Category Archive: முன்னுரை

நதிப்பெருக்கில்

சென்ற ஒருதலைமுறையாக நம் சிந்தனையில் ஒரு பெரிய சிக்கல் உருவாகியிருப்பதை நடராஜகுருவும் நித்ய சைதன்ய யதியும் பலமுறைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். சிந்தனைக்கு ஒரு தொடர்ச்சி உள்ளது. அது எளிய படிமங்களாக பழங்குடி வாழ்விலிருந்து எழுகிறது. பின்னர் சொல்வடிவமும் தர்க்கவடிவமும் பெறுகையில் தரிசனமும் தத்துவமும் ஆகிறது. அதன்பின் பிற தரிசனங்களுடனும் தத்துவங்களுடனும் உரையாடுகிறது. வாழ்க்கையின் பல்வேறு தருணங்களில் அன்றாட யதார்த்ததுடன் மோதுகிறது. விளைவாக வளர்சிதை மாற்றம் அடைந்து நம்மிடம் வந்துசேர்கிறது. நம்மிடமிருந்து வருங்காலம் நோக்கிச் செல்கிறது. ஆனால் சென்ற தலைமுறைமுதல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/94270

முக்குடையும் பீலியும்

2007ல் கிருஷ்ணன் உள்ளிட்ட ஈரோட்டு நண்பர்கள் அறிமுகமானபோது ஆண்டுக்கு இருமுறை ஈரோடு செல்லும் வழக்கமிருந்தது. அப்போது ஒருமுறை நண்பர்களுடன் இருசக்கரவண்டிகளில் விஜயமங்கலம், அரச்சலூர் உள்ளிட்ட சமணத்தலங்களுக்குச் சென்றிருந்தோம். இப்பகுதிகளில் எஞ்சியிருக்கும் ஓரிரு சமணர்களும் இந்துமதத்திற்கு மாறிவிட ஆலயங்கள் பெரும்பாலும் பூட்டியே கிடக்கின்றன. சில கோயில்களில் சமணதெய்வங்களுக்கு உள்ளூர் இந்துதெய்வங்களின் பெயர்களைச் சூட்டி வழிபடுவதும் நிகழ்கிறது அன்று சமணம் பற்றி நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். சமணத்தின் மையக்கொடை என்பது இந்தியா முழுக்க வணிகப்பாதைகளை உருவாக்கி ஒரு மாபெரும் குருதியோட்டத்தை அமைத்ததுதான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/94235

நடைதிறப்பு

இந்தியாவைப்பார்க்கும்பொருட்டு நாங்கள் கிளம்பியது 2008 செப்டெம்பரில். நண்பர் கிருஷ்ணன் பின்னர் சொன்னார், அந்தப்பயணத்தின் மிகப்புத்திசாலித்தனமான அம்சம் என்னவென்றால் அதற்கு இந்தியப்பயணம் என்று பெயரிட்டதுதான் என. நாங்கள் சென்றது ஈரோட்டிலிருந்து ஆந்திரம் வழியாக மத்யப்பிரதேசத்தைக் கடந்து காசிவரை. அப்படியே கயா வழியாக ஒரிசாவுக்குள் நுழைந்து விசாகப்பட்டினம் வந்து சென்னை வந்தோம். அதை இந்தியா என நம்பிக்கொண்டமை எங்களுக்கு மிகப்பெரிய மன எழுச்சியை அளித்தது. அந்த உத்வேகமே அப்பயணத்தை இன்றைக்கும் மறக்கமுடியாத அனுபவமாக ஆக்குகிறது. பின்னர் பலபயணங்கள். அதைவிடப்பெரிய பயணமாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/93739

