Category Archive: வாசகர் கடிதம்

காந்தி, இந்துத்துவம் – ஒரு கதை

அன்புள்ள ஜெ இன்று தற்செயலாக உங்களுடைய நீரும்நெருப்பும் என்ற கதையை வாசித்தேன். வெண்கடல் வரும்போதே அந்தக் கதையை வாசித்திருந்தேன். அது அறம் தொகுப்புக்குப் பின்னால் வந்தது. ஆகவே அறம்போலவே அது இருக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆகவே அதைப்பற்றிய ஓர் ஏமாற்றம் இருந்தது. அதோடு அன்று இணையத்தில் எழுதும் ஒரு சிலர் எதிர்மறையாக எழுதியிருந்தனர். அந்த எண்ணமும் எனக்குள் ஊடுருவியிருக்கலாம். அவர்களெல்லாம் சும்மா வெற்றுவேட்டுக்கள் என்று தெரிய எனக்கு மேலும் சில ஆண்டுகள் ஆகியது இப்போதுதான் வெண்கடலை வாசித்தேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129466

காதலைக் கடத்தல்

  அன்புள்ள ஜெயன் அவர்களுக்கு, நலமா? வீட்டில் அனைவரும் நலம் தானே? எங்கோ ஒரு மூலையில் உங்களின் கதைகளையும் நாவல்களையும் படித்து, அனுபவித்து, ரசித்து, தீவிர உணர்வெழுச்சியில் ஆட்பட்டுக்கொண்டிருக்கும் லட்சகணக்கான தீவிர வாசகர்களில் நானும் ஒருவன். 26 வயது. நல்ல வேலை. நல்ல நண்பர்கள். ஆனால், ஒரு இழந்த காதல். வாழ்வின் மிகவும் குழப்பமான கட்டத்தில் இருப்பது போல் இருக்கிறது. நான் தற்போது வாசித்துகொண்டிருக்கும் ‘இரவு’ நாவலும் சரி, என்னை மிகவும் பாதித்த ‘காடு’, ‘அனல்காற்று’ நாவலிலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21281

புதியவாசகர்கள் – கடிதங்கள்

எழுதுக! வணக்கம் ஐயா, நான் உங்களது வாசக குழந்தைகளுள் ஒருவன். கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கின்றேன். உங்கள் வலைப்பக்கத்தை ஒரு சில மாதங்களாக வாசித்து வருகின்றேன். பல முறை கடிதம் எழுத மனதால் முயன்று கைவிட்டுருக்கின்றேன். இன்று “எழுதுக!” பதிவை படித்தவுடன் எழுதுகின்றேன். எப்படி உங்கள் அறிமுகம் கிடைத்தென்று எனக்கு நினைவில்லை, ஆனால் என் வாழ்வின் சிறந்த தருணங்களுள் அது ஒன்றாக அமைந்தது என்பது மிகையற்ற உண்மை.நான் மிக குறைவான வாசிப்பை உடையவன்,எனக்கு இலக்கியம் பற்றி ஒன்றும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119521

மரபைக் கண்டடைதல் – கடிதங்கள்

மரபைக் கண்டடைதல் அன்புள்ள ஜெ எந்த மரபை வரித்துக்கொள்வது என்ற கோணத்தில் நானும் சிந்திக்காத நாள் இல்லை. நான் வாட்டிக்கானின் மாபெரும் கலைக்கூடத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது இந்த மரபு என்னுடையதும் இல்லையா என்று ஏங்கினேன். இன்னொரு மண்ணில் பிறந்திருப்பதனால் நான் இதை என்னுடையது அல்ல என்று நினைக்கவேண்டுமா என எண்ணினேன். அதற்கான பதிலை அளித்திருக்கிறீர்கள். எல்லா மகத்தான மானுட சாதனைகளும் நம்முடையதே என்று எண்ணும் ஒரு மனவிரிவு நமக்குத்தேவை. நமக்குச் சங்கீதம்தான் முக்கியம் என்றால் உலகிலுள்ள எல்லா சங்கீதமும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119599

வெள்ளையானை – கடிதம்

  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, என் பெயர் சதிஷ்வரன். வெள்ளையானை நாவல் பற்றி YouTubeல் பேசியிருந்தேன்( https://youtu.be/cJqFxS5rpek). நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் அதைப் பகிர்ந்திருந்ததை இப்பொழுதுதான் கவனித்தேன். மிகவும் நன்றி. உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன். வெள்ளையானை எனக்கு மிகப்பெரிய திறப்பாக இருந்த புத்தகம். குறிப்பாக இந்தியா வரலாற்றைப்பற்றித் தெரிந்துகொள்ள பெரிய ஊக்கமாக அமைந்தது. எங்கிருந்து துவங்குவது என்ற குழப்பத்தில் இருந்தபோது உங்கள் வலைத்தளமே மீண்டும் உதவியது. அதில் வெள்ளையானை பற்றிய சில பதிவுகளைப் படித்துக் கொண்டிருக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119370

