Category Archive: மொழி

“கெரகம்!”

உயிர் எழுத்து ஜூலை 2017 இதழில் நஞ்சுண்டன் பிழைதிருத்தல், பிரதிமேம்படுத்துதல் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.  ‘கால்திருத்தி’ என்னும் தலைப்பில். பொதுவாக இந்த க்ரியா வகை ‘பிரதிமேம்படுத்தல்’ பற்றி எனக்கு ஆழமான சந்தேகம் உண்டு. வாழ்க்கையையோ இலக்கியத்தையோ அறியாமல், மொழியின் விதிகளை இயந்திரத்தனமாகப்போட்டுச் செய்யப்படும் இத்தகைய ’மேம்படுத்தல்கள்’ ஒரு இலக்கியப்பிரதியை சித்திரவதை செய்பவை. மொழியின் சாவி தங்களிடம் இருப்பதாகவும் இமையம், பூமணி போன்ற நாட்டுப்புற கலைஞர்களை தங்கள் மெய்ஞானம் மூலம் தாங்கள் உயர்கலைஞர்களாக ஆக்குவதாகவும் ஒரு பாவனை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/100271/

பார்ப்பனன் என்னும் சொல்

அன்புள்ள ஜெயமோகன், ‘பிராமணர்களின் சாதிவெறி’ என்ற உங்கள் பதிவில் உள்ள இந்த வரி முக்கியமானது, “ஆனால் பெரியாரிய மூர்க்கம் என்ன செய்கிறது? அவர்கள் அத்தனைபேரையும் அப்படியே பழைமைவாதத் தரப்பாக பார்த்து கண்மூடித்தனமாக வசைபாடுகிறது. அவர்களில் ஆக நவீனமானவர்களைக்கூட அது ‘பார்ப்பனர்கள்’ என இழிவுசெய்கிறது.” சுபவீ ‘பார்ப்பான்’ என்பது வசைச் சொல் அல்ல என்கிறார். உங்கள் கட்டுரையில் நீங்கள் ‘பிராமணர்கள்’ என்றே எழுதியுள்ளீர்கள். மேலும், திராவிட இயக்கத்தினரின்  பார்வையில் வந்து விழும் வசைகளைச் சொல்லும் போது ‘பார்ப்பான்’ என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/99998/

தமிழ் ஆங்கில எழுத்துவடிவம்- ஒரு கேள்வி

  ஜெமோ, ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன என்று நீங்கள் கட்டுரை எழுதினீர்கள். இன்றைக்கு ஒரு பெண் ஆங்கில எழுத்துருவில் கடிதம் எழுதியதை ஒரு பெரிய சரிவாகக் கண்டு கடிதம் வெளியிட்டிருக்கிறீர்கள். முன்னால் எழுதியதை மற்றவர்கள் மறந்திருப்பார்கள் என்று நம்புகிறீர்களா? ஜெகன்.   அன்புள்ள ஜெகன், பொதுவாக நம்மவர்களின் மொண்ணைத்தனத்துடன் மோதுவதே என்னுடைய செயல்பாடுகளில் பாதியாக இருக்கிறது. சம்பந்தமில்லாமல் எதையாவது ‘முரண்பாட்டைக்’ கண்டுபிடித்து அதை ஒரு பெரிய தரப்பாக முன்வைப்பது இவர்களின் வழக்கம். உண்மையான பிரச்சினை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88589/

