Category Archive: மொழி

சூழும் இருள்

வணக்கம், நான் உங்களின் நெடுநாள் வாசகன். ஒரு முறை 2 நிமிடம் நேரிலும் பேசியிருக்கிறேன். பார்த்த போது என்ன பேசுவது என்று தெரியாமல் பெயர் கூறி அறிமுகம் செய்துகொண்டு தொடங்கியவுடன் நீங்கள் என் பெயரை நினைவிலிருந்து “எங்கோ கேள்விப்பட்டிருக்கேனே?” என்றீர்கள். அத்துடன் மேற்கொண்டு வாயடைத்துப்போனேன். பின்னர் “என் பெயரை செம்பதிப்பில் சில முறை எழுதி கையெழுத்திட்டிருக்கிறீர்கள், அதனால் நினைவிலிருந்திருக்கலாம்” என்றேன். புன்னகைத்தீர்கள். அன்று உங்களின் உரை நான் பலமுறை உங்களிடமிருந்து கேட்டதே, ஆனாலும் மிகவும் ஒன்றி மறுமுறையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80897

பிராமணர்களின் தமிழ்

அன்புள்ள ஜெயமோகன் ஐயா, ஒரு வருடத்திற்கு முன்பு வரை உங்கள் பெயரைக் கூட கேட்டதில்லை. நான் முதன்முதலில் படித்த உங்கள் கட்டுரை, பிராமணர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்று பத்ரி சேஷாத்ரி எழுதிய கட்டுரையில் இருக்கும் உண்மை பற்றி நீங்கள் அலசிய கட்டுரை. நீங்கள் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் நான்கு வகை எழுத்தாளர்களில், சில காலம் முன்பு வரை முதல் வகை எழுத்தாளர்கள் எழுதிய படைப்புக்களையும், ராமகிருஷ்ணா மடத்தின் பதிப்புக்களில் சிலவற்றையும் தவிர வேறு எதையும் படித்ததில்லை. இப்பொழுது மற்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80340

கசாக்கின் இதிகாசம்- சொற்கள்

ஆசிரியருக்கு, தற்போது யூமா வாசுகியின் மொழிபெயர்ப்பில் ஒ வி விஜயனின் மலையாள நாவலான கஸாக்குளின் இதிகாசம் (காலச் சுவடு பதிப்பகம்) படித்து முடித்தேன். அற்புதமான நாவல், மிக செறிவான மொழிபெயர்ப்பு. இது பல வகைகளில் மார்குவஸ்சின் 100 years of solitude ஐ நினைவு படுத்தியது. அனால் இது அதற்கு 20 ஆண்டுகள் முன்பே எழுதப் பட்டது. எனது ரசனையில் இது 100 ஆண்டு காலத் தனிமையை விட ஒரு படிமேல் நிற்கிறது. இதில் உள்ள ரசனை, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70917

ஆண்பால் விகுதிகள் -ஒரு கடிதம்

நட்புடன் ஜெயமோகன் அவர்களுக்கு… வணக்கம் நலமாக இருக்கின்றீர்கள் என நம்புகின்றேன். இவ்வாறான ஒரு கடிதத்தை முன்பும் உங்களுக்கு எழுதி பின்பு அதைக் கட்டுரையாக்கி எனது வலைப்பதிவில் பதிவு செய்தேன். ஆனால் இம் முறை உங்களுக்கு எழுதுவது என்றே தீர்மானித்தேன். இதற்கு ஒரு பொதுநலமே காரணமாகும். பலர் பிரபல்யங்களைக் கண்டவுடன் ஓடி ஓடி அவர்களுடன் நின்று படம் எடுப்பார்கள். ஆனால் அவர்களின் பின்னால் அவர்களைப் பற்றி மிக மோசமாக விமர்சனம் செய்வார்கள். இவ்வாறு செய்பவர்களுடன் எனக்கு உடன்பாடு இல்லை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70732

மலையாளம் கற்பது

அன்புள்ள ஜெயமேகனுக்கு, எனக்கு மலையாளம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று வெகுநாளாய் ஆசை உண்டு. இந்திய மொழிகளில் தமிழைத் தவிர வேறெதுவும் தெரியாமல் இருபத்திரண்டு வருஷங்கள் முடியப் போகிறது என்பதை நினைக்க வெட்கமாகவும் இருக்கிறது. கன்னியாகுமரியில் பிறந்த புண்ணியத்தால் மலையாளம் ஓரளவுக்குத் தடுமாறியேனும் பேசுகிறேன்; புரிந்து கொள்கிறேன். கல்லூரியில் மலையாளநண்பர்களிடம் மலையாளம் எழுத வாசிக்க பயன்படும் புத்தகங்களைப் பற்றிக் கேட்கும் போது அவர்களுக்கும் தெரியவில்லை. 30 நாட்களில் மலையாளம் என்கிற புத்தகத்தை வாங்கினேன். ஆனால் அதில் மலையாளத்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69891