படைப்புமுகமும் பாலியல்முகமும் – கடிதங்கள்

படைப்பு முகமும் பாலியல் முகமும் அன்புள்ள ஜெ அவர்களுக்கு நலமாக இருக்கிறீர்கள் அல்லவா? நேற்று உங்கள் தளத்தில் எஸ் என்ற இளைஞர் எழுதிய கடிதத்தை வாசித்தேன். என்ன ஒரு நடை. மொழிக்கூர்மை, புனைவுணர்வுள்ள கூறுமுறை, கச்சிதமான ஒழுக்கில் ஒன்றின்பின் ஒன்றென விழுந்த சொற்றொடர்கள், அனைத்துக்கும் மேலாக அக்கடிதம் வழியாக தெள்ளத்தெளிவாக கூடி வந்த தனி ஆளுமை. ஒரு புனைவெழுத்தாளருக்குறியதென இருந்தது. ‘இலக்கியம் எனக்கு வாழ்வதற்கான நம்பிக்கையை கொடுக்கவில்லை, வாழ்வதற்கான ஆசைய கொடுத்தது,’ என்கிறார். இலக்கியத்துக்கும் வாழ்க்கைகுமான உறவை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119366

உச்சவழுவும் பிழையும்

உச்சவழு வாங்க ஜெயமோகன் சிறுகதைகள் வாங்க ஜெயமோகன் சிறுகதைகள் மின்னூல் வாங்க அன்பின் ஜெ, நேற்று தங்களின் தளத்தில் “உச்சவழு” சிறுகதையை படிக்க நேர்ந்தது. என் வாசிப்பாக நான் கண்டுகொண்டவை இவை. அவனது அன்னை ஒரு கருஞ்சுழி. அனைத்தையும் வாரி தன்னுள் இழுத்துக்கொள்ளும் கருஞ்சுழி. ஆனால் அச்சுழி தன் மகனை மட்டும் விட்டுவைத்துவிட்டது. முதலில் அவளைக் காணாமல் இவன் மறுத்துவிடுகிறான். அவன் மீண்டும் தன் அன்னையை இவ்வாறு அடைகிறான். கடைசியில் தந்தத்தை நீட்டி தரையை நுகரும் அந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119140

காடு – கடிதம்

காடு அமேசானில் வாங்க காடு வாங்க அன்புள்ள ஜெ,வணக்கம். இது எனக்கு ஜெயமோகனின் நான்காவது நாவல்.முதலில் வெள்ளை யானை பிறகு அறம்,ரப்பர் அடுத்து இதோ காடு.முதல் முறை காடு வாசித்தபோது ஒன்றிரண்டு அத்தியாயங்களாக நின்று நிதானமாக வாசித்து, பின்பு வாசித்தவரை கொஞ்ச நேரம் அசை போட்டு அசை போட்டுத்தான் அடுத்த நகர்வு என்றுதான் வாசிக்க முடிந்தது.  நீங்கள் அடிக்கடி சொல்வது போல் வாசக இடைவெளி கள் மிகுந்த நாவல்.வாசித்து முடித்ததும் அதே சூட்டோடு மறு படியும் வாசிக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119143

பங்கர் ராய் – கடிதங்கள்

பங்கர் ராய் எனும் வெறும் பாதக் கல்லூரி – பாலா பங்கர் ராய் அன்புள்ள ஜெயமோகன், பங்கர் ராய் குறித்து பாலா எழுதிய கட்டுரையை வாசித்தேன். ஐந்து ஆண்டுகளாக வாசித்து வரும் வெண்முரசு இந்திய நிலத்தில் தங்களை உணர்ந்து துளித்துளியாய்த் திரட்டிக் கொண்டு பேரலைகளாக எழுந்து மானுடத்துக்கு மகத்தான பங்களிப்பை ஆற்றிய பல்வேறு மக்கள் திரள்களைப் பற்றிய உயிரோட்டமான சித்திரத்தை அளித்து வருகிறது. ஒரு நல்லரசு மக்களைப் பயிற்றுவிக்கும். மக்களுக்கு வாழ்க்கைக்கல்வி கிடைக்க வேண்டும் என நினைக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119169

பட்டி நாயும் பாட்டுநாயும்

நாய் பாடும் பாடல் நலமாக வேண்டும் அன்பின் ஜெ.. பட்டி படித்தேன். கடிதங்களும்.. சமவெளிக்கு வந்து கொண்டிருக்கிறீர்கள்..இதோ என் பங்குக்கு எங்களூர்ச் செய்தி.. செய்தித் தாள்களில்,  agony aunt என்னும் ஒரு பத்தி உண்டு. அதில் உங்களது அந்தரங்கப் பிரச்சினைக்கு, கடிதம் எழுதித் தீர்வு காண முயலலாம். அப்படி ஒரு கடிதம் – நைஜீரியத் தினசரி ஒன்றில் வந்தது. கேள்வி: அன்புள்ள சகோதரி டோலெப்போ, நான் இபேயில் குடியிருக்கிறேன். திருமணமாகிப் பதினேழு வருடங்களாகின்றன. எனக்கும் என் மனைவிக்கும் கருத்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119134

Older posts «