வாயுள்ள ஊமைகள்

  அன்புள்ள ஜெமோ சமீபத்தில் சேலம் அருகே ஓர் இளம்பெண் தற்கொலைசெய்துகொண்ட செய்தி நாளிதழ்களில் வெளிவந்தது. அந்தப்பெண் ஃபேஸ்புக்கில் இருந்திருக்கிறாள். நிறையப்புகைப்படங்களை வெவ்வேறு கோணத்தில் வெளியிட்டியிருக்கிறாள். அதை ஒரு கயவன் மார்ஃபிங் செய்து இணையத்தில் ஏற்றியிருக்கிறான். போலீஸுல் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கைஎடுக்கவில்லை. மீண்டும் அதே கயவன் அப்படியே செய்யவே அவள் தற்கொலைசெய்துகொண்டாள். நிற்க, இது அந்தக்குழந்தை எழுதிய கடிதம். அவள் இறந்தவிதம் மனதைப்பாதித்தது. ஆனால்  அவள் எழுதிய அந்தக்கடிதமும் மனதிலேயே ஓடிக்கொண்டிருந்தது. அந்தக்கடிதத்தை இணைத்திருக்கிறேன். அது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88557/

தமிழ் ஹிந்துவின் மொழி

  மியூனிச்சில் இருக்கிறேன். கிடைத்த சின்ன இடைவெளியில் தமிழ் ஹிந்து நாளிதழில் வெளிவந்த இந்தக்கட்டுரையை வாசித்தேன் அனேகமாக ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கலாம். தெளிவற்ற உரைநடையில் கோவையாக அமையாத சொற்றொடர்களுடன் எழுதப்பட்டுள்ளது. மிகச்சாதாரணமான செய்தி. ஆனால் ஒரு சட்டச்சூத்திரத்தை வாசிப்பதுபோல வாசிக்கவேண்டியிருக்கிறது. இது தமிழின் தலையெழுத்தாகவே மாறிவிட்டிருக்கிறது. இந்தியா டுடே தமிழில் மிக முக்கியமான இதழியல்வருகை. தமிழில் அதன் அறிவுத்தளப் பங்களிப்பும் முக்கியமானது. ஆனால் பொறுப்பற்ற மொழியாக்கத்தால் அது வாசகர்களை இழ்ந்து  நின்றுவிட்டது. இன்று அதன் வெற்றிடத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88551/

குலதெய்வங்கள் பேசும் மொழி

சமீபத்தில் ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தபோது அம்முக்குட்டி அத்தையைப்பார்த்தேன். நொந்துபோனவர்களாக தனியாக வெளியே அமர்ந்திருந்தார்கள். ‘என்ன அத்தை உள்ளே யாருமில்லையா?’ என்றேன். அத்தைக்கு வயது எண்பதுக்கும் மேல். வாழ்நாள் முழுக்க உறவுகளைத்தான் முக்கியமான விஷயமாக எண்ணிவந்திருக்கிறார்கள். திருமணம், பிரசவம், சண்டைகள், சமரசங்கள்,மரணம் ஆகியவையே வாழ்க்கை என ரத்தினச்சுருக்கமாக- ஆனால் சரியாக- புரிந்துவைத்திருக்கிறார்கள். ஆகவே அவற்றைப்பற்றி பேசவும் உறவினர்களைச் சந்திக்கவும் பெரிதும் விரும்புவார்கள். ‘என்ன சொல்ல? உள்ளே எல்லாரும் பேசும் மொழி எனக்குப்புரியவில்லை. நான் பேசினால் அவர்கள் சிரிக்கிறார்கள்’ என்றாள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36606/

தாய்மொழி என்னும் ஏமாற்றுவேலை

பதினைந்தாண்டுகளுக்கு முன்பு ஒருமுறை மேற்குமலைகளில்  ஒரு சூழியல்குழுவுடன் நடந்துகொண்டிருந்தேன். வழிகாட்டி அழைத்துச்சென்ற பளியர் தன்னுடன் வந்த இன்னொரு பளியரிடம் சரளமாகப்பேசிக்கொண்டிருந்தார். அது தமிழ் மலையாளம் இரண்டுபோலவும் இருந்தது, இரண்டும் இல்லை. வழிகாட்டிப்பளியர்பேசியது தமிழா என்று என்னுடன்வந்த நண்பருக்குச் சந்தேகம். அவர் கேரளதேசியம் அல்லது மலையாளதேசியம் பேசும் சிரியன் கிறிஸ்தவர். நண்பர் “நீங்கள் பேசுவது மலையாளமா தமிழா?” என்றார். “இல்லை ஐயா, பளியபாஷை” என்றார். நண்பர் சிறிய அதிர்ச்சியுடன் என்னைப்பார்த்துவிட்டு “பளியமொழி தமிழா இல்லை மலையாளமா?” என்றார். அவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87378/

யாகவா ஆயினும் நாகாக்க!