சந்தமும் மொழியும்

அன்புள்ள ஜெமோ தொடர்ச்சியாக நீலம் வாசித்துவந்தேன். எனக்கு இந்த மாதிரியான மன எழுச்சிகளிலே நம்பிக்கை இருந்தது கிடையாது. நான் வாசித்ததெல்லாம் வேறுவகையான எழுத்துக்கள் தான். தொடர்ந்து இதை வாசிப்பேனா என்றெல்லாம் சந்தேகம் இருந்தது. கிருஷ்ணன் ராதை எல்லாம் எனக்கு பெரிசாக கவரவில்லை. மத அனுபவம் என்பது மூளையின் ஒரு தனிச்சிறப்பான ’சர்க்யூட்’ மட்டும்தான். ‘ செல்ஃப் ஹிப்னாட்டிசம்’ மாதிரி அது. நம்மை நாமே தூண்டிவிட்டுக்கொண்டு அதை அடையமுடியும். ஒரு ஊமத்தை வேர் இருந்தாலே போதும். ’ஹலூஸினேஷன்ஸ்’ என்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62390

அறிவியலும் அறிவியக்கமும்- தமிழ், சம்ஸ்கிருதம்

திரு செமோ, தமிழறிஞர்கள் எங்கே என்ற கட்டுரையினை வாசித்தேன். சமஸ்கிருதம் அறிவியலுக்குரிய மொழி என்று அதிலே சொல்லியிருந்தீர்கள். உங்களுக்கே கேவலமாக இல்லையா? சம்ஸ்கிருதத்திலே உள்ள அறிவியல் என்ன என்று கொஞ்சம் சொல்லித்தர முடியுமா? சமஸ்கிருதத்தை இனிமேல் அறிவியலுக்கு வைத்துக்கொள்ளலாமா? உங்கள் அறிவுத்திறனை பற்றி ஆச்சரியம் கொள்கிறேன் மனோ சந்திரா. அன்புள்ள மனோ, நீங்கள் சுட்டிய கட்டுரையில் உள்ள நான் எழுதிய வரி இதுதான். ‘சம்ஸ்கிருதம் அறிவியக்கத்துக்குரிய மொழி’. அறிவியக்கம், அறிவியல் இரு சொற்களுக்கும் வேறுபாடு தெரியாத நீங்களெல்லாம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61765

தமிழறிஞர்கள் எங்கே?

பத்து நாட்களுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு தமிழ் எழுத்தாளர் ‘சம்ஸ்கிருதம் அழிந்துவிட்டது’ என குதூகலிப்பதை வாசிக்கிறேன். சம்ஸ்கிருதம் அறிவியக்கத்துக்குரிய மொழி. அதற்காகவே ஆக்கப்பட்டது. மக்கள் மொழியான தமிழில் அறிவியக்கம் ஒன்று ஈராயிரமாண்டுகளாக நிகழ்ந்து வந்திருக்கிறது. இந்த தலைமுறையில் அது அழிந்துவருகிறது. இன்னும் ஒரு தலைமுறையில் அது இருக்குமா என்பதே ஐயத்துக்குரியது. அதைப்பற்றியும் எவராவது கவலைகொண்டால் நல்லது. இன்றைய போக்கில் போனால் நாளை தமிழ் வெறும் பேச்சுமொழியாக மட்டுமே சுருங்கிவிட வாய்ப்பதிகம். காரணம் இன்று தமிழ்தெரிந்தவர்கள் குறைந்து வருகிறார்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61395

சம்ஸ்கிருதத்தின் அழிவு?

அடடா மோடி அரசு சமஸ்கிருதவாரம் கொண்டாட உத்தரவிட்டதன் காரணம் இதுதானா! நினைவுதினக்கொண்டாட்டம். இறப்பை நினைவுகூரும் வாரத்தைக் கூடவா இந்த தமிழ் தேசிய பாஸிசவாதிகள் எதிர்க்கிறார்கள்.என்ன ஒரு காட்டிமிராண்டித்தனம்.சே.. In the memorable year of 1857, a Gujarati poet, Dalpatram Dahyabhai, was the first to speak of the death of Sanskrit: All the feasts and great donations King Bhoja gave the Brahmans were obsequies he …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/60337

இ.எம்.எஸ்ஸும் தமிழும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு சமீபத்தில் ஒரு வலைதளத்தில் சில தமிழ் தேசியவாதிகளின் பதிவை பார்த்தேன். அதில் மலையாள மொழி பற்றி குறிப்பிட்டிருந்தபோது சுதந்திரத்திற்கு பின் ஆட்சி பொறுப்பேற்ற ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமயிலான கம்யூனிஸ்ட் அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு மலையாள மொழியை சமஸ்கிருத மயமாக்கியதாக கூறியிருந்தார்கள். அதற்கு காரணம் ஈ.எம்.எஸ் ஒரு ஆரிய பார்பனர் என்பதுதான். இதுபோன்ற உள் நோக்கம் ஏதேனும் அவருக்கு இருந்ததா? இதன் முழு பின்ணனி என்ன? சிவகுமார் சென்னை அன்புள்ள சிவக்குமார், நானும் யாரோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57014

Older posts «

» Newer posts