வெய்யோனொளியில்…

கர்ணனைப்பற்றிய நாவல் இது.வெண்முரசு நாவல்களை நான் செவ்வியலின் வெவ்வேறு வடிவங்களாகவே உள்ளூர உருவகித்திருக்கிறேன். செவ்வியல் என்பது அனைத்துவகையான புனைவுவகைகளுக்கும் உள்ளே இடமளிப்பது. அதன் இயல்பே தொகுப்புத்தன்மைதான். அதற்குள் ஒருமையையும் ஒத்திசைவையும் அது அடையமுயல்கிறது. அதன் மையத்தரிசனத்தால் அதை நோக்கிச் செல்கிறது. வெய்யோன் இயல்பாகவே பரசுராமனின் கதையிலிருந்து தொடங்கியது எனக்கே புதிய திறப்பாக அமைந்தது. அன்னையென்றும் காதலி என்றும் துணைவி என்றும் பெண்மையால் அலைக்கழிக்கப்படும் கர்ணனின் சித்திரமாக அது விரிந்தது. பெருந்தன்மையால் தோற்றுக்கொண்டே செல்பவன் வென்று நின்றிருக்கும் பேரறத்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88601

ஒரு கலையின் வாழ்க்கைவரலாறு

  ஒரு கலையின் வரலாற்றை அதன் பொதுவாசகன் ஏன் அறிந்துகொள்ளவேண்டும் என்னும் கேள்வி ஒரு காலகட்டத்தில் எனக்கும் இருந்தது. அதை ஆய்வாளர்களும் இதழாளர்களும் அறிந்துகொண்டால்போதாதா? நம் முன் இருப்பது மொழியிலோ ஒலியிலோ காட்சியிலோ அமைக்கப்பட்ட ஒரு கலைவடிவம். அதன் மொழிபை மட்டும் நாம் அறிந்தால் போதாதா? ஒரு வகையில்பார்த்தால் போதும். மேலும் வரலாற்றைத் தகவல்களாக அறிந்துகொள்வதென்பது நம்மை கலையிலிருந்து பிரித்துவிடவும்கூடும். வெறுமே தகவல்களைக் கூவிக்கொண்டிருக்கக்கூடிய, கலையில் அதற்கு அப்பால் எதையுமே அறியமுடியாதவர்களை நாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்?   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87915

எத்தனை காலடித்தடங்கள்!

  22.4.2012ல் எனக்கு ஐம்பது வயதாகியது. திடீரென்று வாழ்க்கையின் அடுத்தகட்டத்திற்குச் சென்ற உணர்வு. அது ஒருபாவனைதான். மேலும் ஒரு இருபத்தைந்தாண்டுக்காலம் இருக்கலாமா என்று ஒரு கற்பனை. ஒரு சுயகிண்டல் புன்னகை. என் இணையதளத்தைத் திரும்பிப்பார்த்து மறைந்தவர்களைப்பற்றி நான் எழுதிய கட்டுரைகளை எடுத்து வாசித்தேன் நான் நினைவுகளை எழுதிக்கொண்டே இருந்திருக்கிறேன். எழுத்தாளனின் நினைவுகள் சிலகுறிப்பிட்ட இயல்புகள் கொண்டவை என்பதை வாசகர்கள் காணலாம். அவை துல்லியமான ஆளுமைச்சித்தரிப்பு கொண்டிருக்கும். முகபாவனைகள், சொற்கள், சூழல் , உணர்வுநிலைகள் எல்லாமே அழியாமல் அவனில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87726

ஜனநாயகச்சோதனைச்சாலையில் – முன்னுரை

  தினமலர் நாளிதழில் நான் அரசியல் பற்றிய தொடர்கட்டுரைகள் எழுதவேண்டும் என்று அதன் ஆசிரியர் கோரினார். நான் அன்றாட அரசியல் எழுதுவதில் ஆர்வமற்றவன் என்று சொன்னேன். அவர் நீங்கள் எதை வேண்டுமென்றாலும் எழுதலாம் என்றார். அவ்வாறுதான் ஜனநாயகத்தின் அடிப்படைகளைப்பற்றி மட்டுமே பேசும் இத்தொடரை ஆரம்பித்தேன் இது ஏற்கனவே அரசியலில் ஊறியவர்களுக்கான தொடர் அல்ல. அவர்களை எவராலும் மாற்றமுடியாது. வாக்களிக்க முன்வரும் இளையவாசகனுக்குரியது. அடிப்படைகள் சிலவற்றைச் சொல்லி இன்றைய தேர்தலரசியலை சற்று முதிர்ச்சியுடன் நோக்க அவனைப் பயிற்றுவிக்கும் நோக்கம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87395