  தமிழக வரலாற்றாய்வில் ஆழமான பாய்ச்சல்களை பலர் நடாஅத்தி வருவதை நாமறிவோம். ஆய்வுக்கு தரவுகள் முறைமைகள் ஏதும் தேவையில்லை , ஆன்மீக உள்ளுணர்வின் வெளிச்சமே போதுமானது என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர். இது திராவிடச்சொல்லாராய்ச்சி என்றபேரில் நியூயார்க் அருங்காட்சியகத்திலேயே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது தொ.பரமசிவம்  அவர்கள் சொந்தப்பின்புலத்தை ஒட்டி எழுதிய அழகர்கோயில் குறித்த ஆய்வேடு தமிழில் ஓர் அரிய ஆவணம் என்பதே நான் அறிந்திருந்தது. அது தரவுகளும் முறைமையும் கொண்டது.  ஆனால் பிற்கால ஆய்வுகள் வழியாக அந்த அடிப்படைகளை அன்னார் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87317/

வெண்முரசும் பண்பாடும்

அன்பின் ஜெ எம்., வெண்முரசும் தனித்தமிழும் பதிவு பற்றி திரு ஆர். மாணிக்கவாசகம் எழுதியுள்ள கடிதத்தை நானும் வழிமொழிகிறேன். பழந் தமிழை தொல் தமிழை அதன் அத்தனை வளமான சொல்லாட்சிகளுடனும்,பண்பாட்டு அடையாளங்களுடனும்  மீட்டுக்கொண்டு வந்து நம் முன் படையலாக்கிக்கொண்டிருக்கும் காரணத்தினாலேயே வெண்முரசை நான் என் சென்னியில் சூடிக்கொள்கிறேன். அதன் கதை ஓட்டம் பாத்திர மனநுட்பங்கள் உள்மடிப்புக்கள் இவற்றிலெல்லாமும் பாவி மனம் பறி போனாலும் வெண்முரசின் தமிழே என்னைப் பரவசச்சிலிர்ப்புக்கு ஆளாக்கி ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. கொற்றவை காப்பியத்தில் பதச்சோறாக இருந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83999/

வெண்முரசும் தனித்தமிழும்

ஜெயமோகன் அவர்களுக்கு நான் இன்றைய புத்திலக்கியங்களை அதிகமாக வாசிப்பவன் அல்ல. இளமைக்காலத்தில் நா.பார்த்தசாரதியையும் ஜெயகாந்தனையும் விரும்பி வாசித்தேன். பள்ளிநாட்களில் மு.வ மனம்கவர்ந்த ஆசிரியராக இருந்தார். என் வாசிப்பு என்னை பண்படுத்தியது. என் தமிழ்ப்பற்று வாழ்க்கைக்கும் ஒரு பற்றுகோலாக இருந்தது. நீண்டநாட்களுக்குப்பின் நான் கதைபடிக்க ஆரம்பித்தது என் மகள் எனக்கு அளித்த யானைடாக்டர் என்னும் நூலில் இருந்துதான். அது எனக்கு ஒருபெரிய திறப்பாக இருந்தது. அதன் தமிழ்தான் என்னை மிகவும் கவர்ந்தது. தமிழை இப்படியெல்லாம் ஆளமுடியுமா என்ற நினைப்பு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83844/

Older posts «