிகர். ஏராளமான செய்திகளைச் சொல்லிக்கொண்டிருப்பார். அவருடையது அசுரசாதகம். நாதஸ்வரம் என்பது அசுணப்பட்சியின் பாட்டு என்பார். அசுணப்பட்சி யானையை கையால் தூக்கிக்கொண்டு பறக்கும் அளவுக்கு பெரியது. அதன் பாட்டு. அப்படி வாசிக்கவேண்டும் என்றால் உடம்பில் இருந்து ஏழு மூச்சுகளும் நாதஸ்வரத்தில் வரவேண்டும். ‘பிராணன் துடிக்கிற சங்கீதம்’ என்று சொல்வார் இன்றைக்கு யோசிக்கும்போது ஒன்று தோன்றுகிறது. இன்றைக்கு சங்கீதம் மலிந்துவிட்டது. ஏராளமாக கிடைக்கிறது. ஆகவே ஜூனியர் வயதில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131848/

கதைகளைப் பற்றி…- கடிதங்கள்

அன்புள்ள ஜெ இந்தக்கதைகளை நான் தொடர்ந்து வாசித்துக்கொண்டு வந்தேன். நான் இலக்கியம் வாசிப்பது என் வாழ்க்கையை நுணுக்கமாகப் புரிந்துகொள்வதற்காக மட்டும்தான். இலக்கியத்தில் இருந்து எனக்கு அழகனுபவம் வேண்டும். வாழ்க்கை தரிசனம் வேண்டும். ஆகவே இலக்கிய சர்க்கஸ்களில் எனக்கு இன்று பெரிய ஆர்வம் இல்லை. நான் வாசிக்க ஆரம்பித்ததே ஆங்கிலத்தில்தான். டெல்லியில் படித்தபோது அயன் ராண்ட் வழியாக இலக்கிய அறிமுகம். அதன்பின் லத்தீனமேரிக்க நாவல்கள். ஐரோப்பிய படைப்புக்கள். இன்றைக்கு ஃபேஷனபிளாக உள்ள எல்லா படைப்புக்களையும் வெறிகொண்டு வாசித்திருக்கிறேன். ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131816/

கூடு, பிறசண்டு – கடிதங்கள்

கூடு [சிறுகதை] அன்புள்ள ஜெ, கூடு சிறுகதை தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. என் வீடு புதுக்கோட்டை அருகே. அங்கே ஒரு கம்யூன் உண்டு. மெய்வழிசாலை என்று பெயர். என் தாத்தா அதனுடன் தொடர்புடையவர். அப்போது மெய்வழிச்சாலை ஆண்டவர் இருந்தார். அவர் எவர் என்பதே தெரியாது. பிறப்பால் முஸ்லீம். ஆனால் சித்தர். அவர் அதை உருவாக்கினார். அவர் காலகட்டத்தில் அது வளர்ந்து வளர்ந்து ஒரு பெரிய அமைப்பாக ஆகியது. பிறகு சுருங்கிச் சுருங்கி இன்றைக்கு கூடு நாவலில் வரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131791/

Older posts «