கனவுகளின் அழிவின்மை: விஷ்ணுபுரம் நான்காம் பதிப்பின் முன்னுரை

விஷ்ணுபுரம் ஐந்தாம் பதிப்பை  கிழக்கு பிரசுரம் வெளியிடவிருக்கிறது. அதில் சேர்க்கப்பட்டுள்ள நாலாம் பதிப்பு [ஏழாம் அச்சு]க்கான முன்னுரை இது.  அட்டை ஓவியம் ஷன்முகவேல்   இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு என் ஆசிரியரான மலையாளக்கவிஞர் ஆற்றூர் ரவிவர்மாவுடன் ராமேஸ்வரம் பேராலயத்தைப் பார்த்துக்கொண்டு சென்றபோது அவர் சொன்னார். “இதுதான் கிளாஸிசம். இதைத் தவிர இன்னொரு உதாரணம் தேவையில்லை.” அவரது பரவத்தை நான் ஆச்சரியமாகப் பார்த்தேன். அவரது வயதும் எப்போதும் இருக்கும் முன்னாள் புரட்சியாளனின் கேலியும் எல்லாம் மறைந்துபோய் சிறுவனின் துள்ளலுடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87191

வாழும் கனவு: விஷ்ணுபுரம் மூன்றாம் பதிப்பின் முன்னுரை

விஷ்ணுபுரம் நாவலின் ஐந்தாம் பதிப்பை கிழக்கு பதிப்பகம் வெளியிடவிருக்கிறது. அதில் இணைக்கப்பட்டுள்ள மூன்றாம் பதிப்பின் முன்னுரை இது.  ஓவியம் ஷண்முகவேல்     விஷ்ணுபுரம்’ வெளிவந்து பத்து வருடங்கள் ஆகின்றன. இப்போது மூன்றாம் பதிப்பு வெளிவருகையில் இதை எழுதிய நாட்களும் பிரசுரிக்க எடுத்துக்கொண்ட பெருமுயற்சியும் நினைவில் கனவுபோல விரிகின்றன. கனவுபோலத்தான். ஏனெனில் இப்போது அவை நம்ப முடியாதவையாக மாறியுள்ளன. 1982 முதல் இந்த நாவலின் கருவை நான் சுமந்து அலைந்தேன். பல கோணங்களில் எழுதி மாற்றி எழுதி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87187

கனவுகளின் பரிணாமம்: விஷ்ணுபுரம் இரண்டாம் பதிப்பின் முன்னுரை

  விஷ்ணுபுரம் நாவலின் ஐந்தாம் பதிப்பு கிழக்கு பிரசுரமாக வெளிவருகிறது. அதன் இரண்டாம் பதிப்புக்கு [மூன்றாம் அச்சு]  நான் எழுதிய முன்னுரை அதில் சேர்க்கப்பட்டுள்ளது. அட்டை ஓவியம் ஷண்முகவேல்   விஷ்ணுபுரம் முதற்பதிப்பு வெளிவந்தபோது தமிழ் வாசகச்சூழல் சார்ந்து எனக்கு பல தயக்கங்கள் இருந்தன. விஷ்ணுபுரம் போன்ற உள்விரிவு நிரம்பிய, சிக்கலான பெரிய நாவல் இதற்குமுன் தமிழில் ஏதுமில்லை. பல்வேறு அறிவுத்துறைகளையும் நூல்களையும் தொட்டு வாசித்து விரித்தெடுக்கப்பட வேண்டிய நாவலும் பிறிது இருக்கவில்லை. எனவே, பல பகுதிகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87184

Older posts «

» Newer posts